என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.
    உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு நோய் இருந்து கொண்டே இருக்கும். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத படி நோய் நீடித்தப்படி இருக்கும். சிலர் எந்த வியாபாரம் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டு தவிப்பார்கள். சிலர் எல்லா வசதியும் பெற்றிருப்பார்கள். ஆனால் மனதில் நிம்மதி இருக்காது.

    வறுமை, கடன்தொல்லை, அண்ணன்&தம்பி தகராறு, சொத்து பிரச்சினை, வேலையில் நிம்மதியின்மை, உரிய வயதில் திருமணம் நடக்காதது, வீண்பழி, கொடுத்த பொருள் திரும்பி வராதது என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள தெரியாமல் சிலர் தற்கொலை செய்து விடலாமா என்று கூட கோழைத்தனமாக நினைப்பதுண்டு. இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் குலசை முத்தாரம்மன் முடித்து வைப்பாள்.

    அவள் சன்னதியில் நின்று ஒரு நிமிடம் மனம் உருக, உங்கள் பிரச்சி னையை சொல்லி விட்டாலே போதும், மறு வினாடியே உங்கள் மனம் லேசாகி விடும். உங்கள் குறைகளை முத்தாரம்மன் தன்னகத்தே எடுத்துக் கொண்டு உங்களுக்கு நிம்மதி தருவாள். மனநலம் பாதிப்பிற்குள்ளானவர்கள் இங்கு வந்து அம்பாள் முன் நின்றாலே, குணமுண்டாகும். இங்கு பிற இடங்களைப் போன்று கயிற்றால் கட்டிப் போடுதல் போன்ற சிகிச்சைகள் எதுவும் கிடையாது.

    ஆனால், பாதிப்படைந்தோரை இந்த ஆலயத்திற்கு அழைந்து வந்து, அம்பாளை மனமுருகி வேண்டினால், முத்தாரம்மன் அருள் உடனே கிடைக்கும். மனநலம் சரியாகி விடும். இது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், மனநோய் கண்டவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அம்பாளின் அருள் கிடைக்கப்பெற்று நோய் தீர்ந்து திரும்புகின்றனர் அது போல தொழு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் குலசேகரன் பட்டினம் சென்று முத்தாரம்மனை வழிபட்டால், நோய் குணமாகும்.அம்பாளின் அருளினால்,மீண்டும் பழைய நிலையை அவர்கள் அடைய முடியும்.

    இது போன்று அம்பாளைத் தொழுது, தொழு நோய் குணமாவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், குலசை முத்தாரம்மனிடம் உங்களையே ஒப்படைத்து விடுங்கள். தாயே நீயே கதி என்று சரண் அடையுங்கள். அவள் மீது முழுமையான பற்றும், பாசமும், பக்தியும் கொள்ளுங்கள்.உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலைகளையும் இறக்கிவைக்க அவள் ஆலயத்தை நோக்கி புறப்படுங்கள்.

    உங்களைப் போன்றவர்களின் துக்கங்களை, துயரங்களை, போக்குவதற்காக முத்தாரம்மன் காத்திருக்கின்றாள். முத்தாரம்மன் உங்கள் மனதை மிகவும் லேசாக்கி அனுப்பி வைக்கும் ஆற்றல் படைத்தவள். அவளின் கருணைப் பார்வையிலேயே உங்கள் கவலைக்கள் அனைத்தும் கண நேரத்தில் காணாமல் போய் விடும்.
    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும்...
    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    வீரம் தரும் துர்க்கை

    துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. ‘’கொற்றவை ‘’ என்றும் ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    செல்வம் தரும் லட்சுமி

    இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ லட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

    சகல வித்தை தரும் சரஸ்வதி

    சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.

    சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    விஜயதசமி


    நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 21 விதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1. காலை, இரவு சாப்பிடக்கூடாது.
    2. மதியம் ஒரு வேளை மட்டும் வாழை இலையில் சாப்பிடவும், பச்சரிசி சாதம் உகந்தது.
    3. சமையல் தாழிக்க கூடாது.
    4. புதுப்பாத்திரத்தில் அல்லது சுத்தமான பாத்திரத்தில் சமையல் செய்ய வேண்டும்.
    5. காலை சூரியன் உதிக்கும் முன்பும், மாலை சூரியன் மறையும் முன்பும் தினமும் இரண்டு வேளை கண்டிப்பாக குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.
    6. எப்போதும் முத்தாரம்மனை போற்றி வழிபட வேண்டும்.
    7. கண்ட இடத்தில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. தரையில் புதுப்பாய் விரித்து படுக்கவும்.
    8. அசைவ உணவு உண்ணக்கூடாது.
    9. மது அருந்தக்கூடாது.
    10. புகை பிடிக்க கூடாது.
    11. பகலில் தூங்க கூடாது.
    12. காலில் செருப்பு அணியக்கூடாது.
    13. தலையில் எண்ணை தேய்க்கவோ, முடிவெட்டவோ, சவரம் பண்ணவோ கூடாது.
    14. பிரம்மச்சாரியம் கடைபிடிக்க வேண்டும்.
    15. வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு ஆயுதங்கள் தவிர்ப்பது நல்லது.
    16. பக்தர்கள் விரும்பிய வேடம் அணியலாம்.
    17. காளி வேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டும், 50 வயதுக்கு மேற்பட்டும் இருக்க வேண்டும்.
    18. குலசை முத்தாரம்மனுக்கு 10 நாள் கடும் விரதம் இருந்தாலே போதுமானது. 21 நாள், 31 நாள், 48 நாள் விரதம் இருப்பது, அவரவர் விருப்பத்தை பொருத்தது.
    19. வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.
    20. வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
    21.வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக் கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.

    வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.

    வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.

    காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதுக்குட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும்.
    செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு தோஷம் அகல செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3-ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு. தசரா எனப்படும் நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.
    விநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

    இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

    அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

    அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.

    அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
    மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
    அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

    அதுவே மூன்று மிக முக்கிய அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

    மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. (பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.)

    மகாளய அமாவாசை தினத்தில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால், அந்த நாள் சிறப்பாக அமைவதோடு, நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.

    மரங்களில் மிக புனிதத்தன்மை வாய்ந்த மரம் அரச மரம். அப்படி அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தருபவர் விநாயகர். இந்த தினத்தில் அரசமரத்தைச் சுற்றி வந்து பிள்ளையாரை வணங்குவது மிகச் சிறந்த புண்ணியத்தைத் தரும். முன்னோர்களின் ஆசி கிட்டுவதோடு, நம் உடலின் நோய் குறைந்து நலம் பெறலாம். நீண்ட நாள் வாழ முடியும். 
    விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    விநாயகர் பெருமான் சனாதன தர்மக்கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.

    விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

    வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தைப்பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப்பிடிக்க வேண்டும்.
    புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரத வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
    ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம், பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
     
    ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
     
    பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள், காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல், மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.

    சிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

    தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!
    ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
    ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.
    தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் புரட்டாசி. மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும், பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் இந்த புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.

    பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    ஒவ்வொரு சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. அப்படி விரதத்தை மேற்கொள்ள் முடியாதவர்கள் புரட்டசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜை செய்து வழிபடுவதோடு, முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிட்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக பார்க்கப்படுகின்றது.

    அதே போல், சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார். 
    ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.
    விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம், அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.

    ஞாயிற்றுக்கிழமை

    ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும், பெயர் புகழுடன் வாழ்வர்.

    திங்கட்கிழமை

    திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவிலிருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை

    செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அம்மனுக்கு விரதமிருந்து வந்தால் திருமணத் தடை நீங்கும். பில்லி, சூனிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.

    புதன் கிழமை  

    புதன் கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும், கவிஞர்கள், வணிகர்கள், ஜோதிடர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் இந்த கிழமையில் பராசக்தி அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையாலாம்.

    வியாழக்கிழமை

    வாழ்வில் உள்ள எதிரிகள் தொல்லைகள் நீங்கவும் உறவினர்கள் தொல்லைகள் நீங்கவும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர்.பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மனுக்கு இந்நாளில் விரதமிருப்பது சிறப்பு.

    வெள்ளிக்கிழமை  


    திருமணம் கைகூடவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் விரதமிருக்கலாம், வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

    சனிக்கிழமை

    வழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடலாம். இந்த கிழமையில் அம்மனை வழிபட நீண்ட ஆயுள் பெறலாம்.
    ×