என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம்.
    • ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது.

    பொதுவாகவே நம்மில் நிறைய பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தம் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய குறிப்பு. ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது. நிறைய இடத்தில் கைநீட்டி கடனை வாங்கி விட்டதால், அவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் இருந்து எப்படி தப்பிப்பது. நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அந்த நபருக்கு குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால், நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இது சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம். இந்த நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.

    ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய நபர், கடன் தொகையை சிறு சிறு தொகையாக திருப்பிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் ஒரு சிறு தொகையை அவருடைய பெயரைச் சொல்லி ஒரு உண்டியலில் சேர்த்து வரலாம். அப்படி இல்லை என்றால் அவர் பெயரை ஒரு கவரின் மேல் எழுதி, அந்த கவருக்குள் உங்களுடைய பணத் தொகையை குறிப்பிட்ட இந்த நேரத்தில் போட்டு வரலாம். அதாவது அவர் கையில் கொடுக்கவில்லை. அவர் பெயர் எழுதிய கவரில் அல்லது உண்டியலில் ஒரு சிறு தொகையை வைக்கப் போகிறீர்கள். இது அவருக்கு கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. அவ்வளவு தான். உங்களுடைய ராசிக்கு ஏற்ற பொதுவான மைத்ரேய முகூர்த்த நேரம் எது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

    உங்களுடைய ராசிக்கு ஏற்ற பொதுவான மைத்ரேய முகுர்த்த நேரம் எது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

    மேஷம்: வியாழக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10.30 முப்பது மணி வரை.

    ரிஷபம்: வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.30 முப்பது மணி வரை.

    மிதுனம்: புதன் கிழமை காலை 7:30 மணி முதல் 9.00 மணி வரை.

    கடகம்: திங்கட்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை.

    சிம்மம்: ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியிலிருந்து 12.30 மணி வரை.

    கன்னி: வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 6:30 மணி வரை.

    துலாம்: சனிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை.

    விருச்சிகம்: வியாழக்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணி வரை.

    தனுசு: செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை.

    மகரம்: சனிக்கிமை காலை 8:00 மணியில் இருந்து 10:30 மணி வரை.

    கும்பம்: திங்கட்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணி வரை.

    மீனம்: வியாழக்கிழமை காலை 3:00 மணியிலிருந்து 10:30 முப்பது மணி வரை.

    எந்த கஷ்டமும் படாதீங்க. மேலே உள்ள 12 ராசிகளில் நீங்கள் எந்த ராசியில் பிறந்தவர்கள் என்பதை பாருங்கள். உங்களுக்கு எந்த கிழமை, எந்த நேரம் கொடுக்கப்பட்டு இருக்கின்றதோ, அந்த நேரத்தில் உங்களுடைய கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். நகை கடனாக இருக்கட்டும், கைமாத்தாக வாங்கிய பணமாக இருக்கட்டும், வங்கி கடனாக இருக்கட்டும், வீட்டு லோன், கார் லோன், எதுவாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட இந்த நேரத்தில் போனில் ஆன்லைன் மூலம் டிரன்சாக்சன் செய்தாலும் பரவாயில்லை. இந்த நேரத்தில் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டீர்கள் என்றால், கடன் சுமை இல்லாமல் உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக கடன் இல்லாத நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும்.
    • குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

    கடன்கள் மற்றும் நோய் தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் 'ரிண-ருண விமோச்சனர்' ஆவார். இவர் அருள் புரியும் கோயில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ளது. மன்னார்குடியில் திருபாற்கடல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது சிவாலயங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்த இக்கோயிலில் மிகவும் போற்றப்படுபவர். தனிச்சந்நதியில் அருள்புரியும் 'ரிண- ருண விமோச்சனர்' ஆவார்.

