என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சிவனின் அம்சமான கால பைரவர், எந்தெந்த நாளில், எந்த ராசியினர் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார். சொர்னாகர்சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார். பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோயிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

    பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

    இத்தனை சிறப்பு மிக்க பைரவரை எந்தெந்த கிழமைகளில், வழிபட்டால், என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

    ஞாயிறு கிழமை:

    சிம்ம ராசியினர் ஞாயிறு கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடைபெறும். ஸ்ரீ பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்

    திங்கள் கிழமை:

    கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    செவ்வாய்க் கிழமை:

    மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருள் திரும்ப பெறலாம்.

    புதன் கிழமை:

    மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

    வியாழக்கிழமை :

    தனுசு, மீன ராசியினர் பைரவரை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும்.

    வெள்ளிக் கிழமை

    ரிஷபம், துலாம் ராசியினர் வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகசரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

    சனி கிழமை:

    மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு. இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாது தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.
    அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்த 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது.
    சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களைதுன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தைஎடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள்தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாகஉறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்குசென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.

     தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்ததேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டதுஎன்பதையும் உணர்ந்து, அந்ததேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.

     “நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகலநன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசிவழங்கி, பிறகு அந்தஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

    ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்

    ஏகாதசி அன்று உணவினை உண்ணாமல் இருப்பது நல்லது. உண்ணாமல் இருக்க முடியாதவர்கள்  பழங்கள் மற்றும் பால் உண்ணலாம்.இரவு முழுவதும் உறங்காமல் விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.ஏகாதசிக்கு அடுத்த நாள்  துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் பெருமாள்  கோவிலுக்கு சென்று  வந்த பிறகு  உணவினை உண்ணலாம்.

    ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    வெள்ளிக்கிழமை விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக, வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.

    ஒரு முறை வைகுண்டத்தில் இருந்தபோது மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி, ‘சுவாமி! மனிதர்கள் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன?’ என்று கேட்டாள். லட்சுமியின் சந்தேகத்திற்கு பதிலளிக்கத் தொடங்கினார் மகாவிஷ்ணு:

    ‘தேவி! ஒவ்வொருவருடைய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய விதிப்பயன்தான். அதற்கு தகுந்தாற்போல் தான் ஒருவருடைய வாழ்வில் ஏற்றத் தாழ்வு அமைகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள், நல்ல வழியில் சென்று சில விரதமுறைகளை அனுஷ்டிக்கும்போது, அவர்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த நல்ல மாற்றம் ஒருவரின் வாழ்வில் கிடைப்பதற்கு அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தேவைப்படுகிறது. அது கிடைக்க அவர்கள் என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதை நீ ஒரு முறை பூலோகம் சென்று பார்த்து வா’ என்று கூறினார்.

    இதையடுத்து லட்சுமி தேவி பூலோகம் புறப்பட்டுச் சென்றாள். முதலில் ஒரு வீட்டைச் சென்று பார்த்தாள். அந்த வீடு குப்பையாகவும், அசுத்தமாகவும் இருந்தது. லட்சுமி தேவி அந்த வீட்டுக்குள் செல்லாமல் வேறு ஒரு வீட்டுக்குப் போனாள். அந்த வீடு சுத்தமாக இருந்தது. அதுதான் வாசம் செய்வதற்கு ஏற்ற வீடு என எண்ணிய லட்சுமி, அந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.

    அந்த இல்லத்தின் தலைவியான சோமதேவம்மாள் என்பவரிடம் வெள்ளிக்கிழமை விரதம் எப்படி அனுஷ்டிக்கப்படுகிறது என்று கற்றுக்கொடுத்தாள். மேலும் லட்சுமிதேவி நுழைந்த அந்த வீடு செல்வத்தால் நிறைந்தது. லட்சுமிதேவியே இந்த விரதத்தைப் பற்றி சிறப்பாக கூறியிருக்கிறாள் என்றால், அந்த விரதத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு வைக்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டுவரும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்பட்டாலும், சுத்தம் எப்போதுமே நன்மை அளிக்கக்கூடியது அல்லவா?

    வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.

    தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து, தான் இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான் என்ற வரலாறும் உண்டு.

    சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
    சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.

    சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

    இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.

    சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.

    மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும்.

    எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம். 
    புரட்டாசி கார்த்திகை தினமான இன்று விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.
    புரட்டாசி கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது.

    சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர்.ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

    செவ்வாய்க்கு அதிபதி முருகன் ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள்  கார்த்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான். குழந்தை செல்வம் திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும்.

    உப்பில்லா உணவு தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. புரட்டாசி கார்த்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.
    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது ஏகாதசி விரதம்.
    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

    அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர். நாளை வரும் சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ‘பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

    இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்து கொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார்.

    ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால்,  மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, “தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி” என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், “நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ” என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய  மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், “இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே” என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, “உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக...” என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், “சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்” என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம். ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு ‘பாரணை’ என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.
    இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.
    இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

    எண்வகை விரதங்கள்

    சந்தாபண விரதம்
    மஹாசந்தாபண விரதம்
    பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
    அதிகிரிச்சா விரதம்
    பராக விரதம்
    தப்த கிரிச்சா விரதம்
    பதகிரிச்ச விரதம்
    சாந்தாராயன விரதம்

    விரத வகைகள்

    இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

    விநாயக விரதங்கள்


    விநாயக சதுர்த்தி
    ஆவணி சதுர்த்தி
    சங்கடஹர சதுர்த்தி விரதம்
    விநாயக சட்டி விரதம்

    சிவ விரதங்கள்

    ஆனி உத்தரம்
    திருவாதிரை
    சிவராத்திரி
    பிரதோஷ விரதம்
    கேதாரகௌரி விரதம்

    சக்தி விரதங்கள்

    நவராத்திரி
    வரலட்சுமி நோன்பு
    ஆடிப்பூரம்
    ஆடிச் செவ்வாய்
    பங்குனித் திங்கள்
    மாசி மகம்

    கந்த விரதங்கள்

    கந்த சஷ்டி
    ஆடிக்கிருத்திகை
    வைகாசி விசாகம்
    தைப்பூசம்
    திருக்கார்த்திகை விரதம்

    விஷ்ணு விரதங்கள்

    ஏகாதசி விரதம்
    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி சிறப்பு உண்டு. இது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு. நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு உரிய மாதமும் புரட்டாசிதான். புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரமோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற் களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும், புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் புகழ்பெற்றது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. “பெருமாளே, நீயே எல்லாம்” என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. “பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?” என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

    புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன்காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

    பொ.பாலாஜிகணேஷ்
    புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
    புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று மாலை பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பிரதோஷங்களில் சனிக்கிழமை அன்று வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

    இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவதால் அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். எனவே அன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். 
    குலதெய்வத்தைக் கண்டறிந்து வழிபட்டால் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், எளிதில் தீர வழிபிறக்கும்.
    ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது சான்றோர் வாக்கு. எனவே நமக்கெல்லாம் முதன் முதல் தெய்வம் பெற்றோர்கள். அடுத்ததாக மூல முதற் கடவுள் விநாயகப் பெருமான். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் என்று இருக்கும். அந்தக் குலதெய்வத்தைக் கண்டறிந்து வழிபட்டால் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், எளிதில் தீர வழிபிறக்கும். குலதெய்வ வழிபாட்டிற்குப் பிறகு இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மை தரும்.

    இக்காலத்தில் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் விரும்புவதில்லை. ‘அவர் இப்படிப் பொன்கொழிக்க வாழ்கின்றாரே? வீடு வாகனம் வைத்துள்ளாரே?’ என்று பொறாமைப்படுவார்கள். அந்தப் பொறாமையால் தான் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அவை ஏற்படாமல் இருக்க நாம் முறையாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவருடைய குலதெய்வ வழிபாடும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஒரு சிலர் சிவராத்திரி அன்று வழிபடுவர், இன்னும் சிலர் அமாவாசை அன்று வழிபடுவர், மேலும் சிலர் ஆடி மாதத்தில் வழிபடுவர், ஒரு சிலர் வெள்ளிக்கிழமையன்று வழிபடுவர், நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை நம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப வழிபட்டால் ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

