என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள்.
    • சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

    எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

    கண்திருஷ்டியால் ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங்களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.

    அதனால்தான் 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, 'திருஷ்டி'யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.

    இதனை முற்காலத்தில் உணர்ந்த நம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு பொட்டு வைக்கும் பொழுது திருஷ்டி பொட்டு என்று ஒன்றைக் கன்னத்தில் வைப்பார்கள். அதே போல் நன்கு ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு இரவு திருஷ்டி சுற்றித்தீபம் ஏற்றி வைப்பார்கள்.

    ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வாயிற்படியின் நிலையில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக கட்ட வேண்டும். மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதனால் எதிர்மறைச் சக்திகள் மாறி, நேர்மறை சக்திகள் வீட்டில் வியாபிக்கத் தொடங்குகின்றது. வழிகாட்டும் காலடி மண், மிளகாய், உப்பு போன்றவற்றை சுற்றி நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் நெடியைப் பொறுத்து நமது கண் திருஷ்டியை அறிந்து கொள்ளலாம். எலுமிச்சை, படிகாரம், குங்குமம், கற்றாழை, பூசணிக்காய் போன்றவை எல்லாம் திருஷ்டியைப் போக்கும் பொருட்களாகும்.

    வீட்டில் எப்பொழுதும் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண்திருஷ்டியைப் போக்கும். அதே போல இல்லத்தில் நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதும் நல்லது. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் எதிரிகளின் தொல்லை குறையும். சிலர் வீட்டில் படிகாரத்தைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த படிகார உப்பு கரைவது போல, நமது துன்பங்களும் கரையும் என்பது நம்பிக்கை.

    கிராமங்களில் உள்ள பெரியவர்கள் கல் உப்பை திருஷ்டி சுற்றி தண்ணீரில் கரைய வைப்பர். இல்லத்தில் கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். வீட்டின் நுழைவு வாசலில் நந்தி வீதியைப் பார்க்கும் படி வைக்கலாம். அதனால் நமது தடைகள் அகலும். தனவரவு கூடும். வீடுகட்டும் பொழுது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி மாறும் என்பது நம்பிக்கை.

    பெரிய இல்லங்கள் கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் எல்லாம், பாதிவேலை முடிந்த உடனேயே பால் காய்ச்சி விடுகின்றனர். பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவர். கிரகப் பிரவேசத்திற்கு வருபவர்களின் எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஹோமங்கள் வைப்பதெல்லாம் நேர்மறை சக்தி, நம் வீட்டில் நிலைத்திருப்பதற்காகத்தான் செய்கின்றோம்.

    • பெரிய அளவில் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட காலையில் இதை மட்டும் செய்யலாம்.
    • இந்த பரிகாரம் செய்தால் குடும்பம் சுபிட்சம் பெறும்.

    காகத்திற்கு எப்போது வேண்டுமென்றாலும் உணவு வைக்கலாம். தவறே கிடையாது. இருந்தாலும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு விட்டு, இரண்டே இரண்டு பிஸ்கட்டுகளை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து காகத்திற்கு வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து விடுங்கள். இதை தினமும் உங்கள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பிஸ்கட்டை காகம் வந்து எடுத்துச் செல்லும்.

    காலை பசியோடு இருக்கும் அந்த காகத்திற்கு நீங்கள் உணவு வைப்பது எவ்வளவு சிறப்பு தெரியுமா. அந்த காகம் தன்னுடைய குஞ்சுகளை ஏதாவது ஒரு மரத்தின், கூட்டில் வைத்துவிட்டு இறை தேட வந்திருக்கும். அப்போது நீங்கள் வைக்கும் பிஸ்கட்டை கொண்டு போய் அந்த குஞ்சுகளுக்கு கொடுக்கும். பசியோடு இருக்கும் தன் பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்த உங்களை அப்போது அந்த காகம் எவ்வளவு தூரம் வாழ்த்தும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

    உதாரணத்திற்கு நம்முடைய பிள்ளை பசியாக இருக்கிறது. அந்த நேரம் நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை. அப்போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் உங்களுடைய மனது எவ்வளவு குளிரும். அதேபோல் தான் காகத்திற்கும் உணர்வு இருக்கிறது. பெரிய பெரிய அளவில் செலவு செய்து அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட, காலையில் இந்த ஒரு நல்லதை செய்தால் போதும். குடும்பம் சுபிட்சம் பெறும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும் இவர் திருமேனியில் அடக்கம்.
    • மேஷ ராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும். அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விளங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    • 20-05-2023 முதல் 18-06-2023 வரை ஸ்ரீ மகா விஷ்ணுவை பூஜை செய்து வழிபட வேண்டும்.
    • ஒரு குடம் அல்லது சொம்பு நிறைய தண்ணீரை தானமாக கொடுக்கலாம்.

    வைகாசி மாத வளர்பிறை பிரதமை முதல் ஆனி மாதம் அமாவாசை வரை (20-05-2023 முதல் 18-06-2023 வரை) ஸ்ரீ மகா விஷ்ணுவை திரிவிக்ரம மூர்த்தியாக பூஜை செய்து வழிபட வேண்டும்.

    இந்த நாட்களில் தினமும் தானங்கள் செய்ய வேண்டும். அதாவது ஒரு குடம் அல்லது சொம்பு நிறைய தண்ணீரை தானமாக கொடுக்கலாம்.

