என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
- நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.
சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.
குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.
குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.
மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.
ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.
இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.
நோய் தொற்று ஆபத்து
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
விலை உயரும்
குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.
குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.
மேஷ குருவின் சஞ்சாரம்
(22.4.2023 முதல் 1.5.2024 வரை)
22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)
23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)
12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)
22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)
21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)
6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)
17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)
12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)
1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan
குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே! சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான். அதனால் தான் குளிகை என்ற பெயர் வந்தது. இந்த நேரத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப பன்மடங்காக வளரும் என்பது ஐதீகமாக உள்ளது. எந்த ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ! அந்த செயலை குளிகை நேரத்தில் நீங்கள் துவங்கினால் நினைத்தது வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எந்த செயல் திரும்ப திரும்ப நடைபெறக் கூடாது என்று இருக்கிறதோ! அந்த செயலை குளிகை நேரத்தில் கட்டாயம் செய்யவே கூடாது. இதனால் தான் திருமணங்கள் குளிகை நேரத்தில் செய்யப்படுவதில்லை.
குளிகையில் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. விவாகரத்து நேரும். மீண்டும் திருமணம் செய்யும் நிலை வரலாம். இதனால் அந்த நேரத்தில் திருமணம் தவிர்க்கப்படுகின்றன. இந்த நேரத்தில் தங்க நகையை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, இறந்தவர்களின் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த விஷயங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
எந்த மாதிரியான விஷயங்களை குளிகையில் தவிர்க்கலாம் என்று அல்லவா? எனில் குளிகையில் என்ன செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று இப்பதிவில் பார்ப்போமா?
ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ! அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யப்படமாட்டாது. இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம். குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் தானே பிரச்சனை? திரும்ப கொடுக்கலாம் அல்லவா? அவ்வாறு கொடுத்தால் உங்களுக்கு பணவரவு அதிகம் உண்டாகி கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும்.
இந்த அதிர்ஷ்ட நேரத்தில் நீங்கள் இந்த விஷயத்தை செய்தால் பணம் கொழிக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது. பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகையில் ஒரு கண்ணாடி பௌலில் சிகப்பு பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கை அறையில் அல்லது யாரும் அடிக்கடி வராத இடங்களில் இதை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம்.
குடும்பத்தில் இருக்கும் நபர்களோ அல்லது நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ, யாராக இருந்தாலும் சரி அந்த சிகப்பு பட்டு துணியின் மீது குளிகை நேரத்தில் தினமும் ரூபாய் நோட்டுகளை சேமித்து வருவதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற முடியும். இவ்வாறு நீங்கள் குளிகை நேரத்தில் சேமித்து கொண்டே வரும் பணத்தை தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
நீங்கள் சேமித்த இந்த பணத்தை கொண்டு நல்ல விஷயங்கள் செய்யலாம். உங்கள் வாழ்வில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய காரியத்திற்காக கூட பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு கட்டப் போகிறீர்கள் என்றால் அதில் இந்த தொகையை சேர்த்துக் கொள்ளலாம். தொழில் துவங்கப் போகிறீர்களா? வியாபாரம் செய்யப்போகிறீரகளா? வண்டி, வாகனம் வாங்க போகிறீர்களா? நிலம் வாங்கப் போகிறீர்களா? இது போன்ற மிகப்பெரிய விஷயத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நீங்கள் செய்ய இருக்கும் காரியங்கள் தடையின்றி சிறப்புடன் நடைபெறும். குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- எலுமிச்சம்பழம் அழுகாமல் காய்ந்து விட்டால், உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.
- இது ஒரு எளிமையான பரிகாரம் தான் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம்.
வீட்டில் இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் அதிகமா, கண் திருஷ்டியின் ஆதிக்கமா, என்று புரியவில்லை. சந்தோஷமாக இருந்த குடும்பம் தான், ஒரு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சந்தோஷம் தொலைந்து போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நிற்பார்கள். வீட்டின் மூலை முடுக்குகளில் மறைந்திருக்கும் துர் சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லவா. அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம். இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் இழுந்த சந்தோஷத்தை ஒரே நாளில் மீண்டும் பெறுவதற்கு இந்த பரிகாரம் துணையாக இருக்கும்.
