என் மலர்
வழிபாடு
- 25-ந்தேதி தேய்பிறை அஷ்டமி
- 30-ந்தேதி பிரதோஷம்.
24- ந்தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல் .
* திருவைகுண்டம் வைகுண்டபதி பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (புதன்)
* தேய்பிறை அஷ்டமி, சிவாலயங்களில் பைரவர் சிறப்பு அபிஷேகம்.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன் னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல் .
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்,
29-ந்தேதி (ஞாயிறு)
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
30-ந்தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்
* கீழ்நோக்கு நாள்.
- உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள்.
- திருத்தலங்களிலே உயர்வான, மேன்மைமிகுந்த திருத்தலமாக திகழ்கிறது.
கோவில் தோற்றம்
உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள். அவ்வகையில் உலகில் உள்ள திருத்தலங்களிலே உயர்வான, மேன்மைமிகுந்த திருத்தலமாக திகழ்கிறது, உன்னதபுரம் என்னும் மெலட்டூர். வெட்டாற்றின் கரையில் உள்ள இத்திருத்தலம் 'சப்த சாகர ஷேத்திரம்' என்றும் போற்றப்படுகிறது.

அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக ஏழு சக்திகளாக உருவெடுத்தாள். அந்த ஏழு சக்திகளே 'சப்த மாதாக்கள்' ஆவர். அந்த சப்தமாதர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு, வரங்கள் பல பெற்றுள்ளனர். ஆதலால் இத்தலம் ஆதியில் 'சிவசக்தி பீட'மாகத் திகழ்ந்துள்ளது.
தேவலோக தச்சனான மயனால், உன்னத புரீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நகரின் எல்லைகளில் உள்ள பிற தெய்வங்களையும் தேச தச்சனே நிறுவியதாக சொல்கிறார்கள். இதனால் மேலான ஊர் என்னும் பொருளில் 'மேலத்தூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'மெலட்டூர்' என்று ஆனதாக கூறப்படுகிறது.

தல வரலாறு
ஈசனிடம் வரம் பெற்ற கோமுகாசுரன், பிரம்மனது வேதச் சுவடிகளை பறித்துக்கொண்டு, கடலில் சென்று ஒளிந்துகொண்டான். திருமால் மச்ச அவதாரம் எடுத்து, கோமுகாசுரனிடம் சண்டையிட்டு வேதங்களை மீட்டார்.
மிகப்பெரிய மீன் வடிவில் இருந்த திருமாலால், கடல் கலங்கி கடல்வாழ் உயிரினங்களுக்கு துன்பம் நேர்ந்தது. எனவே சிவபெருமான் மீனவராக வந்து, ஏழு கடலையும் மறைக்கும் படியான வலையை வீசி, மீன் வடிவில் இருந்த திருமாலை பிடித்தார்.
இதையடுத்து அவரின் வலிமை குறைந்தது. அப்போது ஈசன் உருவாக்கிய திருத்தலமே, உன்னதபுரம் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
மகாவிஷ்ணு ஒரு சமயம் கயிலை சென்றபோது, அவரை நந்தியம்பெருமான் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர் நந்தியை கதாயுதத்தால் தாக்கினார். இதனால் கோபம் கொண்ட நந்தி, மகாவிஷ்ணுவை சாதாரண மனிதனாக பிறக்கும்படியும், அவரது வாகனமான கருடனை சாதாரண பறவையாக பிறக்கும்படியும் சபித்தார்.
கருட பகவான், உன்னதபுரம் திருத்தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, இத்தலபெருமானை வழிபட்டு, சாப நிவர்த்தி பெற்றார். பின் தனது பெயரில் கருட தீர்த்தம் உண்டாக்கியும் வழிபாடு செய்தார்.
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, பெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.

