மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

ஈரோடு, டிச. 9-

ஈரோடு, சடையம்பாளையம் ரோடு, முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (66) தொழிலாளி.

கடந்த அக்டோபரில் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.

அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com