இந்த பரிகாரத்தை ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். பூஜை அறையில் செய்யலாம். ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு, சிறிய அளவில் இருக்கும் சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி கொஞ்சமாக வேப்ப இலை, கொஞ்சமாக மஞ்சள் பொடி ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை, அந்த தண்ணீரில் போட்டு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். பூஜைக்கு முன்பு வழக்கம் போல பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்திருக்க வேண்டும்.
ஒரு தாம்பூல தட்டில் வேப்ப இலைகளை பரப்பி, அதன் மேலே இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். உங்களுக்கு இஷ்டமான ஏதாவது ஒரு அம்மனை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மனின் பெயரை 108 முறை உச்சரித்து மந்திரம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் 'ஓம் சக்தி பராசக்தி' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அம்மனை மனம் உருகி வீட்டிற்கு அழைக்க வேண்டும்.
உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு நீங்கள் அம்மனின் பெயரைச் சொல்லி வீட்டிற்குள் அழைத்தால், அம்மன் வந்து நீங்கள் வைத்திருக்கும் அந்த சொம்பு தண்ணீரில் இறங்கி விடுவாள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும். வீட்டில் ஏதாவது துர்ஷக்தி இருந்தால் கூட, கெட்ட சக்தி இருந்தால் கூட, அது வீட்டை விட்டு வெளியேற வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
பூஜை நிறைவடைந்த பின்பு வெள்ளிக்கிழமை அன்றே அந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நன்றாக தெளித்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் மேலும் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். அந்த அம்மன் இறங்கிய தீர்த்தம் தான் இது. அந்த தண்ணீரில் போட்ட எலுமிச்சம் பழத்தை எடுத்து பூஜையறையில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். எலுமிச்சம்பழம் அழுகாமல் காய்ந்து விட்டால், உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.
காய்ந்த எலுமிச்சம் பழத்தை கால்படாத இடத்தில் போட்டு விடலாம். எலுமிச்சம் பழம் அழுகி இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அந்த எலுமிச்சம் பழம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். கைப்படாமல் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளிப்பக்கம் போட்டுவிட்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான். குடும்ப பிரச்சனைக்கு ஒரு சில நாட்களில் நல்லதொரு தீர்வை அந்த அம்பாளே காட்டிக் கொடுப்பாள். இது ஒரு எளிமையான பரிகாரம் தான் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.
- சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு சந்திர யோகம்.
ஒரளவு ஜோதிட ஞானம் உள்ளவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகத்தில் உள்ள சிறப்பான யோகம் பற்றி கூறுவார்கள்.ஆனால் ஜாதகர் அனுபவிக்கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சில ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது. ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரமாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்ன தான் காரணம் என்பதை சற்று உள்ளாழ்ந்து உற்று நோக்கினால் இந்த புதிருக்கு விடை கிடைக்கும். இது போன்ற மாறுபட்ட பலனுக்கான காரணத்தை பார்க்கலாம்.
குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவின் பார்வை பதியக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலோ குரு சந்திர யோகம் உண்டாகும். இந்த யோகம் இருக்கும் ஜாதகர்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ், அழியா செல்வம், செல்வாக்கு, காரிய சித்தி, சமுதாயத்தில் உயர்ந்த பதவி தேடி வரும்.
கெஜகேசரி யோகம்
சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 4,7,10-ம் இடங்களில் குரு இருந்தால் அது கெஜகேசரி யோகமாகும். எதிரிகளை சிங்கம் போல எதிர் கொண்டு அழிக்கக்கூடியவர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் சொன்னதை செய்யக்கூடிய செயலாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாக்கும் வெற்றி தரும் யோகமாகும்.
சகடையோகம்
சந்திரனுக்கு 6,8-ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சகடையோகம்
சந்திரனுக்கு 6,8-ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குரு சந்திர யோகம் யாருக்கு வரம்?