ஆலயத்தின் எதிரே சிவகங்கை தீர்த்தம் பிரமாண்டமாக அமையப்பெற்றுள்ளது. முதலில் தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. அதையடுத்து கிழக்கு முகம் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நேராக கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது.
அதை அடுத்து முகமண்டபம், இடை மண்டபம் இருக்கின்றன. தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளது. கருவறையிலே சுயம்பு நாதனாக எழில் மிகு கோலத்தில் உன்னதபுரீஸ்வரர் அருள்காட்சி தருகிறார்.
முக மண்டபத்தின் வடக்கு திசையில் தென் திசை பார்த்தபடி, சிவப்பிரியாம்பிகா தேவி அருள்பாலிக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அவர் அருகே தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
திருக்கருகாவூரில் இருந்து திட்டை குருஸ்தலம் செல்லும் வழியில், சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மெலட்டூர் திருத்தலம்.
- 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
- சக்தியானவள் ‘அட்சர சுந்தரி’ என்றும் போற்றப்படுகிறாள்.
படைப்பு கடவுள் என்று அறியப்படும் பிரம்மதேவன், தன்னுடைய படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க நான்கு பேரை தோற்றுவித்தார். சனத்குமாரர், சனகர், சதானந்தர், சனாதனர் ஆகிய அந்த நால்வரும், பிரம்மபுத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நால்வரும் தோன்றிய உடனேயே ஆன்மிக அறிவில் ஆழ்ந்து, நித்திய பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டனர்.

இவர்களில் முதல்வரான சனத்குமாரர், ஒரு முறை சதச்ருங்க மலை மீது அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த ஈசன், ரிஷபாரூடராக அங்கே தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானம் காரணமாக சனத்குமாரர், கண் விழித்துப் பார்க்கவில்லை.
இதனால் அவரை எழுப்ப சிவபெருமான் தன் கையில் இருந்த டமருகத்தை (உடுக்கை) வேகமாக அசைத்தார். அந்த உடுக்கையில் இருந்து 'டம்.. டம்..' என்று எழுந்த நாதமே, சமஸ்கிருதத்தின் 'அ முதல் க்ஷ' வரையான 51 எழுத்துக்கள் ஆகின என்றும், மேலும் அந்த எழுத்துக்கள் பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம் போல தெறித்து விழுந்தன என்றும் ஆன்மிக சான்றோர்கள் நம்புகின்றனர்.

இந்த 51 அட்சரங்களை மையமாகக் கொண்டு 51 சக்தி கோவில்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதனால் சக்தியானவள், 'அட்சர சுந்தரி' என்றும் போற்றப்படுகிறாள். 51 அட்சரங்களுக்கான தேவிகளின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
* அமிர்தா தேவி
* ஆகர்ஷணீ தேவி
* இந்திராணி தேவி
* ஈஷிணி தேவி
* உமா தேவி
* ஊர்த்வகேஷி தேவி
* ருத்திதாயீ தேவி
* ரூகார தேவி
* லுகார தேவி
* லூகார தேவி
* ஏகபாத தேவி
* ஐஷ்வர்யாத்மிகா தேவி
* ஓம்கார தேவி
* ஔஷதா தேவி
* அம்பிகா தேவி
* அக்ஷரா தேவி
* காராத்ரி தேவி
* கண்டிதா தேவி
* காயத்ரி தேவி
* கண்டாக்ர்ஷிணி தேவி
* டார்ணா தேவி
* சாமுண்டா தேவி
* சயார்தா தேவி
* ஜயா தேவி
* ஜங்காரிணி தேவி
* ஞானரூபா தேவி
* டங்கஹஸ்தா தேவி
* டங்காரிணி தேவி
* டாமரி தேவி
* டங்காரிணீ தேவி
* ணார்ணீ தேவி
* தமஸ்யா தேவி
* ஸ்தாண்வீ தேவி
* தாக்ஷாயணி தேவி
* தத்யா தேவி
* நார்யா தேவி
* பார்வதி தேவி
* பட்காரிணி தேவி
* பந்தினி தேவி
* பத்ரகாளி தேவி
* மகாமாயா தேவி
* யக்ஷஸ்வினி தேவி
* ரக்தா தேவி
* லம்போஷ்டி தேவி
* வரதா தேவி
* திரு தேவி
* ஷண்டா தேவி
* சரஸ்வதி தேவி
* ஹம்ஸவதி தேவி
* பந்தமோகினி தேவி
* க்ஷமா தேவி
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சப்தமி இரவு 6.49 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 4.12 மணி வரை. பிறகு திருவாதிரை.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. திருநாறையூர் ஸ்ரீசித்தாதீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருக்கோளூர் ஸ்ரீவைத்த மாநிதிப் பெருமாள் குமுதவல்லி கோளூர் வள்ளி தாயார் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுப்பு
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்-கடமை
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-லாபம்
கன்னி-வரவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- கவனம்
மகரம்-கடமை
கும்பம்-பெருமை
மீனம்-சாந்தம்
- சுதாமர் என்ற ஓர் அந்தணர் இருந்தார்.
- கிருஷ்ணரை தியானிப்பதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது
சுதாமர் என்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் கிருஷ்ணரின் அன்புக்கு உகந்த நண்பர். அவர் வேதங்களை நன்கு கற்றவர். ஆனால் மிகவும் ஏழை மிகவும் அழுக்கடைந்த ஆடைகளை அவர் உடுத்தி இருந்ததனால் அவரைக் குசேலர் என்றும் அழைப்பார்கள்.
தெய்வாதீனமாக எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு தான் அவர் உயிர் வாழ்ந்தார்.