    இங்கு அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதருக்கு திங்கட்கிழமையில் அபிஷேகம் முடிந்ததும் தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும். காசி விசாலாட்சிக்கு வெள்ளிக்கிழமையிலும். வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமையிலும், ராகு காலத்தில் துர்க்கைக்கும், தேய்ப்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன 'ரிண-ருண விமோச்சனர்' தெற்கு திசை நோக்கி தனி சந்நதியில் பெரிய சிவலிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார்.

    இக்கோயிலில் மேற்கு கோபுரவாசல் அருகேயுள்ள கமலாயத் திருக்குளத்தில் நீராடி, அங்கு அருள் புரியும் 'படிக்காசு விநாயகரை வழிபட்ட பின் தியாகராஜப் பெருமானையும். அன்னை கமலாம்பிகையையும், நீலோத்யல அம்பாளையும், புற்றீஸ்வர(வான்மீக) பெருமானையும் வழிபட்டபின் 'ரிண-ருண விமோச்சனப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

    அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும் பதினோருமுறை வலம் வந்து இந்த ஈஸ்வரரின் இடது புறத்தில் தனிச் சந்நதியில் சன்டேஸ்வரராக அமர்ந்திருக்கும் எமனையும் வழிபட்டால் நோய் நொடிகளிலிருந்தும், கடன் பிரச்சனைகள், வழக்குகள். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

    அமாவாசை, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து மிளகு கலந்த உப்பினை இவரது திருவடியில் சமர்ப்பிப்துடன் வில்வபத்ரம், ரோஜா, நாகலிங்க புஷ்பம், வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் வழிபட்டாலும் தீராதநோய்கள். கடன்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.

    • விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
    • செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான்.

    செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் 'செவ்வாய் தோஷம்' என்று கருதப்படும்.

    அவர்களுக்குத் திருமணத்தடை, புத்திரப் பேற்றில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு, தொழிலில் இழப்பு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி போன்றவை ஏற்படலாம்.

    அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

    பழனி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய்க்குரிய பரிகாரத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

    • இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
    • அக்னி நட்சத்திரம் 28-ந்தேதி வரை நீடிக்கிறது.

    கோடை காலம் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது "அக்னி நட்சத்திரம்"தான்!

    அக்னி என்றால் நெருப்பு அதாவது சூரிய பகவானுக்கு அக்னி என்ற இன்னொரு பெயரும் உண்டு!

    சித்திரை மாதம் 21-ந்தேதி துவங்கி, வைகாசி மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் ஆகும். இதை கிராமங்களில் முன்னேழு,பின்னேழு நாட்கள் என்பார்கள். இவ்வாண்டு இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் மே 28ந் தேதி வரை நீடிக்கிறது.

    சித்தரை மாதத்தில் சூரிய பகவான் மட்டுமல்ல சந்திர பகவானும் பூமியின் அருகிலே சஞ்சாரம் செய்வார்!

    "அக்னி நட்சத்திரம்"என்ற பெயர் பஞ்சாங்க ரீதியாக வந்ததுதான். எல்லோருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. அதாவது அக்னி நட்சத்திர நாட்களில் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாதா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது.

    அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம்.

    அதேபோல் அனைத்து விதமான மங்கல காரியங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

    ஆனால் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் பால் காய்ச்ச கூடாது. அதே போல் வீடு நிலை வைப்பது, சிலாப் போடுவது போன்ற விசயங்களை தவிர்க்கவும்.

    மேலும் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உரிக்கக்கூடாது, விதை விதைக்கக்கூடாது, கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது, நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது!

    முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது கூடாது. கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். இரண்டு சக்கர வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

    அக்னி நட்சத்திர காலங்களில் கண்டிப்பாக நாம் ஒரு மரமாவது நடவேண்டும்.உலகிலே மிக புண்ணிய விசயம் மரம் நடுவது ஆகும்.

    நாம் நடும் மரம் நல்லவர்,கெட்டவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் நிழல் மட்டுமல்ல காய்,கனிகளை கொடுக்கும். அதேபோல் எத்தனையோ பறவைகளுக்கு வாழ்விடமாகவும் இருக்கும்.

