என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பல்வேறு விரதங்கள் இருந்தாலும் தம்பதியர் ஒற்றுமைக்கு இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. இன்று விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்பவைதான் அவை. இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைபிடித்தால் மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை

    சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. சிவனோடு இணைந்து உமாமகேஸ்வரியின் வடிவமும் இணைவது சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் அற்புத வடிவம். இவர்களை ஒரு சேரத் தியானித்து ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம்.

    இந்த விரதத்தைத் தொடங்கினால் தொடர்ந்து 16 வருடங்கள் வரை இருக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து சோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோயிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.

    பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இன்று உமா மகேஸ்வரரை வணங்கி விரதம் இருந்து எல்லா நலமும் வளமும் பெற பிரார்த்திக்கிறோம்.
    வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் விரத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது பொதுமக்கள் வழக்கம்.
    நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். சூரியக் கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் இந்து மத விழா இது. நான்கு நாட்களுக்கு இது நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.

    முதல் நாளில் குளித்து விட்டு சுத்தமாக பாரம்பரிய உணவு வகைகளுடன் விருந்து சமைத்து படைப்பார்கள்.. இரண்டாவது நாள் உண்ணா நோன்பு இருப்பார்கள். மூன்றாவது நாளில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நின்றபடி சூரியனை வழிபட்டு அர்கயம் எனப்படும் நீரை கையில் ஏந்தி, அஸ்தமானமாகும் சூரியனுக்கு சமர்பிப்பார்கள்.  

    நான்காவது, சூரிய உதயத்தின் போது நீர் நிலைகளில் நின்று பெண்கள் படைப்பார்கள். மூங்கில் சிம்புகள் பின்னப்பட்ட தட்டு அல்லது முறத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கையில் விளையும் பொருட்களை வைத்து படைப்பார்கள். சன்னமான அரிசி மாவு, நெய், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்த்தை படைத்து உண்பார்கள்.

    வடமாநிலங்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் விரத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது பொதுமக்கள் வழக்கம். 
    முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
    முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

    வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

    கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை முடித்து உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

    விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.
    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து, கந்தப்பெருமானின் திருவடியை வணங்கி நிலைத்த இன்பத்தைப் பெறுவோம்.
    முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் முக்கியமானது ‘கந்தசஷ்டி’ பெருவிழாவாகும். ‘சஷ்டி’ என்றால் ‘ஆறு’ என்று பொருள். அமாவாசை முடிந்து, வளர்பிறையில் வரும் ஆறாவது திதி ‘சஷ்டி’ திதியாகும். கச்சியப்ப சிவாசாரியர் எழுதிய கந்தபுராணமும், பாம்பன் சுவாமிகளின் ‘முதல்வன் புராண முடிப்பு’ம் இந்த விழாவைப் பற்றி விளக்குகின்றன.

    தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவனது தம்பிகள் தாருகன், சிங்கமுகன் ஆகியோரோடு, முருகப்பெருமான் போரிட்டு வென்றார். அதன் மூலம் தேவர்களை சிறை மீட்டு, அவர்களுக்கான ஆட்சி உரிமையை பெற்றுத்தந்தார். கந்தனுக்கும், சூரபதுமனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர். தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த வரலாற்றை மையமாகக் கொண்ட தெய்வப் பெருவிழாவே ‘கந்தசஷ்டி’ திருவிழா.

    ஆன்மாக்களுக்கு அல்லது மனித உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. அந்த மூன்றில் மூலமாக விளங்கும் முதல் அழுக்கு ‘ஆணவம்.’ அந்த ஆணவத்தை ஒட்டி ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் ‘மாயை, கன்மம்’ ஆகியவை.

    மாயை - உலக பொருட்களின் மீது கவர்ச்சியை உண்டாக்கி, ஆன்மாக்களுக்கு அதன் மேல் மோகத்தை ஏற்படுத்தும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. மயக்கத்தை உண்டாக்குதலும், ஆன்மாக்களை உலக பொருளின் மேல் பற்று கொள்ளச் செய்வது ஆகிய செயல்களைச் செய்வது மாயை. சூரபதுமனின் தம்பியரில் ஒருவனான தாருகன், இந்த மாயையின் வடிவம் கொண்டவன்.

    அடுத்த அழுக்கானது கன்மம். இந்த கன்மமும் இரண்டு வகைப்படும். நல்வினை, தீவினை என இரண்டு நிலையில் இருந்த சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன்.

