search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
    X
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

    முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 21 விதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1. காலை, இரவு சாப்பிடக்கூடாது.
    2. மதியம் ஒரு வேளை மட்டும் வாழை இலையில் சாப்பிடவும், பச்சரிசி சாதம் உகந்தது.
    3. சமையல் தாழிக்க கூடாது.
    4. புதுப்பாத்திரத்தில் அல்லது சுத்தமான பாத்திரத்தில் சமையல் செய்ய வேண்டும்.
    5. காலை சூரியன் உதிக்கும் முன்பும், மாலை சூரியன் மறையும் முன்பும் தினமும் இரண்டு வேளை கண்டிப்பாக குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.
    6. எப்போதும் முத்தாரம்மனை போற்றி வழிபட வேண்டும்.
    7. கண்ட இடத்தில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. தரையில் புதுப்பாய் விரித்து படுக்கவும்.
    8. அசைவ உணவு உண்ணக்கூடாது.
    9. மது அருந்தக்கூடாது.
    10. புகை பிடிக்க கூடாது.
    11. பகலில் தூங்க கூடாது.
    12. காலில் செருப்பு அணியக்கூடாது.
    13. தலையில் எண்ணை தேய்க்கவோ, முடிவெட்டவோ, சவரம் பண்ணவோ கூடாது.
    14. பிரம்மச்சாரியம் கடைபிடிக்க வேண்டும்.
    15. வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு ஆயுதங்கள் தவிர்ப்பது நல்லது.
    16. பக்தர்கள் விரும்பிய வேடம் அணியலாம்.
    17. காளி வேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டும், 50 வயதுக்கு மேற்பட்டும் இருக்க வேண்டும்.
    18. குலசை முத்தாரம்மனுக்கு 10 நாள் கடும் விரதம் இருந்தாலே போதுமானது. 21 நாள், 31 நாள், 48 நாள் விரதம் இருப்பது, அவரவர் விருப்பத்தை பொருத்தது.
    19. வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.
    20. வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
    21.வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
    Next Story
    ×