    நமக்கு நல்ல பல விசயங்களை உணர்த்தும் அக்னி நட்சத்திர காலத்தை வெறுக்காமல் இந்த காலங்களில் நீர் பந்தல்,மோர் பந்தல், தயிர் சாதம் உள்ளிட்ட அன்னதானங்களை செய்து மரங்கள் நட்டால் இந்த அக்னி நட்சத்திரம் பல நன்மைகளை தரும் என்பது உண்மையாகும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • இந்த தோஷம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
    • தோஷம் உள்ளவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

    மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலருக்கு வெற்றி வாய்ப்பு வீடு தேடிவந்து அழைக்கிறது. ஒரு சிலருக்கு வாய்ப்பை தேடிப் போனாலும் கிடைப்பது இல்லை. என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். 'பிரம்மஹத்தி தோஷம்' என்பது, நெஞ்சை பதை பதைக்க வைக்கும் கொடுமையான பஞ்ச மகா பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    பூமியில் ஒரு உயிர் ஜனனமாக காரணமாக இருக்கும் பிரபஞ்ச சக்திக்கே அந்த உயிரை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. சக மனிதர்கள் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தால், பாதிப்பை ஏற்படுத்தினால், உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்வது அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்தவருக்கே இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் யாருக்கெல்லாம் வரும் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

    1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும்.

    2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்

    3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.

    4.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் பிராமணர்களை துன்புறுத்தினால், வருத்தம் ஏற்படுத்தினால், அவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். குல தெய்வ சாபத்தை விட குரு சாபம், பிராமண சாபம் மிக கொடியது. பிராமண குலத்தில் பிறந்த ராவணனனை ராமர் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறார்கள்.

    6. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.

    7. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள். ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.
    • எலும்பு வியாதிகள் குணமாக சிவபெருமான், முருகனை வழிபடலாம்.

    எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் தங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கில் நேர்மறை எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், கடவுளை வணங்கி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

    1) செல்வம் சேர வேண்டுமெனில்: ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம்.

    2) ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டுமா?: ருத்திரனை வழிபாடு செய்யலாம்.

    3) மனவலிமை, உடல் வலிமை பெற: ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம்.

    4) கல்வியில் சிறந்து விளங்க: ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.

    5) திருமணம் நடைபெற: ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.

    6) மாங்கல்யம் நிலைக்க: மங்கள கவுரி

    7) புத்திர பாக்கியத்தை பெற: சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம்.

    8) விவசாயம் தழைக்க: ஸ்ரீதான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.

    9) சாப்பாட்டு கஷ்டம் நீங்க: ஸ்ரீஅன்னபூரணியை வழிபடலாம்.

    10) பகைவர் தொல்லை நீங்க: திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.

    11) திருஷ்டி விலக: முத்துமாரியை வழிபடலாம்.

    12) புதிய தொழில் துவங்க வேண்டுமெனில்: ஸ்ரீகஜலட்சுமி வழிபாடு செய்யலாம்.

    13)  எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, 'என்னால் நிச்சயம்  இந்த காரியத்தை முடிக்க இயலும்' என்ற மன உறுதியுடன் அமைய வேண்டும்.

    14) நோய் தீர: ஸ்ரீதன்வந்தரி, தட்சிணா மூர்த்தி.

    15) முடி நரைத்தல், உதிர்தல்: மகாலட்சுமி, வள்ளி.

    16) கண் பார்வைக் கோளாறுகள்: சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்.

    17) காது, மூக்கு, தொண்டை மற்றும் நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, பித்தம்: முருகன்.

    18) ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், ஞாபகசக்தி குறைவு: மகாவிஷ்ணு.

    19) மாரடைப்பு, இருதய கோளாறுகள்: சக்தி, கருமாரி, துர்க்கை.

    20) அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா: தட்சிணாமூர்த்தி, முருகன்.

    23) பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்: ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளி.

    24) மூட்டுவலி, கால் வியாதிகள்: சக்கரத்தாழ்வார்.