    மூன்றாவது அழுக்கு, ஆணவம். இது ‘நான்’ என்றும், ‘எனது’ என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மேற்கண்ட மூன்று அழுக்குகளும், ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாட்களில் அவைகளை அழித்து, ஆன்மாக்களுக்கு உண்மை ஞானத்தை கொடுத்தார் கந்தப் பெருமான். இதுவே கந்தசஷ்டி விழாவின் பெரும் தத்துவம்.

    இந்த மூன்று அழுக்குகளில் இருந்து மீண்ட மனிதனின் ஆன்மா, இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும், உலகப் பொருட்களும் இறைவனின் படைப்புகள் என்பதை உணர்ந்தால், மாயையில் இருந்து விடுபடலாம். தீவினைகளை தவிர்க்க வேண்டும். நல்வினையைச் செய்யும் போதும் கூட, அவற்றை நாம் செய்கிறோம் என்று கருதாமல், இறைவன் நம் மூலமாக அவற்றை செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினையின் பயன் நம்மைச் சேராது. மறுபிறப்பும் நிகழாது. அறவாழ்க்கையை மேற்கொண்டு, எப்பொழுதும் இறைவனை சிந்தித்து, ‘எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன’ என்று கருதினால் ஆணவத்தில் இருந்து விடுபடலாம்.

    மேற்கண்ட தத்துவத்தை நம்முடைய கையில் உள்ள ஐந்து விரல்கள் மூலமாக அறியலாம். இதில் தனித்திருக்கும் பெருவிரல் இறைவனையும், இணைந்திருக்கும் மற்ற 4 விரல்களில் ஆள்காட்டி விரல் ஆன்மாவையும், மற்ற மூன்று விரல்கள் ஆணவன், மாயை, கன்மம் ஆகியவற்றையும் குறிப்பதாகும். ஆள்காட்டி விரல் மற்ற மூன்று விரல்களிடம் இருந்து விலகி, சற்றே வளைந்து பெருவிரலை அடைய முடியும். அதாவது ஆணவன், மாயை, கன்மம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டால் ஆன்மா இறைவனை சேரும். தட்சிணாமூர்த்தி சுவாமியின் ‘சின் முத்திரை’ இந்த தத்துவத்தைத்தான் குறிக்கின்றன.

    எனவே கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து, கந்தப்பெருமானின் திருவடியை வணங்கி நிலைத்த இன்பத்தைப் பெறுவோம்.

    செ.வே.சதாநந்தன்
    கந்த சஷ்டி உபவாசம் மிகவும் சக்தி வாய்ந்தது. தீராத பல பிரச்சினைகளை இவ்விரதம் இருப்பதால் முருகன் தீர்த்து வைக்கிறார் என நம்பப்படுகிறது.
    தீபாவளிக்கு பிறகு வரும் சஷ்டி திதி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டி நாளன்றுதான் அதர்மத்தை செய்த அசுரனை முருகப்பெருமான் அழித்தார்.

    இதனால் திருச்செந்தூரில் இவ்விழா மிக பிரசித்தி பெற்று விளங்குகிறது தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விழாவுக்கு காப்பு கட்டிய உடன் விரதம் துவக்குகின்றனர் பக்தர்கள் ஆறாம் நாள் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. பகல் முழுவதும் விரதம் இருந்து இரவு மட்டும் சாத்வீகமான உணவை அருந்துகின்றனர். சிலர் பாலும் பழமும் மட்டுமே அருந்துகின்றனர்.

    மலேசியா, சிங்கப்பூர் என கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்து திருச்செந்தூரில் பக்தர்கள் உபவாசம் இருக்கின்றனர்.

    இந்த உபவாசம் மிகவும் சக்தி வாய்ந்தது. தீராத பல பிரச்சினைகளை முருகன் இவ்விரதம் இருப்பதால் தீர்த்து வைக்கிறார் என நம்பப்படுகிறது.

    முக்கியமாக குழந்தை இல்லாதோருக்கு இந்த விரதம் கண்கண்ட மருந்து எனவும் கூறப்படுகிறது. 6 நாட்கள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்களாக இருந்தாலும் கந்த சஷ்டி இறுதி நாளன்று விரதம் இருந்து காலையில் கடலில் குளித்து முருகனின் சிந்தனைகள், கதைகள், மந்திரங்களை, பாடல்களை மட்டுமே கேட்டும் பார்த்தும் சொல்லி வரவேண்டும் மாலை சூரனை வதம் செய்து முடித்த உடன் கடலில் நாழிக்கிணற்றில் குளித்து முருகனை வணங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்றொரு பழமொழி உண்டு அதன் உண்மையான அர்த்தமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உருவாகும் என்பதேயாகும்

