என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை இன்று (ஆகஸ்டு4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.






    ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்.

    இந்த விரதத்தை மேற் கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

    அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வர லட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும். மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும். அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.

    கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.
    அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.
    மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.

    பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை வைத்து நிவேத னம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.

    எங்கள் வீட்டில் எழுந்த ருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

    அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
    பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

    இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
    லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
    1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.

    5. எட்டுவிதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    6. இன்று காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

    7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.எனவே இதை மறக்கக் கூடாது.

    8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக் குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

    9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    10. இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறு மையும் தரும் இனிய விரதமாகும்.
    வரலட்சுமி விரதமான இன்று விரதமிருந்து அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
    வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்று தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட (எட்டு) லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

    விரதம் இருப்பது எப்படி?

    வரலட்சுமி விரத பூஜையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப் பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

    அதன்பிறகு வாசலில் உள் நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கல சத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகா லட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

    இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.

    இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச் சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத் ரசதம் சொல்லலாம்.

    மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும் என்று மனம் உருக வணங்க வேண்டும்.

    பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
    விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரதத்துக்குரிய தினமாகும்.
    விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி விரதத்துக்குரிய தினமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.
    தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டி கின்றனர். லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

    ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்ட லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

    லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக் கிழமையில் அதாவது இன்றுய தினம் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப் படுகிறது. சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.
    இன்று ஆடி பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும். அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    இன்று ஆடி பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும் அமைதியையும் பன்மடங்கு பெருக அருள்புரியும். பெரிய பொருட் செலவில் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பதில்லை. பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம்.

    அந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்ற விபரம் வருமாறு:-

    நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும்.
    பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.

    பூஜை செய்வது எப்படி?

    ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.
    வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.

    வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தன் திருமணத்துக்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் ஏற்பட்டது.
    ஆடிப்பெருக்கு அன்று மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு விரதமிருந்து இறைவனை வழிபடுவார்கள். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
    3-8-2017 அன்று ஆடிப்பெருக்கு

    ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.

    நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி 18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.

    காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும்.

    கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

    அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

    காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள்.

    சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

    ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
    ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
    ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்து விட்டு அம்மனை வழிபட வேண்டும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென் மாவட்ட பெண்களிடம் இன்றும் உள்ளது. இந்த விரதம் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்வதாகும்.

    செவ்வாய் இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடுவார்கள். பச்சரிசி மாவுடன் வெல்லம், தேங்காய் கலந்து கொழக்கட்டை செய்வார்கள். அந்த கொழுக்கட்டைகள் பலவித வடிவங்களில் இருக்கும். இரவு அந்த கொழுக்கட்டைகளை அவ்வைக்கு படைத்து வழிபடுவார்கள். விடிய, விடிய இந்த அவ்வை பாட்டி பூஜை நடைபெறும்.

    ஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டை சாப்பிடவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வை பாட்டியை நினைத்து நடத்தப்படும் இந்த பூஜையில் பங்கேற்றால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று பெண்களின் நம்பிக்கை.

    அது போல பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று சுமங்கலிபூஜை நடத்துவர்.
    திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர். இந்த மங்கல திருவிழா வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர்.

    பூமாதேவி அவதரித்தது இம்மாதத்தில் என்பதால் ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகின்றன. ‘ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

    இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. அன்று ஆறுகளில் நீர்ப் பெருக்கு உண்டாகி, ‘நீரெல்லாம் காவிரி நிலமெல்லாம் வைகுந்தம்’ என்பதற்கேற்ப எல்லா நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடி நுங்கும், நுரையுமாக வரும். இந்த புது வெள்ளம் காணும் மக்கள் உள்ளத்தில் பேரானந்தத்தை ஏற்படுத்தும். விவசாயிகள் தம் வயலில் நெல் மற்றும் காய்கறி விதைகளை தூவி நல்ல விளைச்சல் காண இறைவனை வேண்டி கற்பூரம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபடுவர்.

    ஆடி மாதத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகத்தில் அதிக மழை பெய்து, அங்கிருந்து புதுவெள்ளம் டெல்டா மாவட்டங்களின் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும். இதனை ஆற்றுப்பெருக்கு என்பர்.

