என் மலர்

  நீங்கள் தேடியது "சிவகிரி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 230 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
  • காசோலை மோசடி வழக்கு சம்பந்தமாக புகார் கொடுத்தவருக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

  சிவகிரி:

  மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சிவகிரியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார்.

  சமரச மையத்தில் கிரிமினல் வழக்குகள் சம்பந்தமாக மொத்தம் 230 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

  சிவில் வழக்குகள் சம்பந்தமாக 114 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

  காசோலை மோசடி வழக்கு சம்பந்தமாக புகார் கொடுத்தவருக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அபராதத் தொகையாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டது.

  மக்கள் நீதி மன்றத்தில் உறுப்பினர் வழக்கறிஞர் மருதப்பன், அரசு வழக்கறிஞர் பேட்ரிக் பாபு, நீதிமன்ற தலைமை எழுத்தர் கலாமணி, சிவகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கட சேகர், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
  • தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

  சிவகிரி:

  தென்மேற்கு பருவமழை முன் எச்சரிக்கை பாதுகாப்பு முன்னிட்டு வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் நிலைய அலுவலர் போக்குவரத்து பார்வதி நாதன், சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா மற்றும் குழுவினர் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

  மேலும் மலைக்கோவில் நீர்நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் பரமசிவன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடசேகர், அலுவலகர்கள் மற்றும் பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  • மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார்.

  சிவகிரி:

  சிவகிரி நகர காங்கிரஸ் சார்பாக, நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பழிவாங்கும் உள்நோக்கத்தோடு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போடுவதையும், அமைதியாக போராடிய காங்கிரஸ் தலைவர்களை தாக்கிய மத்திய அரசை கண்டித்தும் சிவகிரி பஸ் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் உலகநாதன், நகர காங்கிரஸ் துணைத்தலைவர்கள் நாட்டாமை மாணிக்கம், சதானந்தன், மணி, செயலாளர்கள் செந்தில்குமார், மாடசாமி, கணேசன், சின்னக்கண்ணன், வேளியார், மருதப்பன், ஐ.என்.டி.யு.சி. மாடசாமி, டெய்லர் ஆறுமுகம், குட்டி, நிர்வாக குழு சந்திரன், தர்மராஜ்,

  இளைஞர் காங்கிரஸ் மனோ, பாலாஜி மற்றும் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.
  • கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.

  கடையநல்லூர்:

  சிவகிரி அருகே சுப்பிரமணியபுரம் சுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 53 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுதாரர்கள் அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வந்தனர்.

  அவர்கள் நீண்ட காலம் குத்தகை பணம் செலுத்தாததால், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 15 இருந்தது. இதுதொடர்பாக வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

  எனினும் கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த நிலத்தில் உள்ள வீட்டில் இருந்த பீரோ, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.

  ×