என் மலர்

  நீங்கள் தேடியது "கோவை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெட்கிரைண்டர், பம்ப்செட்டுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சிறு, குறு தொழில் முனைவோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
  • கொங்கு மண்டலத்தில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  கோவை:

  கோவை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

  குறிப்பாக வெட்கிரைண்டர் தொழில் முக்கியமானதாக உள்ளது. கோவையில் அடையாளமாக உள்ள இந்த வெட் கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

  கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்க கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  ஜி.எஸ்.டிக்கு முன்பு வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி அறிமுகமானபோது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழில் முனைவோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 18 சதவீதமாகவும், பின்னர் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

  இதேபோல் 300க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பம்புசெட் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டிக்கு முன்பு 5 சதவீத வாட் வரியே இருந்தது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு பம்ப்செட் மூல பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரியும், அந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இந்த குழப்பமான நடைமுறையை மாற்ற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டர் மீதான 5 சதவீத வரியை 18 சதவீதமாகவும், பம்ப்செட்டுகள் மீதான 12 சதவீத வரியை 18 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு கோவையை சேர்ந்த வெட்கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 50 சதவீதம் மட்டுமே கிரைண்டர் உற்பத்தி செய்து வருகிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியில் தொடங்கிய பிரச்சினை, கொரோனா, குவாரிகள் மூடல், மூலப்பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து வருகிறது.

  ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியதால் கிரைண்டர்கள் விலை மேலும் உயரும். தற்போது 2 லிட்டர் டேபிள் டாப் கிரைண்டர் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் விலை மேலும் ரூ.500 முதல் ரூ.600 உயரும். டில்டிங் கிரைண்டர் ரூ.90 ஆயிரத்திற்கும், கன்வென்சனல் கிரைண்டர் ரூ.60 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது.

  இனி இவற்றின் விலை கடுமையாக உயரும். விலை உயர்ந்தால் விற்பனை சரிவை சந்திக்கும். விற்பனை மந்தமானால் உற்பத்தியாளர்கள் தான் ஆர்டர்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-

  மத்திய அரசு சிறு, குறு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பது எங்களுக்கு புரியவில்லை. ஏனென்றால் கொரோனாவின் தாக்கம், மூலப்பொருட்கள் விலை உயர்வு என வெட்கிரைண்டர் தொழில் ஏற்கனவே பாதிப்பில் உள்ளது. இந்த நிலையில் வெட் கிரைண்டர்களுக்கான வரியை உயர்த்தியுள்ளது தொழில் முனைவோர்களுக்கு வேதனை அளிக்கிறது.

  மேலும் பம்ப்செட் வரி, மூலப்பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற கூறி டெல்லியில் அமைச்சர்களை சந்தித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக, வெட்கிரைண்டருக்கான வரியை உயர்த்தியுள்ளது. இதனால் தொழில் கடுமையான பாதிப்படையும்.

  புதிதாக வேலையையும் உருவாக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே சிறு, குறு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். விரைவில் தொழில் முனைவோர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவரும், இளம்பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது
  • பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை :

  கோவை சித்தாபுதூரை சேர்ந்த 36 வயது இளம்பெண் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

  நான் எனது கணவருடன் சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு இளங்கோ நகரில் வசித்து வரும் 48 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் எனக்கு தெரியவரவே நான் எனது கணவரை கண்டித்தேன். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நான் எனது கணவரின் செல்போனை பார்த்தபோது எனது கணவரும், அந்த இளம் பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது இதனைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் .

  இதுகுறித்து நான் என் கணவரிடம் கேட்டபோது மீண்டும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வெளியே தள்ளிவிட்டார். எனவே எனது கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தட்டிக்கேட்ட என்னை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர்.
  • தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

  கோவை,

  கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சின்னராஜ், அவர் சம்பவத்தன்று இரவு ஏட்டு திருநாவுக்கரசுடன் குனியமுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

  அப்போது கோவைப்புதூர் ஏ மைதானத்தில் தகராறு நடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் நிலையத்தில் இருந்து ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் எட்டு திருநாவுக்கரசுடன் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 10-க்கும் ேமற்பட்ட கும்பல் நாலாபுறமும் தப்பியோடினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் மீது மோத வந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

  ஆனால் ஏட்டு திருநாவுக்கரசு மீது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் நிலைதடுமாறியதால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். காலில் படுகாயம் அடைந்த ஏட்டு திருநாவுக்கரசை மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே, கடந்த சில நாட்களாக மோதல் நடந்துள்ளதும், அதில் தாக்கப்பட்ட ஒரு மாணவரின் நண்பர்கள், இரவு சம்பவ இடத்தில் மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அதனைக் வைத்து தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
  • போலீசாரை பார்த்ததும் ேமாட்டார் சைக்கிளை திருப்பி தப்பி செல்ல முயற்சி செய்தனர். போலீசாரை பார்த்ததும் ேமாட்டார் சைக்கிளை திருப்பி தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

  கவுண்டம்பாளையம்,

  கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளகிணர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்படி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி ராஜபாண்டியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஞானராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திலக் உள்ளிட்ட போலீசார் வெள்ளகிணர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை சரவணம்பட்டியில் இருந்து வெள்ளகிணர் பிரிவு அருகே ேமாட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் ேமாட்டார் சைக்கிளை திருப்பி தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

  இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

  அதில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த காத்தாடி என்கிற லக்கு சாமி (வயது 28), கூல் என்கிற அஜித்குமார் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

  மேலும் இவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கஞ்சாவை வாங்கி கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வதும், வரும் வழியிலேயே 2 லட்சம் ரூபாய்க்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

  இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். லக்கு சாமி மற்றும் அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். 

  ×