என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். செவ்வாய் விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

    கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 15)அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

    இந்த ஆண்டு ஆடி மாதம் 5 செவ்வாய்க்கிழமை வருகிறது. அதாவது ஜூலை மாதம் 18, 25 ஆகஸ்டு மாதம் 1, 8, 15-ந் தேதிகளில் செவ்வாய்க்கிழமை வருகிறது. இந்த செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சோறு கொடுப்பது மிக மிக நன்று.

    ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று, செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். நிவேதனத்திற்குச் செந்நிறக் கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடவேண்டும்.

    ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் அமைத்தலோ நல்லது. இவ்விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

    ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளை திருநாளாக கொண்டாடுவது தனிச்சிறப்பு. அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி! ‘கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் நோன்பு இது’ என்று பெரிய வர்கள் சொல்வார்கள்.

    கடைசி ஆடிச்செவ்வாய் அன்று வருடத்திற் கொருமுறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைத் தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர். சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன் அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    காலத்தின் மாற்றங்களினால் இத்திருவிழா அநேக இடங்களில் கொண்டாடப்படாமல் நின்று விட்டது சில கிராமங்களில் மட்டும் இதை மறைய விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகிறார்கள்.
    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஆடி அமாவாசை கொஞ்சம் அதீத முக்கியத்துவத்தை பெற்றுத் திகழ்கிறது.
    23-7-2017 ஆடி அமாவாசை

    இறை வழிபாடு என்பது, நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது விரதங்கள். அத்தகைய விரதங்களில் முன்னோர்களையும், தாய்- தந்தையரையும் வழிபடும் விரதம் என்பது சிறப்பு வாய்ந்ததாகத்தானே இருக்கும்.

    காலமான தங்களின் முன்னோர்கள் மற்றும் தாய்- தந்தையரை குறித்து, அவர்கள் நற்கதி அடையும் வகையில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் சிறப்புக்குரியவை. அமாவாசை, பவுர்ணமி போன்ற திதிகளில் இந்த விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் இதற்கு சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஆடி அமாவாசை கொஞ்சம் அதீத முக்கியத்துவத்தை பெற்றுத் திகழ்கிறது.

    ‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக் கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள்.

    சூரியன்- பிதுர்க்காரகன், சந்திரன்- மாதுர்க்காரகன். இவர்கள் இருவரையும் சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் மாதம் என்பதால்தான், ஆடி அமாவாசை மகத்துவம் பெற்று விளங்குகிறது. அன்றைய தினம் முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுத்து, புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். மேலும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நாம் செய்த பாவங்கள் விலகும். இந்த விரதம் தீய வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.

    சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது.

    ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

    நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று வீட்டில் இறந்த மூதாதையர்கள் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    விரதம் இருக்கும் முறை :

    ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல், இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

    அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்களை படைத்து துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.

    ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கண வரின் பரிபூர அன்பைப் பெறலாம்.

    2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

    3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.

    4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

    5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

    6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.
    திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து மானசீகமாக அம்மனை வேண்டி, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்.
    திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார். இந்த ஆண்டு ஜூலை 21, 28, ஆகஸ்டு 4, 11-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை வருகிறது. மேலும், ஆடி வெள்ளிக் கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம்.

    இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால், சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும். சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி பெண்கள் அம்மனிடம் வேண்டிக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.
    வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். அன்று பெண்கள் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

    மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை வீடுகளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுசரிப்பார்கள். சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.

    ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது. புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வாடிக்கை. கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறும்.
    ராகுகால துர்க்கை பூஜையை கோவிலில் முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகுகால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும்.
    ராகுகால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகுகால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.

    வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

    செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகுகாலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.
    முருகனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமான ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் முருகனுக்கு விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை விரதம்வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக, பக்தர்கள் நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு மாலையில் சென்று நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
    நந்தியெம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
    வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுமே, நந்தியைச் சென்று வழிபட்டு வருவதில் தவறில்லை. ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால் பிரதோஷ நாளில் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நந்தியெம் பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டு வந்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

    திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால், மனசஞ்சலங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். நல் எண்ணங்கள் உருவாகும்.

    செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால் உணவுப் பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் பெருகும்.

    புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால் புத்திர விருத்தியும், ஆண் சந்தான பாக்கியமும் கிடைக்கும்.

    வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதமிருந்து வழிபட்டால், படிப்பில் இருந்த தடை அகலும். கல்வி, ஞானம் பெருகும். மதி நுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.