அவருடைய மனைவி எல்லா வகையிலும் அவரைப் போலவே இருந்தாள். இளம் வயதில் அவர் சாந்தபன முனரின் குருகுலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து படித்தவர்.
குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் ஒரு முறை அவருடைய மனைவி அவரைப் பார்த்து, 'பகவான் கிருஷ்ணர் ஒரு சமயம் தங்களுடைய நெருங்கிய நண்பராக இருந்தார் என்று பல தடவை என்னிடம் கூறியுள்ளீர்கள் நல்லவர்கள் மீதும், ஏழைகள் மீதும் அவர் மிக்க அன்பு கொண்டவர் என்பது பிரசித்தமாக இருக்கிறது. தாங்கள் அவரைப் பார்த்து ஏதாவது உதவி கேட்டால் என்ன?" என்று கேட்டாள். சுதாமர் அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார்.
மிகவும் சாதாரண ஒரு புடவையை அவள் அணிந்திருந்தாள் அந்தப் புடவையும் பல இடங்களில் கிழிந்திருந்தது. அவரைத் திருமணம் புரிந்து கொண்டதிலிருந்து, அவள் ஒரு நாள் கூட வயிறு நிறையச் சாபிட்டதில்லை.
இதுதான் முதல் தடவையாக அவள் அவரை ஏதோ கேட்பது, அதுவும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
அவர் தமக்குள். அவள் திருப்திக்காக நான் கிருஷ்ணரைப் பார்க்கப் போவேன் ஆனால் இது காரணமாக என் பழைய நண்பனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்' என்று நினைத்துக் கொண்டார்.
அவருக்குக் கணிகாகக் கொடுக்க வீட்டில் ஏதாவது இருக்கிறதா? வேறும்பயன் நான் என் நண்பனை எப்படிய பார்க்க முடியும்?" என்று கேட்டார். அப்படிக் கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை.
உடனே அவள் வெளியே சென்று நான்கு பிடி நெல், பக்கத்து வீடுகளிலிருந்து வாங்கி வந்தாள். அதை இடித்து அவலாகச் செய்து, அதை ஒரு துணியில் கட்டினாள்.
அதை எடுத்துக் கொண்டு, அந்த ஏழை பக்தரான அந்தணர் துவாரகை நோக்கி நடந்தார் வழியெல்லாம் கிருஷ்ணரைத் தாம் சந்திக்கப் போவதைப் பற்றியே எண்ணிக் கொண்டு சென்றார்.
துவாரகையை அடைந்ததும், அந்த அழகிய நகரைக் கண்டு இன்புற்றுக் கொண்டே சென்றார். கிருஷ்ணருக்குச் சொந்தமான பல மாளிகைகள் இருந்த இடத்தை அடைந்தார்.
எல்லா மாளிகைகளையும் விட மிகச் சிறப்பாகத் தோன்றிய ஒரு மாளிகைக்குள் நுழைந்தார் அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வாயிற் கதவைத் தாண்டி உள்ளே இருந்த கூடத்துள் நுழைந்தார். தூரத்தில் கிருஷ்ணர் ஒரு உட்கார்ந்திருந்தது தெரிந்தது. கட்டிலில், ருக்மிணியோடு உட்கார்ந்திருந்தது தெரிந்தது.
அவர் உள்ளே நுழைந்துதான் தாமதம், கிருஷ்ணர் வெகு ஆவவேண்டு ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். தம் நண்பரைத் தழுவிக் கொண்டது கிருஷ்ணருக்குப் பேரானந்தத்தைத் கொடுத்தது.