    அதனால் குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானின் பேரருள் பெறலாம். இது மட்டுமல்லாமல் எதிரிகள் தொல்லை, வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் கந்த சஷ்டி விரதம் கண்கண்ட மருந்து இந்த வருடம் கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் மட்டுமின்றி முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் அனைத்து கோயில்களிலும் வரும் நவம்பர் 2ம்தேதியன்று கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.
    முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலும் செவ்வாய்கிழமை முருகனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலனை அறிந்து கொள்ளலாம்.
    முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

    வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம்

    வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது;நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது;

    திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

    நட்சத்திர விரதம்: கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

    விரதம் இருக்கும் முறை: கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும். மாலையில் வீட்டில் உள்ள முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தூப தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். தேவரிஷிகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார்.

    திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட, ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.

    கந்த சஷ்டி விரதம்  இருக்கும் முறை: ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமை தொடங்கி ஆறு நாள்கள் விரதம் இருக்கவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள பூஜையறையில் பூர்ணகும்பம் வைத்து, அதில் முருகப் பெருமானை உரிய மந்திரங்களால் ஆவாஹணம் செய்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யவேண்டும். பகலில் ஒருவேளை மட்டும் உணவு கொள்ளலாம். இப்படி ஆறுநாள்கள் விரதம் இருக்கமுடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

    குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது. அதனால்தான், 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்று கூறுகிறார்கள். சஷ்டியில் விரதம் இருந்தால், கருப்பையில் குழந்தை வரும் என்பதே இதன் பொருள்.

    முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.
    கணவன் - மனைவி கருத்து வேறுபாடு இருப்பவர்கள், கேதார கவுரி விரதத்தை கடைப்பிடித்தால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
    27-10-2019 கேதார கவுரி நோன்பு

    ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை.. சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்பது நம்மிடையே நிலவி வரும் நம்பிக்கை. ‘சக்தி’ என்றால் ‘உயிர்.’ ‘சிவம்’ என்றால் ‘உடல்.’ உயிர் இல்லாத உடலால் தனித்து இயங்க முடியாது. கணவனும் மனைவியும் அன்பையும், ஐக்கியத்தையும் பரிமாறிக் கொண்டால் மட்டுமே இல்லறம் நல்லறமாகும்.

    தம்பதிகள் இருவரும் பொருளீட்டினால்தான் குடும்ப தேவையை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால், தம்பதிகள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டது. அதுதான் விரிசலை உண்டாக்கி, விவாகரத்துக்கு வித்திடுகிறது.

    ஜோதிட ரீதியாக கணவன் - மனைவி கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

    திருமணம் தொடர்பான பாவங்களான ஒன்றாம் இடமான லக்னம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் எட்டாம் இடமான ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் மற்றும் அதன் அதிபதிகள் வலிமையுடன் இருக்க வேண்டும். இந்த பாவங்களுக்கு பாவ கிரகங்கள் , மறைவிட அதிபதிகளின் சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் அதன் அதிபதிகள் நீச்சம், பகை, வக்ரம், அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக 7-ம் அதிபதி பகை, நீச்சம், அஸ்தமனம் பெறாமல் வலிமையுடன் இருக்க வேண்டும்.

    ஆண் - பெண் இருவருக்கும், திருமணமாகி 15 ஆண்டுகள் வரை ஒரே தசை வராமல் இருப்பது சிறப்பு. ராசிக் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். நட்சத்திர பொருத்தம் பார்க்கக் கூடாது. திருமணத்தின் போது ஆண், பெண் இருவரில், ஒருவருக்காவது கேந்திர, திரிகோணதிபதிகளின் தசை நடக்க வேண்டும். தீய பலன்களை தரும் தசை நடந்தால் ராசிக் கட்டப் பொருத்தம் இருந்தாலும் மண வாழ்வு சங்கடம் தரும்.

    இருவரின் ஜாதகத்திலும் பகை கிரகங்களின் தசை நடந்தால் கருத்து வேறுபாடு, பிரிவினை அதிகரிக்கும். தசா நாதர்களை விட நட்சத்திர நாதர்கள் பகை கிரகமாக இல்லாமல் இருக்க வேண்டும். நீதிமன்ற வாசலில் நிற்கும் பல தம் பதிகளின் ஜாதகத்தை ஆய்வு செய்தால், ஜாதகத்தில் எந்த பிரச்சினையும் தென்படாது. தம்பதிகளின் தசையை நடத்தும் கிரகம் பகை கிரகங்களாக இருக்கும் அல்லது தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரம் பகை கிரக நட்சத்திரமாக இருக்கும். தசையை நடத்தும் கிரகத்தை விட தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். கேந்திர திரிகோணதிபதிகள் தசை நடக்கும் போது சந்திக்கும் இடர்பாடுகளுக்கு தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆன தம்பதியினர் கூட இந்த கிரகங்களின் தசா காலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர்.