    பார்வை பலம் என்பது கிரகங் களுக்கு மட்டுமல்ல, மனிதர் களின் பார்வையிலும் பலம் இருக்கிறது. அது அதிகமாவதைத் தான் ‘கண் திருஷ்டி’ என்று சொல்கிறோம். ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது முன்னோர் வாக்கு. சிலரது பார்வைகள் பட்டாலே உடனடியாக அதன் பலன் தெரியும். பொதுவாகவே குழந்தைகள் அழகாக இருந்தால் பார்ப்பவர்கள் அந்தக் குழந்தையைத் தூக்கி கொஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளின் மீது பதியும் சிலரது பார்வையின் பலத்தால் அந்தக் குழந்தைகள் இரவில் அழத் தொடங்கும். சாப்பாட்டைக் கூடத் தவிர்த்து விடும். எனவேதான் அழகான குழந்தைகளுக்கு அலங்காரம் செய்பவர்கள், குழந்தையின் கன்னத்தில் பொட்டு வைத்துவிடுவர். அதுவும் கருப்பு பொட்டு வைப்பதுதான் முக்கியத்துவம். அதன் மூலம் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது நம்பிக்கை.

    சிலருடைய பார்வையின் வலிமையில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது வழிபாடாகும். அதில் குலதெய்வ வழிபாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இல்லத்தில் எந்தவொரு சுபகாரியம் நடைபெற்றாலும், அதில் பலபேர் வந்து கலந்து கொள்வது வழக்கம். எல்லோருடைய பார்வை பலமும் நம்மீது பதிவதால்தான் விழா முடிந்தபிறகு குடும்பத்துடன் திருஷ்டி சுற்றிக் கொள்ள வேண்டும் என்று குடும்பப் பெரியவர்கள் கூறுவர். அதை முறைப்படி கடைப்பிடித்தால் கண்திருஷ்டியில் இருந்து கண்டிப்பாக தப்பிக்க இயலும்.

    ஒரு மனிதன் கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து யோகமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், தெய்வ வழிபாடுகள் மட்டுமின்றி, ஹோமங்களும் கைகொடுக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை முழுமையாக ஆராய்ந்து, அவர்களது ராசி, நட்சத்திர அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் வீட்டில் உள்ள மையமான இடத்தைத் தேர்ந்தெடுத்து எந்த அமைப்பில் ஹோமம் வைத்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்களை வீட்டில் வைக்கலாம். இல்லையென்றால் கோவிலில் யோகம் தரும் நாளைத் தேர்ந் தெடுத்து வைக்க வேண்டும். அத னால் நற்பலன்களை நாம் உடனடியாகப் பெற முடியும். தடைகள் அகலும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    ஹோமங்களிலே கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், வித்யார்த்த ஹோமம் என எத்தனையோ ஹோமங்கள் இருக்கின்றன. இவற்றில் எந்த ஹோமம் நமக்குப் பொருத்தமான ஹோமம் என்பதை ஆராய்ந்து வீட்டில் செய்வதா, கோவிலில் செய்வதா என்பதை முடிவு செய்து செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். இல்லையெனில் ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொண்டும் நற்பலன் பெறலாம். ஹோமங்களை வீட்டில் நடத்துபவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது நல்லது.

    பொதுவாகவே நல்ல திறமை இருந்தும் முன்னேற்ற முடியவில்லையே என்று நினைப்பவர்கள், நாள் கடந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள், எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்கும் போதே தடை ஏற்படுகின்றதே என்று நினைப்பவர்கள், நல்ல நிலையில் இருந்து சாதாரண நிலையை அடைந்தவர்கள் ஆகியோர் சகல யோகங்களைப் பெறவும், சக்கரவர்த்தியைப் போல வாழவும், துர்க்கை, வராகி போன்ற தெய்வங்களை வழி படுவது சிறப்பானது. இந்த வழிபாடுகளோடு குலதெய்வ வழிபாட்டையும் மாதம் ஒருமுறை மேற்கொண்டால் நமது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

    தேகநலம் சீராக வேண்டுமானாலும், செல்வ வளம் பெருக வேண்டுமானாலும் தெய்வ வழிபாடுகள் கை கொடுக்கும். திருஷ்டி தோஷங்களைப் போக்கும் தெய்வ வழிபாடுகளை முறையாக அறிந்து செய்தால், வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி வளர்ச்சி கூடும். எனவே மறவாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு சகல யோகங்களும் வந்து சேர வழியமைத்துக் கொள்ளுங்கள்.

    எஸ்.அலமு ஸ்ரீனிவாஸ்
    அதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.
    மனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன் ஏழு கண்டங்களை காக்கும் அரசனாக இருந்தான். அவன் சண்டிகையை வணங்கிய தாலேயே ஏழு கண்டங்களையும் வெற்றிக் கொள்ள முடிந்தது.