    வெள்ளிக்கிழமை அன்று வரும் பிரதோஷ விரதமிருந்து வழிபாட்டால் பகை விலகும். பாசம் கூடும்.

    சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதமிருந்து வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    எல்லாப் பிரதோஷ நாட்களிலும் சென்று நந்தியை விரதமிருந்து வழிபாடு செய்தால், நல்ல வாழ்க்கை அமைய வழிகாட்டுவார்.
    இந்து மதத்தில் தினமும் கடைபிடிக்கப்படும் விரதங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. வார நாட்களில் கடைபிடிக்கப்படும் விரதங்களால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒரு வேளை உணவருந்தலாம். இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

    திங்கட்கிழமை விரதம் சோம வார விரதம் ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் தூங்கக்கூடாது. ஒரு அந்தணரையும், அவர் மனைவியையும் சிவனாகவும், பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்து, தான தர்மங்கள் செய்ய வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.



    புதன்கிழமை விரதம் புகழைக்கொடுக்கும். புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. அன்றைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.

    குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை. அந்தநாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும். குரு பகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.

    வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும்.

    சனிக்கிழமை அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்.
    விரதம் இருப்பதன் மூலம் தெய்வங்கள் விரும்பி வந்து பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் முன்னோர்கள் விரதங்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லியிருக்கின்றார்கள்.
    மனித வாழ்வில் தம் உடம்பைத் தாமே வருத்தி விரதம் இருப்பதன் மூலம் விண்ணிலிருக்கும் தெய்வங்கள் விரும்பி வந்து பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் முன்னோர்கள் விரதங்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லியிருக்கின்றார்கள்.

    அப்படிப்பட்ட விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதிகளின் விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் எனப்பலவகை உண்டு. ஒவ்வொரு விரதங்களுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

    விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். உதாரணமாக உண்ணாவிரதத்தின் மூலமாகத் தான் தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்தியாவிற்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்திருக்கின்றார். அப்படியிருக்கும் பொழுது நம்மால் ஏன் விரதமிருந்து சாதிக்க முடியாதா? நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஜாதக ரீதியாக நமக்கு பலன் தரும் கிரகம் எது என்று பார்த்து அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று வந்தால் உடனடியாக நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடிவரும்.

    நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கைச் சக்கரம் சீராகச் சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்தக் கிரகம் பலமிழந்திருக்கின்றதோ அந்த கிரகத்தைப் பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள், விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும். பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்தக்கிரகத்திற்குரிய கிழமையில் இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்தறிந்து விரதமிருப்பது நல்லது.



    சூரியன் அருள்பெற விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஆதி வார விரதமிருப்பது நல்லது. ஞாயிறு சூரியன் உதிக்கும் முன்னால் எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுவது நல்லது.

    சந்திர பலம் வேண்டுபவர்கள் திங்கட்கிழமையன்று சோம வார விரதமிருப்பது நல்லது. திங்கட்கிழமை விரதமிருந்து தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானமும் செய்வது நல்லது.

    செவ்வாயின் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமைஅன்று விரதமிருந்து முருகனை வழிபட்டு வருவதுநல்லது.

    புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்வி ஞானம் பெற புதன்கிழமை விரதமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது.

    'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள் வியாழக்கிழமை விரதமிருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு வருவது நல்லது.



    சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை விரதமிருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூவில் மாலை அணிவித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது.

    சனியின் அருளைப்பெற விரும்புபவர்கள் சனிக்கிழமையன்று விரதமிருந்து எள் தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசைமாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும்.

    ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள் மற்றும் ராகு திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது. கேதுவின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது திசை நடப்பவர்கள் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது.

    ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதமிருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். குடும்ப முன்னேற்றம், செல்வச்செழிப்பு, செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த வார விரதங்கள் உறுதுணையாக அமையும்.

    இது தவிர எந்தத் திசை நடப்பவர்களும், எந்தப் புத்தி நடப்பவர்களும் எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்க வேண்டும். விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும். சந்தோஷம் சேரும்.

    ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் அம்பிகை அருள் தரும் வெள்ளியாகக் கருதப்படுகின்றது. இந்த நாட்களில் பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பொன்னும் பொருளும் சேரும்.
    ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை வருகின்றது. இருந்தாலும் ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் அம்பிகை அருள் தரும் வெள்ளியாகக் கருதப்படுகின்றது. பொதுவாகவே அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்கு உகந்த வெள்ளியில், பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பொன்னும் பொருளும் சேரும்; புதிய வாழ்க்கை மலரும்.