    மேலும் ஜனன கால ஜாதகத்தில் ஆண், பெண் யாருக்கேனும் பகை கிரகங்களின் சேர்க்கை இருந்தால், பல விரும்பத்தகாத மன வருத்தத்தை திருமணத்திற்கு முன் அல்லது பின் தருகிறது. குறிப்பிட்ட சில கிரக இணைவுகள் திரு மணத்தை நடத்தி தருவதில் தாமத நிலையை ஏற்படுத்துகிறது. ஒரு சில கிரக இணைவுகள் திருமணத்திற்கு பிறகு பிரச்சினையை உருவாக்கும். மண வாழ்வையே முறிக்கும் சக்தி படைத்தவைகள்.

    7-ம் அதிபதியின் சாரநாதன் வலிமை இழந்து நிற்பது, பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு-கேது சம்பந்தம், ஆண் ஜாதகத்தில் சுக்ரன், ராகு- கேது சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். பெண் ஜாதகத்தின் சுக்ரனுக்கும், ஆண் ஜாதகத்தின் செவ்வாய்க்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்.

    பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கு தீர்வையும் தந்து இருக்கிறது. மேற்கண்ட காரணங்களால் கணவன் - மனைவி கருத்து வேறுபாடு இருப்பவர்கள், கேதார கவுரி விரதத்தை கடைப்பிடித்தால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

    ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். அந்த மாதம் முழுவதும் சூரியன் நீச்சமாக தனது வலிமை முழுவதையும் இழந்து இருப்பார். ஆனால் அமாவாசையன்று சூரியனுடன் சந்திரன் இணையும் காலம் சூரியனுக்கு வலிமை அதிகரிக்கும்.

    சூரியன் - பிதுர்காரகன் (தந்தை)

    சந்திரன் - மாதுர்காரகன் (தாய் )

    சூரியனின் அதிதேவதை - பரமேஸ்வரன்

    சந்திரனின் அதிதேவதை - கவுரி

    நீச்சம் பெற்ற தந்தை சூரியனோடு, தாயான சந்திரன் இணையும் நாள், ஐப்பசி அமாவாசை. ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்ற கருத்தை உணர்த்த, பலம் இழந்து நீச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பிதுர்காரகன் சூரியனோடு, சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி இணைவு நடைபெறும் அந்த அமாவாசை நாளில் சிவ சக்தியை நினைத்து ‘கேதார கவுரி விரதம்’ கடைப்பிடித்தால் கணவனின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஐக்கியமும் பெருகும்.

    சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அதாவது கணவன் வலிமை குறைந்தவராக இருந்தால் கூட, மனைவி துணை நிற்க கணவன் நிலை சீராகும். கேதார கவுரி நோன்பை கடைப்பிடிக்கும் பழக்கம் எல்லாரிடமும் இல்லை. பழக்கம் இல்லாதவர்கள் பார்வதி - பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ வழிபிறக்கும்.

    அன்றைய தினம் கால புருஷ 7-ம் அதிபதி சுக்ரனும் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பார்வதி பரமேஸ்வர வழிபாடு, பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். மேலும் ஜனன கால ஜாதகத்தில் 8-ம் இட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள், 21 சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற, சிவ - பார்வதி அருளால் திருமணத் தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து நீராடி, சிவபூசை செய்து விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.
    விரதம் இருந்தால் உடலும் உள்ளமும் தூய்மை பெறும். விரதங்கள் பல. அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
    1. சோமவிரதம்
    2. திருவாதிரை விரதம்
    3. உமா மகேசுவர விரதம்
    4. மகாசிவராத்திரி விரதம்
    5. கேதார விரதம்
    6. கல்யாண சுந்தரர் விரதம்
    7. சூல விரதம் (பாசுபத விரதம்)
    8. இடப விரதம் (அஷ்டமி விரதம்) ஆகியவையே அந்த 8 விரதங்களாகும்.

    இனி தீபாவளித் தத்துவத்தைப் பார்ப்போம்.

    தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

    பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சம்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால், கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை. அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்படவில்லை.

    தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை.

    தீபத்தை வரிசையாக வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து நீராடி, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க. தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து நீராடி, சிவபூசை செய்து விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.

    தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
    என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

    தீபாவளி யன்று மது மாமிசங்களை சாப்பிட்டு களியாட்டம் செய்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவர். இனியேனும் இந்தத் தீய நெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று மக்கள் நலமும், பலமும் பெற வேண்டும்.