    25) வாதங்கள்: சனிபகவான், சிவபெருமான்.

    27) வாயுக் கோளாறுகள்: ஆஞ்சநேயர்.

    28) எலும்பு வியாதிகள்: சிவபெருமான், முருகன்.

    29) ரத்தசோகை, ரத்த அழுத்தம்: முருகன், செவ்வாய் பகவான்.

    30) குஷ்டம், சொறி சிரங்கு: சங்கர நாராயணன்.

    31) அம்மை நோய்கள்: மாரியம்மன்.

    32) தலைவலி, காய்ச்சல் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற: விநாயகர் வழிபாடு நல்லது

    33) புற்று நோய்: சிவபெருமான்.

    ஒரு மனிதனுக்கு மனதில் தோன்றும் பயமே பாதி நோயை ஏற்படுதுகிறது. ஆகவே மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எந்தவிதமான நோயிலிருந்தும் முழுவதுமாக விடுபட்டு நல்ல முறையில் வாழலாம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கிருஷ்ணகிரி சூரன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது.
    • பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய தெய்வமாக ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் உள்ளார்.

    தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலேயே பிரசித்திப் பெற்ற ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு கோவில் அமைந்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சூரன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய தெய்வமாக ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் உள்ளார்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஏழுமலையான் சுவாமி சிலைக்கு அடியில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் காகபுஜண்டர், கொங்கனார் ஆகிய 2 சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதன்பிறகு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூரன்கொட்டாயில் ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவருக்கு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் அபூர்வ திருவோடு மரம் உள்ளது.

    சிறப்பு மிக்க இந்த கோவிலில் வன்னிமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. அதன் அடியில் சர்வசுத்தி புல் உள்ளது. அதை சுற்றி வந்தால் சகல தோஷங்களும் நீங்குகிறது. மேலும் கோவிலில் கொடி மரம் அமைந்துள்ளது. இதற்கு வெண்கலத்தால் கவசம் போடப்பட்டுள்ளது. கோவிலில் மூலவராக உள்ள பழமைவாய்ந்த கால பைரவர் லிங்கமும், ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவரும் கலசத்தை ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    வில்வ மரம், வேப்பங்காடு, அத்திமரம் ஆகிய இயற்கை வளங்களை கொண்ட மரம் , செடிகள் கோவிலில் அமைந்துள்ளன. சகல தோஷங்கள் நீங்க, பக்தர்கள் செல்வ செழிப்புடன் வாழ ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகிறார்.

    • நாளை அதிகார நந்தி சேவை நடக்கிறது.
    • 3-ந்தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மிகவும் பழமைவாய்ந்த பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய சண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார திருப்பதிகங்களில் திருநாவுக்கரசரின் காப்பு திருத்தாண்டகத்தில் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் பிரசித்த பெற்ற சித்திரை பெருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி மே 6-ந்தேதி வரை 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 28-ந்தேதி (நாளை) காலை 8 மணிக்கு அதிகார நந்தி சேவை, 30-ந்தேதி (ஞாயிறு) இரவு 10 மணிக்கு ரிஷப வாகன சேவை, 2-ந்தேதி (செவ்வாய்) காலை 6.30 மணிக்கு திருத்தேர் விதி உலா, 3-ந்தேதி (புதன்) மாலை 4 மணிக்கு 63 நாயன்மார்கள் உற்சவம், 4-ந்தேதி (வியாழன்) இரவு 9 மணிக்கு பிஷாடனர் உற்சவம், 5-ந்தேதி (வெள்ளி) இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் நடக்கிறது.

    சித்திரை பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக அதிகாரி த.கங்காதேவி, தக்கார் பி.கே.கவெனிதா ஆகியோர் செய்துள்ளனர்.

    • குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம்.

    குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 2023 குருப்பெயர்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும் என்பதை பார்க்கலாம்.

    சரியான வரன் கிடைக்காமல் , வரன் கிடைத்தாலும் பல காரணங்களால் திருமணம் தடைபட்டு விரக்தியில் இருக்கும் இந்த 7 ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு கட்டாயம் சிறப்பாக திருமணம் நடைபெற போகிறது.

