search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னிகா விரத பூஜையும் பலன்களும்
    X
    கன்னிகா விரத பூஜையும் பலன்களும்

    கன்னிகா விரத பூஜையும் பலன்களும்

    நவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நவராத்திரி விரதத்தினை சூரிய வம்சத்தில் தோன்றிய வரும், தசரதனின் மைந்தனும், மகாவிஷ்ணுவின் அவதாரமுமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அனுஷ்டித்து உள்ளார். சீதையின் பிரிவினால் வாடிய ராமபிரானை நோக்கி, அன்னையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான மார்க்கத்தை தேடுங்கள்.

    இது சரத் மாதம் லோகமாதாவாகிய தேவியின் திருப்திக்காக நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவருடைய திருவருளும் நமக்கு கிடைக்கும். ஒன்பது ராத்திரியும் உபவாசமிருந்து பூஜை ஹோமம் செய்ய வேண்டுமென்று என்று சொன்னார் நாரத மாமுனி மேலும் விருத்திராசூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்திரன் அனுஷ்தித்தார். மேலும் தேவியின் விஸ்வாமித்திரர், பிருகு, காசியபர் பிரகஸ்பதி, முதலிய எண்ணற்ற ரிஷிகளும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து விரதம் இருந்து பலனை அடைந்தார்கள் என்று நாரதமுனி கூறினார்.

    இதைதொடர்ந்து விரதத்தின் உடைய விதிமுறைகளை அனுஷ்டானங்களை எல்லாம் நாரதர் கூற அவற்றை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்டறிந்தார் பின்பு நாரதரே உடனிருந்து நவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்தார். இதனுடைய பலனாக அஷ்டமி அன்று ஒரு இரவில் மலையின் உச்சியிலே சிம்ம வாகனத்தில் பரமேஸ்வரி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு காட்சி கொடுத்து அருளாசி வழங்கினார். இப்படி யாக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார்.

    ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு ஏற்பட்ட அவப் பெயரை நீக்க நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் என்று நமக்கு புராணங்கள் எடுத்துரைக்கிறது. இப்படியாக எண்ணற்ற முனிவர்களும் அவதார புருஷர்களும் ஞானியர்கள் தேவியினுடைய அருளைப்பெற நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றிருக்கிறார்கள்.

    நவராத்திரி பூஜைக்கு வேண்டிய திரவியங்களையும் வஸ்துக் களையும்அமாவாசை (28-ந்தேதி சனிக்கிழமை) அன்றே சேகரித்துக் கொள்ள வேண்டும் பின்பு அமாவாசை அன்று ஒரு வேளை மட்டும் உணவருந்தி பிரதமை ஆகிய மறுநாள் அதிகாலை எழுந்து நித்திய கரும அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து.

    பிரதமை முதலான எட்டு நாட்களும் உபவாசத்துடன் இரவு பால், பழம் மட்டும் உண்டு, நவமியன்று முழுவதுமாக உபவாசமிருத்து தசமியன்று பாரனணயுடன் விரதத்தை முடிக்க வேண்டும். அல்லது ப்ரதமை முதல் எட்டு நாட்கள் பகல் மட்டும் உணவருந்தி விஜயதசமி தினத்தன்று விரதத்தை நிறைவு செய்யலாம்.
    பிரதமை அன்று ஹஸ்த நட்சத்திரமும் சேருமானல் அது மிகவும் விசேஷமானது அன்றைய தினம் பூஜிப்பவர்களுக்கு தேவியானவள் சர்வாபீஷ்டங்களையும் கொடுப்பாள்.

    நவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். கன்னிகா பூஜைக்கு 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பெண்களே அதற்கு ஏற்றவர்கள் கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோகினி காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்காதேவி, சுபத்திரா ஆகிய வடிவில் அவர்களை பூஜிக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னி என்ற விதத்திலும் அல்லது ஒரே நாளில் ஒன்பது கன்னிகைகளில் என்ற விதத்திலும் பூஜை செய்யலாம். இவ்வாறு கவுமாரி கன்னிகையே பூஜை செய்வதினால் தரித்திர நாசமும் அத்துடன் ஆயுள் விருத்தியும் தன விருத்தியும் ஏற்படும் சத்துக்கள் அழிந்து போவர். திரிபுரா கன்னிகையை பூஜை செய்வதினால் தர்மம் விருத்தியடையும். தனதானியங்களும் விருத்தியடையும், புத்தர பௌத்திராதிகள் ஏற்பட்டு வம்சம் விருத்தியடையும். கல்யாணியை பூஜிப்பதால் வித்தை, ராஜ்ஜியம், சுகம், உண்டாகும். ரோகிணியை பூஜிப்பதால் ரோக நாசம் ஏற்படும்.

    காளியை பூஜிப்பதால் சத்துருக்கள் ஒழிந்து போவார்கள். சண்டிகையை பூஜிப்பதால் ஐஸ்வர்யம் உண்டாகும். சாம்பவியை பூஜிப்பதால் கஷ்டத்தை தருகின்ற தரித்திரங்கள் நிவர்த்தியாகும்.  துர்க்கையை பூஜிப்பதால் துர்க்கை சத்ரு நாசம், ஜெயிக்க முடியாத காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலும், பரலோகத்தில் சுகமும் ஏற்படும். சுபத்திரையை பூஜிப்பதால் மனோபீஷ்டங்கள் நிறைவேறும்.

    குமாரி முதலான ஒன்பது தேவியரை பூஜிக்கும் பொழுது அவர்களுடைய நாமங்களையும், தியாகங்களையும் தியானித்து பூஜிப்பது உத்தமம். சுவாசினியை அதாவது சுமங்கலியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களாக பாவித்து அவர்களை பூஜிக்க வேண்டும்.

    இப்படியாக சிறப்புவாய்ந்த நவராத்திரி நாளை மிகவும் பக்தியோடு சிரத்தையோடு அனுஷ்டித்து வருவோருக்கு தேவியின் அருள் நிச்சயம் உண்டாகும். நம் வாழ்வில் எல்லாவிதமான சுகங்களையும் தேவி அருள்வாள் என பிரார்த்தித்து எல்லாம் வல்ல இறைவனாகிய உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.
    Next Story
    ×