    “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
    வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
    எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”

    என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

    ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.



    பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

    புதுமண தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அங்கேயே களைந்து விட்டு புத்தாடை அணிந்து கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று பூஜை செய்து வழிபடுவர். திருமணத்தன்று மணமக்கள், சூடிய மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று அதை ஆற்றில் விடுவார்கள். பின்னர் ஆற்றினை வணங்கி வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி அதனை ஆற்றில் விடுவார்கள்.

    திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

    பெண்கள் விரதமிருந்து முளைப்பாரியை கைகளில் ஏந்திக்கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்து வாழ்வில் எல்லா வளமும் பெருக வேண்டும் என்று பூஜைசெய்து முளைப்பாரியை காவிரியில் விட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவர். இப்படி செய்தால் நீர்வளம் பெருகியது போல் அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆறுகள் இல்லாத ஊர்களில் வாழும் மக்கள் அப்பகுதியில் இருக்கும் குளங்கள், நீர் நிலைகள், ஏரி போன்ற நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள்.

    செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம் :

    வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.

    திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும். செல்வ செழிப்பு நிறைந்திருக்கும். குழந்தை செல்வம் உண்டாகும்.
    வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. இந்த விரதம் பிறந்த கதையை விரிவாக பார்க்கலாம்.
    வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

    என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
    வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை. இது குறித்த சொல்லப்படும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
    ஒரு சமயம் மகாலட்சுமி எங்கு வாசம் செய்யலாம் என்பதை தேர்வு செய்வதற்காக வயதான சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வந்தாள். முதலில் அவள் சென்ற வீட்டில் பொழுது விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதனால், அடுத்த வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டில் சுத்தமே இல்லாமல் எங்கும் குப்பையாக இருந்தது. அதனால் மூன்றாவது வீட்டை தேடிச் சென்றாள் மகாலட்சுமி.

    அந்த வீட்டில் கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மனைவி தலைவிரி கோலத்தில் இருந்தாள். அதனால் நான்காவது வீட்டைத்தேடி நகர்ந்தாள்.

    அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் இல்லத்தரசியானவள் பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தாள். அந்த வீடு மங்களகரமாக காட்சியளித்தது.

    வாசலில் வயதான பெண் வேடத்தில் தேவி நிற்பதை கண்ட அந்த இல்லத்தரசி அங்கு வேகமாக வந்தாள். தேவியை வரவேற்று உபசரித்தாள். தேவிக்கு உண்பதற்கு பால் எடுத்து வர சமையலறைக்குள் சென்றாள். பாலுடன் திரும்பி வந்து பார்த்தபோது தேவி இல்லை. வீட்டிற்கு வந்த அம்மா எங்கே என்று அந்த இல்லத்தரசி தேடினாள். ஆனால் காணவில்லை. இதையடுத்து தனது பூஜையை தொடர பூஜையறைக்குள் சென்றாள்.

    அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக்கிடந்தது. வயதான சுமங்கலிப் பெண் உருவில் தன் வீட்டுக்கு வந்தது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமிதான் என்பதை அறிந்த இந்த இல்லத்தரசி மகிழ்ந்தாள். வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.
    ஆடி மாதம் கடவுள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் சில முக்கிய விரத நாட்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ஆடி மாதம் கடவுள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் சில முக்கிய விரத நாட்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    ஜூலை 27    - சதுர்த்தி விரத தினம். இன்று காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை மனை, ஆலயம், கிணறு வாஸ்து செய்ய மிகவும் சிறந்த தினமாகும்.
    ஜூலை 28    - கருட பஞ்சமி. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. ஆடி 2-வது வெள்ளிக்கிழமை.
    ஜூலை 29    - சஷ்டி விரதம்
    ஜூலை 30    - இன்று சூரிய வழிபாடு நல்லது. ஆரோக்கிய குளியலுக்கு உகந்த நாள்.
    ஜூலை 31    - ஆடி சுவாதி

    ஆகஸ்டு 1    - மதுரை மீனாட்சி அம்மன் தங்கக் குதிரையில் புறப்பாடு. ஆடி மூன்றாவது செவ்வாய்.
    ஆகஸ்டு 2    - திருப்பதி ஏழுமலையானுக்கு சகஸ்ரகலாபிஷேகம்
    ஆகஸ்டு 3    - ஆடி 18-ம் பெருக்கு. அனைத்து நதிகளையும், பெண்ணாக கருதி இன்று வழிபாடுகள் நடைபெறும் சர்வ ஏகாதசி.
    ஆகஸ்டு 4    - வரலட்சுமி விரத தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் ரத உற்சவம். ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை.