    தீபாவளி விரதத்தில் கால ஓட்டத்தில் பல மாறுதல்கள் ஆகிவிட்டது. தீபாவளியன்று பகலும் இரவும் வயிறுபுடைக்க சாப்பிட்டுத் தூங்கி விழித்து அதிகாலை எண்ணெயிட்டு நீராடி புத்தாடை உடுத்தி பலப்பல ஆகாரங்கள் சாப்பிட்டுப் பட்டாசுகள் வெடித்துக் குசாலாக இருந்து கொண்டு நண்பர்களையும் பந்துமித்திரர்களையும் “கங்கா ஸ்நானம் ஆச்சோ” என குசலம் விசாரிப்பது நடைமுறையாகிவிட்டது.

    தீபங்களை ஏற்றினால் இருள்தானே விலகிவிடும். அதுபோல, நம் உள்ளக்கோயிலில் ஞானவிளக்கை ஏற்றினால் அறியாமையாகிய இருள்தானே விலகிவிடும். இதை அப்பர் சுவாமிகள்

    உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
    மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
    இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
    கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே.
    என்று அற்புதமாக பாடுகின்றார்.

    இவ்வாறு ஞானவிளக்கேற்றி அறியாமையை அகற்றுவதே தீபாவளிப் பண்டிகையின் உண்மையான நோக்கமாகும். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளவேண்டும். இறைவனுடைய திருநாமங்கள் தீய சக்திகளை அழிக்கும் படைக்கலங்கலாகும்.

    படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
    இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
    துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
    அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.

    என்று அருளிச்செய்த திருநாவுக்கரசரது நற்றமிழ்ப்பாடலால் இது விளங்குகின்றது. இதனை அறிந்து நாம் தீபாவளி விரதமிருந்து சிவபெருமானின் திருவருளை அடைய வேண்டும்.
    பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.
    சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும்.

    பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும்.

    “நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
    புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
    குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
    சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.”
    (என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்)

    பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.

    நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
    சாய்பாபாவை குருவாக ஏற்று வழிபட்டு வருகின்றனர். குரு (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது.
    சாய்பாபாவை குருவாக ஏற்று வழிபட்டனர். குரு (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

    2. இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.

    3. இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    5. காலை அல்லது மாலையில் சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன்மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும், நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும்) பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

    7. 9 வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

    8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைப்பிடிக்கலாம்.

    9. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
    அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அன்னபூரணி விரதம் கடைப்பிடிப்பவர் வீட்டில் என்றும் பஞ்சமே ஏற்படாது.
    விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும். அன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் எதற்கும் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் பட்டினி, பசி, நோய், வறுமை, தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். அன்னபூரணி தேவியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.

    ஒரு மனிதனின் அடிப்படை தேவை உணவாகும். உணவு உண்டால் தான் ஒருவர் உயிர் வாழ முடியும். அப்படிப்பட்ட அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும்.

    அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு வாய்ந்தாதகும். இந்த பூஜையை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும்.

    கும்பத்தில் என்றும் ஏழ்மை நிலை ஏற்படாமல் வாழ்வில் எல்லா செல்வங்களும் கிடைக்கப்பெரும். அன்னபூரணி விரதம் கடைப்பிடிப்பவர் வீட்டில் என்றும் பஞ்சமே ஏற்படாது.

    அன்னபூரணி விரதம் இருக்கும் முறை

    அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து உள்ளத்தூய்மையுடன் தங்கள் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
    ஒரு மணப்பலகையின் மீது வெள்ளை துணியை போட்டு அதன் மீது ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து அதில் அரிசி தானியங்கள் வைக்க வேண்டும்.
    பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலையை வைக்க வேண்டும்.
    அன்னபூரணிக்கு வாசனை மலர்கள், பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் காட்ட வேண்டும் வேண்டும்.
    பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.
    பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும்.
    இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவு உண்ணாமல் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
    முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு, பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும்.
    அன்னபூரணிக்கு பிடித்த உணவு பாயாசம்.எந்தவிதமான பாயாசமாகவும் இருக்கலாம். உலர் பழவகை, வாழைப்பழம், கற்கண்டு வைத்து வழிபடலாம்.
    அன்ன பூரணி விரதத்தில் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்..
    கைநிறைய மலர்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்க வேண்டும்.
    நாமும் அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை பிராத்தித்து வேண்டிய வரத்தை பெறுவோம்.
    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வார விரதம்: கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

    விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.

    மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.
    ×