சென்னிமலையில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலையில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
Published on

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com