என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
சிவகிரி பகுதியில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
- நோயாளிகளுக்கு பால், பழம், பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
- சிவகிரி 18-வது வார்டு தருமபுரி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
சிவகிரி:
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிவகிரியில் வாசுதேவ நல்லூர் ஒன்றிய தி.மு.க., சிவகிரி பேரூர் தி.மு.க., உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பால், பழம், பிஸ்கட், பிரட் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
பேரூர் தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் கட்சி கொடியேற்றி லட்டு வழங்கப்பட்டது. ஒன்றிய தி.மு.க. சார்பில் சிவகிரி பேரூராட்சி 18-வது வார்டு தருமபுரி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான கந்தவேல், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருதப்பன், மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், விவசாய தொழிலாளர் அணி பூமிநாதன், தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவர் மருதுபாண்டியன், இயக்குனர் மாரித்துரை, சிவகிரி நிர்வாகிகள் துரைராசு, முனியாண்டி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், இருளப்பன், விக்னேஷ், முத்துலட்சுமி, கிருஷ்ண லீலா மற்றும் சி.எஸ்.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.