    கோடி மாதங்கள் கிடைத்தாலும், ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. காரணம் ஆடி மாதத்தில் தான் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். ஆலயங்களிலும் கூட ஆடி மாதத்தில் விளக்கு பூஜை நடத்துவார்கள். சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதமிருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும். இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டே இருக்கும். துன்பங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை.

    ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தெய்வத்தின் அருளோடு வரும் பொருள்தான் என்பது தெரியவரும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் ‘திருமகள்’ என்றும், ‘லட்சுமி’ என்றும் வர்ணிக்கின்றோம். எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால், நாம் பணமழையில் நனையலாம். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யலாம்.

    லட்சுமி தேவி, நம் இல்லத்தில் வாசம் செய்தால், பணவரவு வந்து கொண்டேயிருக்கும். செல்வம் சேர்ந்தால், பசி, வறுமை நீங்கி வாழ்வில் வளம் கூடும். பொதுவாக லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, விளக்குஏற்றி வைத்து குங்குமம், சந்தனம், பூ சூட்டிய குடம் வைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, இனிப்புப் பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    வழிபாட்டின் பொழுது அஷ்டலட்சுமி வருகைப் பதிகம், துதிப்பாடல்கள் பாடி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு அகலும். கல்யாணக் கனவு நிறைவேறும். எந்தக் கோரிக்கையை நினைத்து வழிபட்டாலும் அது விரைவில் நடைபெறும்.



    எனவே அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைத்தால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். ஆலயங்களில் வைக்கும் விளக்கு பூஜைகளில் கலந்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் கலக்கங்கள் அகலும். கனிவான வாழ்க்கை மலரும்.

    வாழ்க்கை என்ற ‘கை’ சிறப்பாக அமைய ‘நம்பிக்கை’ என்ற கை தேவை. அந்த நம்பிக்கையை, அம்பிகை மீது வைத்து வழிபட்டால், துரத்தி வந்த துன்பங்கள் யாவும் ஓடி ஒளிந்து கொள்ளும்.

    பால்கேட்டு அழுத பிள்ளைக்குச் சீர்காழிப் படித்துறையில் பால் கொடுத்தவள் அந்த அம்பிகை தான். அந்த ஞானப்பாலை உண்டதால் தான் ‘திருஞான சம்பந்தர்’ தெய்வீக மனிதரானார்.

    பச்சை வெற்றிலையை எடுத்து, நாக்கில் ‘ஓம்’ என்று எழுதி, காளமேகத்தைப் ‘பாட்டரசன்’ ஆக்கியவள் அம்பிகை. வேல் கேட்ட முருகப்பெருமானுக்கு சக்திவேல் கொடுத்து, சூரனை சம்ஹாரம் செய்ய வைத்தவளும் அம்பிகை தான்.

    புள்ளிருக்கு வேளூர் என்று வர்ணிக்கப் படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் பார்க்கும் ஈஸ்வரனின் துணையாகி தையல்நாயகி என்ற பெயரில் இந்த வையகத்தை காத்து அருள் தருபவளும் அம்பிகைதான்.



    அம்பிகையை ‘சக்தி’ என்று சொல்கின்றோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய், இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள் கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

    அந்த சக்தியைச் சாந்த வடிவில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், புவனேஸ்வரி என்றும் கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்தரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப் பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடை அம்மன் என்றும், சவுந்தரநாயகி என்றும், அங்கயற்கண்ணி என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

    மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும், ஆதிபராசக்தி என்றும், திரிசூலி என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடித்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டுவர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

    எனவே கோடி நலம் தரும் ஆடி மாதத்தில் குடும்பப் பிரச்சினைகள் அகலவும், கூடுதல் நன்மை பெறவும் அம்பிகைக்குரிய ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்போம். சக்தி வழிபாடு நமக்கு சகல யோகத்தையும் வழங்கும்.
    நரசிம்மரை தொடர்ந்து விரதமிருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்மருக்கும் விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.
    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

    நரசிம்ம ஜெயந்தியன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.

    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28, என பாராயணம் செய்ய வேண்டும்.



    நரசிம்மரின் சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். ‘உன்னையே சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்தருள்வதும் இனியே’ என்ற தேவார பாடலுக்கு இணங்க, நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நரம்சிம்மர் வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறிவழிபட்டால் மரண பயம் நீங்கும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் மூலவர் சன்னிதியோடு பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச்சன்னிதிகள் இருந்தாலும் நரசிம்மருக்கு தனிச்சன்னிதி இருப்பது குறைவு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.
    சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்க்கும் முறையை பார்க்கலாம்..
    சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.

    ஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.

    இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.



    பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.

    நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

    சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.
    ×