குருவினால் உண்டாகும் யோகங்கள் பல இருந்தாலும் அனைவராலும் பேசப்படும் யோகம் குரு சந்திர யோகம். பொதுவாக யோகம் என்ற சொல்லுக்கு கிரகச் சேர்க்கை என்று பொருளாகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர். குரு சந்திர யோக அமைப்பு உள்ள சிலர் யோகத்தையும் பலர் வாழ்க்கையில் தடுமாற்றத்தையும் சந்திப்பதை நடை முறையில் பார்க்கிறோம். அதாவது குருச் சந்திர யோகம் பலருக்கு அவயோகத்தையும் தருகிறது. சகடை யோகம் பலர் வாழ்வில் பெரிய திருப்பு முனையை தந்தும் உள்ளது.
ஜாதகத்தில் இருக்கும் யோகம் ஏன் வேலை செய்யவில்லை ஜோதிடத்தில் எந்த ஒருவிதியும் அனுபவப்பூர்வமாக ஒத்துவந்தால் மட்டுமே ஏற்க வேண்டும். குரு சந்திர யோகம் பலன் தர ஒரு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் சுபத்துவம் பெறுவது அவசியம். கிரகங்கள் எங்கே இருக்கிறது என்பதை விட எப்படி இருக்கிறது, என்ன ஆதிபத்தியம் பெறுகிறது என்பது மிக முக்கியம். இந்த அமைப்பில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருப்பது சிறப்பு. குரு ஆட்சி உச்சம் திக்பலம் போன்ற அமைப்புகளில் இருப்பது மேலும் சிறப்பு.குருவும், சந்திரனும் நீசம் பெறாமல் அசுப கிரக சம்பந்தம் பெறாமல் இருப்பது நல்லது. அத்துடன் அதாவது சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருக்கும் கெஜகேசரியோகமும், குருச் சந்திர யோகமும் சில லக்னங்களுக்கு கெடுதலையே தருகிறது.
அதனால் யோகம் இல்லாத சாதாரண வாழ்க்கையே வாழுகிறார்கள். அதே போல் குருவும் சந்திரனும் 6,8 ஆக சகடை அமைப்புள்ள எத்தனையோ நபர்கள் வி.ஐ.பி.யாக நல்ல பொருளாதாரத்துடன் வலம் வருகிறார்கள்.ஒருவரின் பொருளாதாரம், யோகம், அதிர்ஷ்டம் போன்றவைகள் குருசந்திர யோகம், கெஜகேசரி யோகம் சகடை அமைப்புகளால் மட்டும் தீர்மானிக்கபடுவதில்லை. அதே போல ஒருவர் வாழ்க்கையின் வளர்ச்சியை லக்னம், லக்னாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் அடுத்தடுத்த தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன. அதனால் இது அனுபவத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதியே.
எனவே குருச்சந்திர யோகம், சகடை மட்டுமே ஒருஜாதகத்தின் பலனை தீர்மானிக்காது. மேலும் லக்ன ரீதியாக குருவும் சந்திரனும் பெற்ற ஆதிபத்தியமே குரு சந்திரனால் ஏற்படும் யோகம், அவயோகத்தை தீர்மானிக்கிறது. அதன்படி 12 லக்னத்தில் குரு சந்திர யோகத்தால் மீன லக்னத்தினர் மட்டுமே ஆதிபத்திய ரீதியாக அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள். மீன லக்னத்திற்கு குரு லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி. பிற லக்னத்திற்கு ஒரு ஆதிபத்திய ரீதியாக சுப பலன் நடந்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக எதிர்வினை உண்டு.
இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.எத்தகைய கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பொதுவாக பலன் சொல்லக் கூடாது. லக்ன ரீதியான ஆதிபத்தியம், நின்ற வீடு, நட்சத்திர சாரம் போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். மேலும் கர்மா ரீதியாக குருச் சந்திர யோகத்தை உற்று நோக்கினால் குரு கால புருஷ 9-ம் அதிபதி. தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் பற்றிக் கூறுமிடம். சந்திரன் கால புருஷ 4-ம் அதிபதி தாய் பற்றிக் கூறுமிடம். ஆக தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் ஏற்படும் கர்ம வினைப் பதிவின் தொடர்ச்சியே குரு சந்திரயோகம்.
பரிகாரம்:
பொருளாதாரத்தில் உன்னத நிலையை அடைய வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்கினால் மகத்தான வாழ்வு உண்டு. இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறியும் குரு சந்திர யோகம் இல்லாததால் வறுமை, கடன் இருப்பதாக நம்புபவர்கள் வியாழக்கிழமை காலை 11-12 மணி வரையான சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும். வியாழக்கிழமை மட்டும் பெருமாள் நம்மை காணும்படியான அலங்காரத்தில் இருப்பார். பெருமாளின் கண் திறந்து இருப்பது நேத்ர தரிசனம் என்று பெயர். அன்று பெருமாளை தரிசித்தால் பொருள் குற்றம் அகன்று நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional
- கண்திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார்.
- சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
பெரியாழ்வார் கனவில் ஒருநாள் பெருமாள் தோன்றி உடனடியாக மதுரை சென்று பாண்டியன் சந்தேகத்தை தீர்க்குமாறு அருளினார். வல்லபதேவ பாண்டியனுக்கு இருந்த சந்தேகம் "மறுபிறவியில் ஏற்றம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?'' என்பது தான்.
மதுரை அரசவைக்குள் பெரியாழ்வார் நுழைந்தார். பாண்டியனுக்கு இப்படி ஒரு மனிதன் தம் தேசத்தில் இருப்பதே தெரியாது. பெரியாழ்வார் விளக்கம் அளித்தார். மன்னன் சந்தேகம் தீர்ந்தது. அரசன் அறிவித்த பொற்கிழி ஆழ்வாரை நோக்கி வந்தது. பொற்கிழியோடு ஆழ்வார் அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.
சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. யானை மீது ஆழ்வாரை அமர வைத்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியைகருடன் மேல் அமர்ந்து வந்து பெருமாள் கண்டுகளித்தார். பெருமாளைக் கண்ட ஆழ்வார் அகமகிழ்ந்தார்.
ஆனால் தன்னால் பெருமாள் கண்திருஷ்டிக்கு உண்டானதை உணர்ந்தார். கண்திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகம் "பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்..'' என்பதே.
அந்த பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அந்த கோயிலே தமிழ் நாட்டின் அடையாளமாக பின்னாளில் மாறியது. தமிழ்நாடு அரசைக் குறிக்கும் லோகோவில் இந்த கோபுரம் தான் இடம்பெற்றுள்ளது.
பெருமாளின் கண்திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய "பல்லாண்டு'' பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது. திருப்பதி பெருமாள் கோயில் நடை திறக்கும்போதும் சாத்தும்போதும் "பல்லாண்டு.. பல்லாண்டு'' பாடல் பாடப்படும். திருப்பதி கோயிலின் சக்திக்கு ஆதாரமாக அந்த பதிகம் இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
தமிழின் ஒரு சொல் வெல்லும்.. ஒரு சொல் கொல்லும் என்ற கவிஞர் வாலியின் சொற்கள் தான் ஞாபகம் வருகிறது.
-சதீஷ்
- 22.4.23 முதல் 19.5.23 வரை தண்ணீர் தானம் செய்யுங்கள்.
- தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
கோடை வெயில் மிக கடுமையான உக்கிரமாக உள்ளது. இதை அறிந்தே நம் முன்னோர்கள் இந்த சீசனில் தண்ணீர் தானம் செய்ய வேண்டும் என்று வரையறுத்து வைத்துள்ளனர்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஆனால் அதைவிடச் சிறந்தது உதகதானம் என்னும் தண்ணீர் தானம். அதுவும் வெயில் நாட்களான சித்திரை, வைகாசி மாதங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தாகத்திற்கு தண்ணீர் தருவது மிகப்பெரும் புண்ணியம் தரும்.
