விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை

மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஷ மாத்திரை தின்று தொழிலாளி தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு, கள்ளுக்கடை–மேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com