    மேஷ ராசி – ஜென்ம குரு

    மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஜென்மத்தில் ராகுவும் ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்து திருமணத்தடை கொடுத்து வந்த நிலையில் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் ஏழாவது வீட்டை பார்ப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிக்கு பிறகு திருமண தடை நீங்கும். ராகு கேதுவால் ஏற்பட்ட திருமண தடையை குரு பகவான் விலக்கி கொடுத்து வெற்றிகரமான திருமண வாழ்க்கையை அமைத்து தருவார்.

    மிதுன ராசி – லாப குரு

    அஷ்டமா சனி காலம் முடிந்து வெற்றியின் தொடக்கத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப் போகிறது. குரு பகவான் 11ஆம் வீட்டுக்கு மாறப் போகிறார். இதனால் வரையில் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கோடீஸ்வர யோகத்தோடு திருமண வாழ்க்கை அமையும்.

    சிம்ம ராசி – பாக்ய குரு

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் குருப்பெயர்ச்சி இதுவாக இருக்கப்போகிறது. பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் குரு பகவான் , அற்புதமான பண வரவோடு இனிமையான வாழ்க்கை துணையை உங்களுக்கு கண் முன்னே நிறுத்துவார். சனி பகவான் பார்வை சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் எனினும் குரு பகவான் ஆசியோடு திருமணம் நடைபெறும்.

    துலாம் ராசி – களத்திர குரு

    குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதனால் வரை ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் இருந்து திருமண தடை ஏற்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குரு பார்வை கிடைப்பதால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும்.

    தனுசு ராசி – பூர்வ புண்ய குரு

    ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது , ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப் போவதால், காதல் திருமணம் கைகூடவும், நீங்கள் விரும்பிய பெண்ணை மனம் முடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வாய்ப்பு ஏற்படும்.

    கும்ப ராசி – தைரிய குரு

    கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம், எனினும் ஏழாம் வீட்டில் குரு பார்வை விழுவதால், பல பிரச்சனைகள் வந்தாலும் திருமணம் தடை பெறாது. திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளது.

    மீன ராசி - குடும்ப குரு

    2023 குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு செல்கின்றார். ராசிநாதனாகிய குரு பகவான் ஆசி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. குரு பகவான் குடும்ப ஸ்தானத்துக்கு செல்வதால், இது வரையில் இருந்த திருமண தடை நீங்கும். கட்டாயம் மீன ராசிக்காரர்களுக்கு 2023 குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் திருமணம் நடந்தே தீரும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்...https://www.maalaimalar.com/rasipalan

    • இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
    • வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

    இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது.
    • சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

    நமது வேதங்கள் பஞ்சபூதங்களை இறைவனின் அம்சமாக கருதின. அதில் எத்தகைய தீமையாலும் மாசு பெறாத நெருப்பு எனும் அக்னியை மிகவும் உயர்ந்ததாக போற்றினர். அந்த அக்னி பகவானின் அம்சத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் சூரிய பகவானை தினந்தோறும் போற்றினர். நாம் அனைவருமே வாழ்வதற்காக பல வேலைகளை செய்கிறோம். அவற்றில் வேலையிடங்களில் பலருக்கு பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை நீக்குவதற்கான ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம் இதோ.

    ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம்

    ஓம் பூர் புவ ஸூவஹா அக்னயே ஜாதவேத

    இஹாவஹா சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா

    அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தின் சிறப்பான பலனை பெற ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசை தினத்தில் சுத்தமான விளக்கேற்றி, அதற்கு முன்பாக கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து உங்கள் குரு, குலதெய்வம் ஆகியோர்களை மானசீகமாக வணங்கி 1008 முறை இம்மந்திரம் துதித்து உரு ஜெபிக்க வேலை, தொழில், வியாபார இடங்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் அமைய பெற்றவர்கள் நன்மையான பலன்களை பெறுவார்கள், நெருப்பினால் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும்.