22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 19-ந்தேதி வரை அல்லது ஏதாவது 3 நாளாவது வசதியிருக்கும் அனைவரும் அவரவர் வசிக்கும் தெருவிலோ அல்லது தன் வீட்டு வாசலிலோ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொண்டு தெருவில் நடந்து செல்லும் மக்களுக்கு குடிக்க தண்ணீர் தர வேண்டும். இது அனைத்து பாபத்தையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மையை தம்.ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்துமாறு தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.
இந்த தானம் செய்பவர்களின் தந்தை, தாத்தா, அம்மா, பாட்டி முதலிய முன்னோர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் அமைக்க முடியாதவர்கள் ஒரு குடம் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை நினைத்து தானம் செய்ய வேண்டும். இதனால் நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும்.
இவ்வாறு கோடை காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு குடம் தண்ணீர் தானம் செய்யலாம் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு நாளாவது 12, 6, 3 என்ற எண்ணிக்கையில் குடம் தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
- மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.
- பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.
பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர்.
தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.
சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.
நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.
- தோஷமுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
- கோபம் என்பது மனிதனின் குணநலன்களில் மிகவும் மோசமானது.
ஊர் கூட்டி நாள், நட்சத்திரம் பார்த்து பெரியவர்கள் முன்னிலையில் நடக்கும் திருமண பந்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மாங்கல்யம்! இந்த திருமாங்கல்யத்தை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை கொடுக்கும் என்பார்கள். மாங்கல்ய சரடு அணிந்திருந்தாலும், மஞ்சள் கயிறு அணிந்து இருந்தாலும் மாங்கல்யத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து இறைவனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதாக ஐதீகம் உண்டு.
இத்தகைய புனிதமான பந்தத்திற்கு சாட்சியாக இருக்கக்கூடிய இந்த திருமண திருமாங்கல்யத்தை பெண்கள் ஒருபொழுதும் தூக்கி எறிந்து தங்களுடைய ஆத்திரத்தை காண்பிக்க கூடாது என்கிறது சாஸ்திரங்கள். பெண்கள் பூமாதேவியை போல பொறுமையானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இத்தகைய பெண்கள் தங்களுக்குரிய நியாயத்தை வேறு வகையில் பெறலாமே ஒழிய, இது போல மாங்கல்யத்தை கழற்றி வீசி தான் கோபத்தை காண்பிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
கட்டிய மணவாளன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் கட்டிய மாங்கல்யத்தை தூக்கி எறிந்தால் அது அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்திற்கு தீராத தோஷத்தை ஏற்படுத்துவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. தெரிந்தும், தெரியாமலும் செய்யும் இச்செயலானது அசுப பலன்களை கொடுக்கக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அதிபதியானவர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் இது போன்ற பாவ செயல்களை பெண்களுக்கு செய்ய தூண்டுவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது. ஜாதகத்தில் எட்டு, ஏழு, குடும்பஸ்தானம் ஆகிய இரண்டு ஆகிய இடங்கள் சரியாக அமையவில்லை என்றால், குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும். இதனால் திருமாங்கல்யம் ஆனது அவள் கழுத்தை விட்டு நீங்கும் என்பது ஜோதிட கணக்காக இருக்கிறது. இதற்கு இடம் கொடுக்காமல் பெண்கள் சற்று தங்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக இருப்பது ரொம்பவே நல்லது.
சிலருடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய மாங்கல்யத்தை உண்டியலில் போடுமாறு பரிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும். இப்பரிகாரத்தை நிறைவேற்ற தவறியவர்களுக்கும், இது போல நடப்பது உண்டு. எனவே தோஷம் உள்ளவர்கள் திருமாங்கல்யத்தை முறைப்படி சேர்க்க வேண்டும். புதிய தாலியை கணவன் கையால் மனைவி ஆனவள் அணிந்து கொண்டு, பழைய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு வந்தால் இத்தகைய பிரச்சினைகள் நிகழாது தடுக்கலாம்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் குறைய ஆரம்பிக்கும். எனவே தோஷமுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கோபம் என்பது மனிதனின் குணநலன்களில் மிகவும் மோசமானது. உங்களுடைய கோபத்தை நீங்கள் அடக்கி ஆள கற்றுக் கொண்டாலே, அமைதி உங்களை தேடி தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அதனை விடுத்து சரிக்கு சமமாக போட்டிக்கு போட்டியாக கணவனும், மனைவியும் இணைந்து சண்டை போடுவதால் குடும்பம் தான் உடையுமே தவிர, பிரச்சினைகள் தீர்வதில்லை.
- பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும்.
- பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.
பிரம்மஹத்தி தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பது பற்றி புராணங்களில் சொல்லப்படுகிறது. பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் பிரம்மஹத்தி தோஷத்தை தரும். அதே போல திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், ஒருவன் செய்யாத தவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.
ஒருவரின் பிறந்த ஜாதக ரீதியாக குரு சனி இணைந்து இருந்தாலோ அல்லது வேறு எந்த தொடர்பு பெற்றிருந்தாலும் பலம் பெற்றிருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. பிரம்மஹத்தி தோஷம் இருந்தால் ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படும். புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.
திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மஹத்தி தோஷத்திக்கு பரிகாரம் என்றால் திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக்கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான். வாழ்க்கையில் தொடர்ந்து அடிக்கடி கஷ்டங்களை சந்தித்து வருபவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று தோஷ பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தலைமுறை சாபம் நீங்கி ஏற்றம் பெறலாம்.
- காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள்.
- 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.ஆனாலும் திருமணம் போன்ற விஷயங்களுக்கு இந்த கால சர்ப்ப தோஷம் எந்த விதத்திலும் பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்பதை முழுமையாக நம்பலாம்.
அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
ராகுவின் ஆலயங்களாக திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்புரம் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று இறைவனை வழிபட ராகுவின் தோஷம் விலகி நன்மைகள் நடக்கும்.
சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயம் கேது பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சனிக்கிழமையில் சென்று இறைவனை தரிசித்தால் கேதுவின் தோஷம் நீங்கி நன்மைகள் நடக்கும்.
ஸ்ரீகாளகஸ்தி, ராகு-கேது இருவருக்குமான ஸ்தலமாக இருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது ராகு கேதுவின் தோஷம் வீரியத்தைக் குறைக்கும். மேலும் கேதுவின் ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ள காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயத்திற்கு சென்று வருவது நல்ல பலன்களைத் தரும்.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ துர்கை வழிபாடும், புற்று உள்ள அம்மன் ஆலயங்கள், கருமாரியம்மன் ஆலயம், நாகாத்தம்மன் ஆலயம் முதலான கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது ராகு கேதுவின் வீரியத்தைக் குறைத்து நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
- பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும்.
- ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை? என்பதைப் பார்க்கலாம்.
சுப வினையை எதிர்கொள்ளும் காலங்களில் உற்சாகமாக வாழும் மனிதர்கள் அசுப பலன்கள் நடக்கும் காலங்களில் ஜோதிடத்தின் உதவியை நாடுகிறார்கள். ஜாதகரின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப சில பரிகாரங்கள் , வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தரும் பரிகாரங்கள் சிலருக்கு கிணற்றில் போட்ட கல்லாக ஜாதகருக்கு தொடர்ந்து அசுபத்தை மட்டுமே உமிழ்கிறது. இது போன்ற காலகட்டங்களில் பரிகாரங்கள் என்பது உண்டா இல்லையா என்ற தர்க்கமும் அவநம்பிக்கையும் ஏற்படுவது சகஜம். பரிகாரம் நிறைவேறாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை? என்பதைப் பார்க்களாம்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை சரி செய்வதே பரிகாரம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்கின்ற சுக, துக்கங்கள் அனைத்தும் அவன் செய்கின்ற கர்ம வினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த கர்ம வினையை தெரிந்து செய்த பாவம், தெரியாது செய்த பாவம், என இரண்டாக பிரிக்கலாம்.