    ஆகஸ்டு 5    - சனி பிரதோஷம். இன்று கருட தரிசனம், விஷ்ணு வழிபாடு, நந்தி தரிசன வழிபாடு ஆகியவை நல்லது. திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு தேரில் வீதி உலா.
    ஆகஸ்டு 6    - சங்கரன்கோவிலில் ஆடி தபசு.
    ஆகஸ்டு 7    - ஆடி பவுர்ணமி. இன்று திருவண்ணா மலை யில் கிரிவலம் வந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபமும், தனியார் பணிகளில் இருப்பவர்களுக்கு புகழும் கிடைக்கும். திருவோண விரதம். ஆவணி அவிட்டம்.

    ஆகஸ்டு 8    - ஆடி 4-வது செவ்வாய்க்கிழமை. காயத்ரி ஜெபம் செய்ய வேண்டிய தினம்.
    ஆகஸ்டு 9    - செவ்வாய்ப்பேட்டை மாரியம்மனுக்கு பொங்கல். திருப்பதி ஏழுமலையானுக்கு சகஸ்ர கலாபிஷேகம்.
    ஆகஸ்டு 10 - சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஊஞ்சலில் காட்சி.
    ஆகஸ்டு 11 - ஆடி 4-வது வெள்ளிக்கிழமை. மகாசங்கடஹர சதுர்த்தி, இருக்கன்குடி மாரியம்மன் பெருவிழா.
    ஆகஸ்டு 12 - இன்று கருட தரிசனம் செய்வது நல்லது.

    ஆகஸ்டு 13 - இன்று சூரிய வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
    ஆகஸ்டு 14 - கிருஷ்ணஜெயந்தி, திருப்போரூர் முருகன் அபிஷேகம், சங்கரன்கோவில் புஷ்ப பாவாடை தரிசனம்.
    ஆகஸ்டு 15 - ஆடி மாதம் இறுதி 5-வது செவ்வாய்க் கிழமை. ஆடி கிருத்திகை விரத தினம்.
    ஆகஸ்டு 16 - ஆடி கடைசி தினம். இன்று வானில் கிழக்கு பகுதியில் சுக்கிரன் பிரகாசித்து, மகம் முதல் 5 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும்.
    நாக தோஷத்திலிருந்து நிவாரணம் பெற நாக தேவதைகளை மனமுருகி வழிபட்டால், அவற்றின் கருணையைப் பெற்று தோஷ நிவாரணம் அடைந்து, வளமான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.
    ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்னும் சர்ப்ப பூஜை செய்வார்கள். இது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளது. ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சிவபெருமான் நாகத்தை பூஷணமாகக் கொண்டுள்ளார். முருகப்பெருமானின் காலடியில் படம் எடுத்தபடி நாகம் உள்ளது.

    சர்ப்ப வழிபாடு வேத காலத்திலேயே இருந்திருக்கிறது. ஜாதக அமைப்பில் நம்மை ஆட்டிப் படைப்பது நவகிரகங்களாகும். இதில் ராகுவும் கேதுவும் நாக வடிவுடையன.

    தெரிந்தோ தெரியாமலோ நாம் முற்பிறவியிலே நாகத்தை அடித்துக் கொன்றிருக்கலாம் அல்லது துன்புறுத்தியிருக்கலாம். அதனால் தற்போது பல வகையான சாபத்துக்குள்ளாகித் துன்பத்தை அனுபவித்து வருகிறோம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயில் வீழ்ந்தும், பிள்ளைகளால் விரட்டப்பட்டும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாடுதலும் போன்ற குறைகள் நாகதோஷத்தினால் ஏற்படுகின்றன. இதிலிருந்து நிவாரணம் பெற அந்த நாக தேவதைகளை மனமுருகி வழிபட்டால், அவற்றின் கருணையைப் பெற்று தோஷ நிவாரணம் அடைந்து, எஞ்சிய நாட்களை நல்ல முறையில் வளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.

