search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கண் திருஷ்டி போக்கும் பெரியாழ்வார் பதிகம்
    X

    கண் திருஷ்டி போக்கும் பெரியாழ்வார் பதிகம்

    • கண்திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார்.
    • சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

    பெரியாழ்வார் கனவில் ஒருநாள் பெருமாள் தோன்றி உடனடியாக மதுரை சென்று பாண்டியன் சந்தேகத்தை தீர்க்குமாறு அருளினார். வல்லபதேவ பாண்டியனுக்கு இருந்த சந்தேகம் "மறுபிறவியில் ஏற்றம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?'' என்பது தான்.

    மதுரை அரசவைக்குள் பெரியாழ்வார் நுழைந்தார். பாண்டியனுக்கு இப்படி ஒரு மனிதன் தம் தேசத்தில் இருப்பதே தெரியாது. பெரியாழ்வார் விளக்கம் அளித்தார். மன்னன் சந்தேகம் தீர்ந்தது. அரசன் அறிவித்த பொற்கிழி ஆழ்வாரை நோக்கி வந்தது. பொற்கிழியோடு ஆழ்வார் அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

    சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. யானை மீது ஆழ்வாரை அமர வைத்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியைகருடன் மேல் அமர்ந்து வந்து பெருமாள் கண்டுகளித்தார். பெருமாளைக் கண்ட ஆழ்வார் அகமகிழ்ந்தார்.

    ஆனால் தன்னால் பெருமாள் கண்திருஷ்டிக்கு உண்டானதை உணர்ந்தார். கண்திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகம் "பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்..'' என்பதே.

    அந்த பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அந்த கோயிலே தமிழ் நாட்டின் அடையாளமாக பின்னாளில் மாறியது. தமிழ்நாடு அரசைக் குறிக்கும் லோகோவில் இந்த கோபுரம் தான் இடம்பெற்றுள்ளது.

    பெருமாளின் கண்திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய "பல்லாண்டு'' பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது. திருப்பதி பெருமாள் கோயில் நடை திறக்கும்போதும் சாத்தும்போதும் "பல்லாண்டு.. பல்லாண்டு'' பாடல் பாடப்படும். திருப்பதி கோயிலின் சக்திக்கு ஆதாரமாக அந்த பதிகம் இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

    தமிழின் ஒரு சொல் வெல்லும்.. ஒரு சொல் கொல்லும் என்ற கவிஞர் வாலியின் சொற்கள் தான் ஞாபகம் வருகிறது.

    -சதீஷ்

    Next Story
    ×