    பஞ்சபூதங்களில் ஒன்றானதும், இறைத்தன்மை உடையதாகவும் கருதப்படுவது நெருப்பு ஆகும். இந்த நெருப்பை வேத காலங்களில் அக்னி பகவானாக நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீங்கி, நன்மையான சக்திகள் அங்கு நிறையவே அக்காலங்களில் யாகங்கள் அதிகம் செய்து அக்னி பகவானின் அருளாசிகள் பெற்றனர். அக்னி தன்மையை கொண்ட சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
    • நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும்.

    இன்று தங்க நகை வாங்க முடியாதவர்களால், வாங்க வேண்டிய முக்கியமான இந்த 2 பொருட்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

    மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த 2 பொருளை அட்சய திருதியை நாளில் வாங்கினால் தன, தானியம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரண சேர்க்கையும் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே நகை வாங்க முடியவில்லையே என்கிற கவலையை விட்டுவிட்டு மறக்காமல் இந்த இரண்டு பொருளை மட்டும் காசு கொடுத்து நாளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

    அட்சய திருதியை அன்று நகை கடைகளில் கூட்டம் அலை மோதுவதை பார்த்தாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கும். தங்கம் விற்கும் விலைக்கு நகை கடைகளில் எப்படித் தான் இவர்கள் சென்று நகையை வாங்குகின்றனர்? என்று வெளியிலிருந்து அங்கலாய்ப்பவர்களும் உண்டு. இப்படியானவர்களுக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்கிற ஏக்கத்தை துடைக்கும் இந்த இரண்டு பொருள் ரொம்பவே சக்தி நிறைந்தது.

    மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு மற்றும் குண்டு மஞ்சள் அந்த 2 பொருட்கள் ஆகும். முந்தைய காலங்களில் குண்டு மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இன்று கடைகளில் விற்கும் பவுடரை பயன்படுத்தி கொள்கின்றோம். ஆனால் இந்த குண்டு மஞ்சளுக்கு நிறையவே விசேஷமான சக்திகள் உண்டு. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு குண்டு மஞ்சள் கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும் என்கிற சாஸ்திர குறிப்புகள் உண்டு.

    பணம் சம்பாதிப்பதில் இருக்கும் தடைகளை அகற்றி, நம்மை மேலும் மேலும் முன்னேற வைக்கக்கூடிய சக்தி குண்டு மஞ்சளுக்கு உண்டு. எனவே வீட்டில் எப்பொழுதும் குண்டு மஞ்சள் பூஜை அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம். அட்சய திருதியை அன்று புதிதாக கடைக்கு சென்று உங்கள் கைகளால் கல் உப்பு வாங்கி வந்து உப்பு ஜாடியில் நிரப்பி வைக்க வேண்டும். மீதமிருக்கும் உப்பை ஒரு செம்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் கொண்டு போய் வையுங்கள்.

    அதே போல குண்டு மஞ்சளையும் உங்களால், உங்கள் தேவைக்கு ஏற்ப காசு கொடுத்து கடையில் அன்றைய தினம் சென்று புதிதாக வாங்கி வந்து இதே போல வேறொரு பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் வைக்க வேண்டும். கல் உப்பு மற்றும் குண்டு மஞ்சள் நிரம்பிய இந்த இரண்டு பாத்திரங்களையும் பூஜை அறையில் வைத்த பின்பு மகாலக்ஷ்மியை மனதார வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய தனம், தான்யம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரணம், சொத்து சேர்க்கையும் ஏற்படும்.

    பொதுவாகவே அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். எனவே உங்களுக்கு எந்த பொருட்கள் பல்கிப் பெருக வேண்டுமோ, அந்த பொருட்களை கடைக்கு சென்று நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதெல்லாம் ஒரு சாஸ்திரமே அன்றி இதற்காக ஏக்கம் கொள்ளவோ, வருத்தப்படவும் ஏதுமில்லை.

    ×