    நம் மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட ராகு-கேது கிரகங்களுக்கான கோலங்களை முறையே செவ்வாய், சனிக்கிழமைகளில் பூஜையறையில் பச்சரிசி மாவினால் போட்டு, குத்து விளக்கேற்றி வைத்து, ராகு மற்றும் கேது நாமாவளியால் அர்ச்சித்து காயத்ரிகளைப் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் விலகி விருப்பங்கள் பூர்த்தியாகும்.

    ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண்கள், ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. இதுபோல் தொடர்ந்து 11 வாரம் செய்து 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்யவும். திருமணம் கூடிவரும். திருமணமானவர்கள் இல்வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 10.30 - 12.00) தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றி நாகதேவதையை சந்தோஷப்படுத்தலாம்.

    பலவிதமான இன்னல்களால் சிக்கித் தவிக்க வைப்பது கேது தோஷமாகும். இத்தகையோர் பிரதி செவ்வாய்க்கிழமை பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வணங்கி வலம் வந்தால் நலம் உண்டாகும். சுமங்கலிகள் அருகேயுள்ள அம்மன் கோவில்களில் உள்ள புற்றுகளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பால் தெளித்துக் குடும்ப சுகங்களை பெறலாம்.

    அரச மரத்திற்கு அடியிலோ அல்லது வேப்ப மரத்திற்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர்களுக்கு எண்ணை தடவி, பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு, மலர் தூவி அலங்காரம் செய்து மஞ்சள் வஸ்திரத்தை (புதிதாக) உடுத்தி, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கலுடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனதார பூஜித்து வந்தால் சகல நாக தோஷமும் தீரும்.

    தீய பழக்க வழக்கமுள்ள மகன்கள் திருந்தவும், அவர்கள் நல்ல படிப்பையும் அறிவையும் பெறவும், அம்மனுக்குப் பால் காவடி எடுப்பது நலம் தரும்.
    நாக தோஷத்தினால் ஏற்படும் அவமானங்கள், பெண்களால் உண்டாகக் கூடிய கசப்பான சம்பவங்களிலிருந்து நிவாரணம் பெற், பிரதோஷம் தோறும் மவுன விரதமிருந்து உமாமகேஸ்வரியையும் நாகவல்லி அம்மனையும் பிரார்த்தனை செய்து வரலாம்.

    சிறிய விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களும், மனைவியின் தீராத நோய் நீங்கவும், கண் பார்வை சம்பந்தமான நோயால் அவதிப்படுபவரும், கொடுத்த பணம் இடையூறின்றித் திரும்பக் கிடைக்கவும், பல தாரம் ஏற்படாமல் இருக்கவும், ஏமாற்றங்களைத் தவிர்க்கவும், குழந்தைகளிடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் ஏற்படவும் ஆடி வெள்ளி தோறும் புற்றுக்குப் பால் தெளிப்பது அவசியம். ராகு-கேது ஸ்தலங்களான ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வர வேண்டும்.

    ஜென்ம நாக தோஷம் உடையவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் கூட, சக நண்பர்களால் இடைஞ்சல் அடைவர். சொந்த தொழிலில் நஷ்டம் அடைவர். இத்தகையோர் பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து தானம் அளித்தால் நாக தோஷம் நீங்கி நலமடைவார்கள்.

    கணவன்-மனைவிக்குள் சண்டை அடிக்கடி தொடர்ந்து வரும் நிலை உள்ளவர்கள் வெள்ளி அல்லது செம்பினால் செய்த ஒன்றைத் தலை நாக தேவதை உருவத்தை, வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து மலர்களால் அல்லது குங்குமத்தால் 41 நாட்கள் அர்ச்சனை செய்து அதை திருநாகேஸ்வரம் கோவில் உண்டியலில் சேர்ப்பித்தால் பலன் கிடைக்கும்.
    ×