அவருடைய தாமரைக் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது. சுதாமரும் தம்மை அடக்கி கொள்ள முடியாமல் அழுதார். கிருஷ்ணர் அவரைத் தம் கட்டிலில் உட்காரவைத்து, அவர் கால்களை அலம்பி அந்தத் தண்ணீரைக் குடித்ததுடன், தம் தலையிலும் தெளித்துக் கொண்டார். கிருஷ்ணர் பக்கத்தில் நின்றுகொண்டு ருக்மிணி சுதாமருக்கு விசிற ஆரம்பித்தாள்.
எலும்பும் தோலுமாக இருந்த அந்த அந்தணரை, அதுவும் கிழிந்த அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டிருந்தவரைக் கிருஷ்ணர் பூஜை செய்தது, அரண்மனையில் உள்ள எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.
கிருஷ்ணரும் சுதாமரும் கைகோர்த்துக் கொண்டு உட்கார்ந்து குருகுலத்தில் தாங்கள் கழித்த இன்பநாட்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

தம் நண்பருடைய நிலை கிருஷ்ணருக்கு நன்கு தெரியும், அவர் ஏன் அங்கு வந்தார் என்பதும் கிருஷ்ணருக்கு தெரியும். அவருக்கு நிறைய தனம் கொடுக்க வேண்டுமென்று அவர் நினைத்தார். பணத்திறக்காகச் சுதாமர் என்னை ஒரு நாளும் பூஜை செய்ததில்லை.
இப்பொழுது கூட அவருடைய தர்மபத்தினியின் தூண்டுதலினால்தான் வந்திருக்கிறார். அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அவருக்கு செல்வதைக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார்.
கடைசியில் கிருஷ்ணர், "என்ன நண்பா, எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். சுதாமரின் தலை குனிந்தது, தாம் கொண்டு வந்திருந்த அவலைக் காண்பிக்க அவருக்கு வெட்கம். அத்தனை அற்புதமான பொருளைக் கிருஷ்ணருக்குக் கொடுக்க அவருக்கு அவமானமாக இருந்தது.
ஆனால் கிருஷ்ணர் அவரை விடவில்லை. நீ ஏதோ சாதாரணப் பொருளைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அது தான் யோசனை செய்கிறாய், ஆனால் என் பக்தன் அன்போடு ஒரு சிறிய பொருளைக் கொடுத்தாலும் அதை நான் பெரிதாகக் கருதுவேன்.
பக்தி இல்லாமல் கொடுக்கப்படும் பொருள், அது எத்தனை பெரியதாக இருந்தாலும் சரி, அது எனக்கு இன்பத்தைத் தருவதில்லை. எனக்கு அன்போடு அளிக்கப்படும் பொருள், அது இலையாக இருந்தானும் சரி, மரமாக இருந்தாலும் சரி, ஏன் வெறும் தண்ணீராக இருந்தாலும் சரி அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். ஏனெனில், அது பக்தியும் அன்பும் உள்ளவர்களால் கொடுக்கப்படுகிறது" என்றார்.
ஆனால் கிருஷ்ணர் இப்படி பேசியும் சுதாமர் அசையாமல் பேசாமல் இருந்தார்.
உடனே கிருஷ்ணரே சுதாமர் அவலை முடித்து வைத்திருந்த துணியை எடுத்துத் திறந்தார். அதில் அவலைக் கண்டதும் அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.
ஓ நண்பனே! அவல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நீ கொண்டு வந்திருக்கிறாயே!" என்று ஒரு பிடி அவலை எடுத்துச் சாப்பிட்டார்.
இரண்டாம் பிடியை எடுத்து அதை வாய்க்குள் போட்டுக் கொள்ளப் போகையில் ருக்மிணி சிரித்துக் கொண்டே அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.