    இவ்விதம் மங்களன் பூஜித்து வெற்றியடைந்ததால் துர்க்கை தேவி மங்கள சண்டிகை என்று வழங்கப்பட்டாள். நவராத்திரி நாட்களில் சிவனுக்காக கோவில்களில் மகா சண்டி யாகம் என்ற பெயரில் சிறப்பு வழிபாடும் செய்யப்படும். அதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.

    மங்கள சண்டிகை மின்னல் ஒளியை உடையவள், சிங்க வாகனம் கொண்டவள், ஒன்பது மாதர்களால் சூழப்பட்டவள், முக்கண்ணும் பிறை முடியும் உடையவள். சண்டன் என்ற அசுரனைக் கொன்றவள். தனது எட்டுக்கரங்களில் முறையே சங்கு, சக்கரம், கதை, வாள், கேடயம், அம்பு, வில், பாசம் ஆகியவற்றைக் கொண்டிருப்பாள் என்று ஆகமங்கள் இவளை அறிமுகப்படுத்துகின்றன.

    விஷ்ணு முதலான எல்லா தேவர்களும் திரிபுரங்களிலும் வெற்றி உண்டாவதற்காக சகல திரவியங்களாலும் பூஜித்து இந்தத் தேவியைப் போற்றினர். அப்போது மங்கள சண்டி துர்க்கை வடிவாக தோன்றி னாள். பிறகு அவள் தேவர்களை நோக்கி, நீங்கள் பயப்பட வேண்டாம் ருத்திர மூர்த்தியால் திரிபுர வெற்றி உண்டாகும் என்று கூறி மறைந்தாள்.

    துர்க்கையின் வாக்குப்படியே சிவபெருமான் திரிபுரங்களையும் அழித்தார். திரிபுர வெற்றிக்குத் துணை நின்ற மங்கள சண்டிகையை தேவர்கள் தேன், பால், பழங்களோடும் திருப்தி செய்து ஆடல்பாடல் வாத்யங்களாலும், போற்றிசைப் பாடல்களாலும், தியானங்களாலும் பூஜித்து வழிபட்டனர்.

    மங்கள சண்டிகா ஸ்தோத்திரத்தைச் செவ்வாய்க் கிழமைதோறும் சொல்லியே ருத்திர மூர்த்தியானவர் சகல மங்களத்தையும் பெற்றார் என்று சொல்லப்படுகின்றது. இது போலவே அங்காரகனும், மங்களன் என்ற மன்னனும், மங்கையரும், மங்களத்தை விரும்பும் ஆடவரும், தேவர், முனிவர், மனுக்கள், மனிதர்கள் முதலிய யாவரும் மங்கள சண்டிகையைப் பூஜை செய்து அவரவர் விரும்பி மங்களத்தை அடைந்தனர்.

    இந்த மங்கள சண்டிகை சுலோகத்தைச் சொல்பவர் மட்டுமல்லாது காதால் கேட்பவரும்கூட சகல பாக்கியங்களையும் பெறுவர் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
    நவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நவராத்திரி விரதத்தினை சூரிய வம்சத்தில் தோன்றிய வரும், தசரதனின் மைந்தனும், மகாவிஷ்ணுவின் அவதாரமுமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அனுஷ்டித்து உள்ளார். சீதையின் பிரிவினால் வாடிய ராமபிரானை நோக்கி, அன்னையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான மார்க்கத்தை தேடுங்கள்.

    இது சரத் மாதம் லோகமாதாவாகிய தேவியின் திருப்திக்காக நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவருடைய திருவருளும் நமக்கு கிடைக்கும். ஒன்பது ராத்திரியும் உபவாசமிருந்து பூஜை ஹோமம் செய்ய வேண்டுமென்று என்று சொன்னார் நாரத மாமுனி மேலும் விருத்திராசூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்திரன் அனுஷ்தித்தார். மேலும் தேவியின் விஸ்வாமித்திரர், பிருகு, காசியபர் பிரகஸ்பதி, முதலிய எண்ணற்ற ரிஷிகளும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து விரதம் இருந்து பலனை அடைந்தார்கள் என்று நாரதமுனி கூறினார்.

    இதைதொடர்ந்து விரதத்தின் உடைய விதிமுறைகளை அனுஷ்டானங்களை எல்லாம் நாரதர் கூற அவற்றை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்டறிந்தார் பின்பு நாரதரே உடனிருந்து நவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்தார். இதனுடைய பலனாக அஷ்டமி அன்று ஒரு இரவில் மலையின் உச்சியிலே சிம்ம வாகனத்தில் பரமேஸ்வரி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு காட்சி கொடுத்து அருளாசி வழங்கினார். இப்படி யாக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார்.

    ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு ஏற்பட்ட அவப் பெயரை நீக்க நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் என்று நமக்கு புராணங்கள் எடுத்துரைக்கிறது. இப்படியாக எண்ணற்ற முனிவர்களும் அவதார புருஷர்களும் ஞானியர்கள் தேவியினுடைய அருளைப்பெற நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றிருக்கிறார்கள்.

    நவராத்திரி பூஜைக்கு வேண்டிய திரவியங்களையும் வஸ்துக் களையும்அமாவாசை (28-ந்தேதி சனிக்கிழமை) அன்றே சேகரித்துக் கொள்ள வேண்டும் பின்பு அமாவாசை அன்று ஒரு வேளை மட்டும் உணவருந்தி பிரதமை ஆகிய மறுநாள் அதிகாலை எழுந்து நித்திய கரும அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து.

    பிரதமை முதலான எட்டு நாட்களும் உபவாசத்துடன் இரவு பால், பழம் மட்டும் உண்டு, நவமியன்று முழுவதுமாக உபவாசமிருத்து தசமியன்று பாரனணயுடன் விரதத்தை முடிக்க வேண்டும். அல்லது ப்ரதமை முதல் எட்டு நாட்கள் பகல் மட்டும் உணவருந்தி விஜயதசமி தினத்தன்று விரதத்தை நிறைவு செய்யலாம்.
    பிரதமை அன்று ஹஸ்த நட்சத்திரமும் சேருமானல் அது மிகவும் விசேஷமானது அன்றைய தினம் பூஜிப்பவர்களுக்கு தேவியானவள் சர்வாபீஷ்டங்களையும் கொடுப்பாள்.

    நவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். கன்னிகா பூஜைக்கு 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பெண்களே அதற்கு ஏற்றவர்கள் கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோகினி காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்காதேவி, சுபத்திரா ஆகிய வடிவில் அவர்களை பூஜிக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னி என்ற விதத்திலும் அல்லது ஒரே நாளில் ஒன்பது கன்னிகைகளில் என்ற விதத்திலும் பூஜை செய்யலாம். இவ்வாறு கவுமாரி கன்னிகையே பூஜை செய்வதினால் தரித்திர நாசமும் அத்துடன் ஆயுள் விருத்தியும் தன விருத்தியும் ஏற்படும் சத்துக்கள் அழிந்து போவர். திரிபுரா கன்னிகையை பூஜை செய்வதினால் தர்மம் விருத்தியடையும். தனதானியங்களும் விருத்தியடையும், புத்தர பௌத்திராதிகள் ஏற்பட்டு வம்சம் விருத்தியடையும். கல்யாணியை பூஜிப்பதால் வித்தை, ராஜ்ஜியம், சுகம், உண்டாகும். ரோகிணியை பூஜிப்பதால் ரோக நாசம் ஏற்படும்.

    காளியை பூஜிப்பதால் சத்துருக்கள் ஒழிந்து போவார்கள். சண்டிகையை பூஜிப்பதால் ஐஸ்வர்யம் உண்டாகும். சாம்பவியை பூஜிப்பதால் கஷ்டத்தை தருகின்ற தரித்திரங்கள் நிவர்த்தியாகும்.  துர்க்கையை பூஜிப்பதால் துர்க்கை சத்ரு நாசம், ஜெயிக்க முடியாத காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலும், பரலோகத்தில் சுகமும் ஏற்படும். சுபத்திரையை பூஜிப்பதால் மனோபீஷ்டங்கள் நிறைவேறும்.

    குமாரி முதலான ஒன்பது தேவியரை பூஜிக்கும் பொழுது அவர்களுடைய நாமங்களையும், தியாகங்களையும் தியானித்து பூஜிப்பது உத்தமம். சுவாசினியை அதாவது சுமங்கலியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களாக பாவித்து அவர்களை பூஜிக்க வேண்டும்.

    இப்படியாக சிறப்புவாய்ந்த நவராத்திரி நாளை மிகவும் பக்தியோடு சிரத்தையோடு அனுஷ்டித்து வருவோருக்கு தேவியின் அருள் நிச்சயம் உண்டாகும். நம் வாழ்வில் எல்லாவிதமான சுகங்களையும் தேவி அருள்வாள் என பிரார்த்தித்து எல்லாம் வல்ல இறைவனாகிய உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.
    ×