தெரியாமல் செய்த பாவத்தின் மூலம் உருவாகும் அசுப பலனை பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும். தெரிந்து செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். சிறிய தோஷம் மற்றும் தடை, தாமதங்கள் ஆகியவை தெரியாமல் செய்த வினைகளினால் உருவாகுவது.பெரிய கடுமையான தோஷங்கள் அனைத்தும் தெரிந்தே செய்த வினைகளின் அடிப்படையில் உருவாகுவது.
ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னத்தின் மூலம் தெரிந்த மற்றும் தெரியாமல் செய்த பாவங்களை கண்டறிய முடியும். வேதாகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் பரிகார, வழிபாட்டு முறைகள் சக்தி வாய்ந்தவை. அவைகளை முறையாகச் கடைபிடிக்கும் போது நிறைவேறும். அதேபோல் பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.
பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு காரிய சித்திக்காக நேரம் பொருள் செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவது. மனிதர்களின் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்ற செய்யப்படும் பூஜையே பரிகாரமாகும். அதாவது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது வெட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவை அடங்கும். அதாவது ஹோமம், யாகத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது.
வழிபாடு என்பது தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான் என்பதை உணர்ந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வது.
அதாவது காரியசித்திக்காக குல , குடும்ப , உபாசன , இஷ்ட , காவல் தெய்வத்திற்கு தன் எண்ண அலைகளை அனுப்பி தன் விருப்பத்தை சித்தியாக்குவது.
பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும்.
வழிபாட்டின் பலன் ஒருவரின் ஆயுள் முழுவதும் அவருடன் காவலாக இருக்கும்.சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி அறை, பேன் பயன்படுத்துவது பரிகாரம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அறையை விட்டு வெளியே வந்தாலும் ஏசி, பேன் நம்மை காக்காது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ற உணவு , நீராகாரம் உண்டு இயற்கைக்கு ஏற்றாற்போல் தன் உடம்பை தயார் செய்வது வழிபாடு.
பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் நன்கு அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பரிகாரத்திற்கு பலன்கள் அதிகம். மற்ற வகையில் செய்யப்படும் பரிகாரம் பயன்படாமல் போகும்.
மேலும் பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம் குறிகாட்டும் பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டும்.பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள் தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும் சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.
நல்ல விஷயத்துக்கான பரிகாரம் வளர்பிறையிலும் மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்ய வேண்டும்.
ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான் தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.
திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு 6, 8, 12 மாதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்க கூடாது. மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும் போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.
பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் லக்னாதிபதி வலிமையுள்ள ஜாதகருக்கு பரிகாரம் உடனே நிறைவேறும்.
பரிகாரம் செய்யும் கிரகம் கோட்ச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.
மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது 1 வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துள் நிச்சயமாக நிறைவேறும்.
சுய பரிகாரம் செய்தல், விருப்பமில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக பரிகாரம் செய்வது, வேத விற்பனர் ஏதோ மந்திரம்சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது. ஜோதிடர் பரிகாரம் சொல்லும் போதே எனக்கு அந்த கிழமை , தேதி சரிவராது என்று கூறும் போது பரிகாரம் பலிக்காது.
ஒரு ஜாதகத்தின் குரு , சனி , செவ்வாய் தொடர்பே ஜாதகருக்கு பரிகாரம் தேவையா? வழிபாடு தேவையா என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணியாகும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, (1) பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (5) மற்றும் பாக்கிய அதிபதி (9) தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனே நிறைவேறும். 6,8,12ம் அதிபதிகளின் தசா புக்திகள், நீச்ச கிரக தசா புக்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலிக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரும். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும், பரிகார பூஜைகள் உரிய பலனைத் தரும் என்பது தெளிவாகிறது.
- அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
- திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.
இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு. இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.
பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடை பெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.