ஏனென்றால் கிருஷ்ணர் முதல் பிடி அவல் சாப்பிட்டதுமே உலகத்தின் செல்வம் முழுவதையும் அவர் சுதாமருக்கு வழங்கிவிட்டார்.
இரண்டாம் பிடி அவல் சாப்பிட்டால், ருக்மிணியே பக்தன் வீட்டுக்குப்போய்ப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கும். அந்த தர்ம சங்கடமான நிலையைத் தடுப்பதற்காகத் தான் அவள் இரண்டாம் பிடி அவலைக் கிருஷ்ணர் சாப்பிடாமல் தடுத்தாள்.
மறுநாள் காலை, கிருஷ்ணரிடம் விடைப்பெற்றுக் கொண்டு, அவர் தமது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
கிருஷ்ணர் அவரோடு சிறிது தூரம் சென்று விடை கொடுத்தனுப்பினார்.
செல்வம் வேண்டும் என்று சுதாமர் கிருஷ்ணரை ஒரு பொழுதும் வேண்டியதில்லை இந்த அற்பப் பொருளை நாடி அவரிடம் சென்றோமே என்று வெட்கப்பட்டார்.
ஆனால் கிருஷ்ணரைத் தரிசித்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "கிருஷ்ணர் எத்தனை அன்புள்ளம் கொண்டவர் என்பதை இன்று நான் பார்த்தேன்.
கிழிந்த அழுக்கான உடைகளை அணிந்துள்ள இந்த ஏழையை அவர் அன்பாக தழுவிக் கொண்டார். நானோ அற்பனுக்கும் அர்ப்பன். அவரோ தேவர்களுக்கெல்லாம் தேவர்! இருந்தும் என்னைத் தழுவிக் கொண்டாரே! அவருடைய எல்லையற்ற அன்புதான் என்னே!"
என்று நினைத்துக் கொண்டே சுதாமர் வீடு திரும்பினார். என்ன ஆச்சரியம்! பணம் வேண்டுமென்று சுதாமர் கிருஷ்ணரைக் கேட்கவேயில்லை, இருவருடைய பழைய குச்சுவீடு அந்த இடத்தில் ஒரு பெரிய மாளிகையாகி இருந்தது!
அவரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. எங்கோ பார்த்தாலும் நந்தவனங்களும் பூங்காக்களும் இருந்தன.
'என்ன இது' இது எந்த இடம்! என்னுடைய பழைய குடிசை எங்கே?" என்று கேட்டார்.
அப்பொழுது மாளிகையிலிருந்து அவர் மனைவி ஒடிவந்து, அவர்
காலில் விழுந்து கண்ணீர் விட்டாள், அவள் மிகவும் அழகாக மாறி, மிகவும் உயர்ந்த உடைகள் அணிந்திருப்பதைப் பார்த்தார்.
அந்த வீடு இந்திரனுடைய மாளிகை போல செல்வச் செழிப்புடன் ஒளி வீசியது. மிக விலையுயர்ந்த பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுதாமர் இந்த பொருள்களை கண்டு மயங்கவில்லை. கிருஷ்ணரோடு தாம் இருந்த நேரங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று கிடைத்த இந்த பொருள்களைவிட கிருஷ்ணருடைய கமல பாதங்களைத் தியானிப்பதே அவருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய மனைவியும் மிகுந்த உத்தமி. அவளும் கிருஷ்ணரை தியானிப்பதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது என்று அறிந்து கொண்டாள்.
கிருஷ்ணனுக்கு பகட்டான ஆடை அலங்காரமோ பிரமாதமான அக்கார அடிசலோடு கூடிய சித்ரான்னமோ தேவையில்லை. அவன் எதிர்பார்பதெல்லாம் பக்தியுடன் எந்த வித வேண்டுதலும் இல்லாமல் பரம சரணாகதி பக்தியுடன் சமர்பிக்கப்பட்ட ஒரு பச்சிலை ஒரு துளி தீர்த்தம் ஒரே ஒரு புஷ்பம் இல்லாவிடில் ஒரு சொட்டு கண்ணீர் போதும் அந்த வைகுண்டத்தையே தருவான்
- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-7 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி இரவு 8.09 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.40
மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி எழுந்தருளல். திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராள கேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடை மருதூர் ஸ்ரீ பிருகத்கந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி காலை சோமவார அபிஷேகம், அலங்காரம், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆசை
மிதுனம்-உயர்வு
கடகம்-தெளிவு
சிம்மம்-கவனம்
கன்னி-உண்மை
துலாம்- செலவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- வரவு
மகரம்-மாற்றம்
கும்பம்-பாராட்டு
மீனம்-வெற்றி
- கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.
- 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள்.
இத்திருவிழாவில் பக்தர்கள் வேடம் அணியும் முன் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். கோவில் முன்பும், கடற்கரையிலும் கூட்டம் அலை மோதியது.
விரதம் தொடங்கும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புவை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை பிரித்து 10-ம் திருநாள் அன்று கோவிலில் சேர்ப்பார்கள்.
மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும்.
- இன்று கார்த்திகை விரதம்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-6 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 9.49 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: பரணி காலை 6.42 மணி வரை பிறகு
கார்த்திகை மறுநாள் விடியற்காலை 4.48மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். திருச்செந்தூர், பழனி கோவில்களில் முருகப்பெருமான் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தாஜப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பணிவு
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-முயற்சி
கடகம்-பாசம்
சிம்மம்-பயிற்சி
கன்னி-தன்னம்பிக்கை
துலாம்- தெளிவு
விருச்சிகம்-லாபம்
தனுசு- கண்ணியம்
மகரம்-நன்மை
கும்பம்-ஊக்கம்
மீனம்-லாபம்
- தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.
- பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
திருப்பதி:
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் பக்தர்கள் நிரம்பி வழிந்தது. தரிசன வரிசையில் இருந்து நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து இருந்தனர். நேற்று நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தான தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,104 பேர் தரிசனம் செய்தனர். 28, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- இன்று மகாபரணி. சங்கடஹர சதுர்த்தி.
- குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-5 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி இரவு 11.42 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: அசுவினி காலை 8.03 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று மகாபரணி. சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் திருமஞ்சனம். ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை முக்குறுணி பிள்ளையார் கோவில்களில் கணபதி ஹோமம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செய்தி
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-ஓய்வு
சிம்மம்-ஜெயம்
கன்னி-பக்தி
துலாம்- நம்பிக்கை
விருச்சிகம்-பாசம்
தனுசு- புகழ்
மகரம்-நற்செயல்
கும்பம்-பயணம்
மீனம்-மாற்றம்
- பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
- பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.

தீபம்
சிறு வெள்ளைத் துணியில் மிளகை வைத்து அதை சிறிய முடிச்சாக கட்டி, அதை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் இட்டு பைரவர் முன்பாக தீபம் ஏற்றினால், எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம்.

சந்தன காப்பு
பைரவருக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் போன்றவற்றை சந்தனத்துடன் சேர்த்து தயார் செய்வார்கள். இந்த சந்தன காப்பை பைரவருக்கு சாத்தி வழிபட்டு வந்தால், தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு, பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.
நைவேத்தியம்
பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

மாலைகள்
பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
- ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.
- பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவே தான் இத்தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்)
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும்.

பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையோ, வாய்ப்புகளோ அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள்.
பலபேர் அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர், ஆனால் வாழ்வில் அமைதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு, பிதுர் தோஷம்தான் காரணம். அவர்கள் அனைவரும், இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.