    சற்று வசதி இருப்பவர்கள் பனை ஓலையால் செய்த விசிறி, வாசனை உள்ள சந்தனம் ஆகியவற்றை இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளிலும் அல்லது கடைசி 3 நாள் அல்லது ஏதாவது ஒரு நாளாவது தானம் செய்யலாம்.

    இதனால் திரிவிக்ரம சுவரூப மகாவிஷ்ணு மகிழ்ச்சி அடைவார்.

    இதனால் ஸ்ரீ மகாபலிக்கு அருளியதைப்போல் நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் பகவான் ஏற்றுக்கொண்டு அருள் புரிவார்.

    • பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும்.
    • செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம்.

    அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம். கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம்.

    பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

    பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.

    தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான் ஆகிய இந்த 3 கிரகங்களை திருப்தி செய்ய வேண்டும்.
    • நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

    வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பது நாம் எல்லோருடைய கனவாக இருக்கின்றது. ஆனால் நாம் நினைத்த மாதிரி சம்பள உயர்வு, பதவி உயர்வு, நினைத்த வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதே இன்றைய சூழ்நிலையில் ரொம்ப பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகள் தீர இந்த பரிகாரங்களை முழுமனதுடன் செய்தால் பலன் கிடைப்பது நிச்சயம்.

    வாரம் தோரும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று உங்கள் கையால் பசுவிற்கு வாழைப்பழங்கள் வாங்கி கொடுக்க வேண்டும். உங்களுடைய வீதிகளில் பசுமாடு நல்ல வெயில் சமயத்தில் நடந்து வரும்போது, உங்கள் வீட்டில் வடித்த கஞ்சி தண்ணீர் இருக்கும் அல்லவா. அதை தண்ணீரோடு கலந்து, கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து பசு மாட்டிற்கு தாகத்திற்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

    வியாழக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் குருவின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். ஆனால் இது பரிகாரத்திற்காக சொல்லப்பட்ட விஷயம். வியாழக்கிழமை அல்லாமல் உங்களால் இப்படிப்பட்ட விஷயங்களை எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் செய்வதினால் பலன் பல மடங்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

    பெரும்பாலும் நம் வீட்டின் அருகில் இருக்கக் கூடிய கோவில்களில் குளங்கள் இருக்காது. ஆனால் இன்னமும் பெரிய பெரிய பழமையான கோவில்களில் குளங்கள் இருக்கிறது. அதில் தண்ணீரும் இருக்கிறது. அதில் மீன்கள் வாழ்கின்றது. இப்படி எங்காவது கோவிலுக்கு செல்லும் போது அந்த குளத்தில் இருக்கும் மீனுக்கு பொரி வாங்கிப் போடலாம். வீட்டிலிருந்து செல்லும்போது கோதுமை மாவில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கோதுமை உருண்டைகளை மீனுக்கு உணவாக போட்டால் நம் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இதன் மூலம் சூரிய பகவானின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பிரமோஷன் கிடைக்கும்.

    ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். நடக்க முடியாத ஊனமுற்றவருக்கு ஒரு செருப்பு வாங்கி கொடுத்தால் கோடான கோடி புண்ணியம். (காலில் நடக்க முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு இந்த ஸ்பெஷல் ஆக டிசைன் செய்யப்பட்ட காலணிகள் விற்கும் அல்லவா அது.) நடக்க முடியாதவருக்கு ஒரு ஹேண்ட் ஸ்டிக் வாங்கி கொடுத்தீர்கள் என்றால், உங்களை சனி பகவான் எதுவுமே செய்ய மாட்டார். பெரிய கஷ்டத்தை கொடுத்தால் கூட அதில் பெரிய அளவில் பாதிப்பு நமக்கு வராமல் சனி பகவானே பார்த்துக் கொள்வார்.

    சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான், இந்த 3 கிரகங்களையும் திருப்தி செய்ய வேண்டும். இந்த மூன்று கிரகங்களும் உங்களுடைய ஜாதக கட்டத்தில் சரியாக அமரவில்லை, வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்தாலே போதும். வாழ்வில் வளம் பெறலாம்.

    • தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.
    • பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் வீடு, வாகன யோகம் போன்ற சுப பலன்கள் எளிதில் நடக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என்பது தவறான கருத்து. ஒரு தாய், தந்தைக்கு பிறந்த 4 ஆண்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டும் பித்ரு தோஷ தாக்கம் அதிகமாக இருக்கும். முன்னோர்களின் மரபணு சம்பந்தம் ஒருவரின் உடலில் எந்த அளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் பித்ரு தோஷ தாக்கத்தின் வலிமையில் மாற்றம் ஏற்படும்.

    ஆனால் பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். நம் அண்ணன் கஷ்டப்படுகிறான், தம்பி கஷ்டப்படுகிறான். நாம் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறோம். அதனால் நன்றாக இருக்கிறோம் என்று யாரும் நினைத்து விட முடியாது. அந்த பிறவிக்குள் ஏதாவது ஒரு கால கட்டத்திற்குள் நிச்சயம் பாதிப்பு உண்டு. அவர் பாதிக்கப்படவில்லை என்றால் அவரின் வாரிசுகள் பல மடங்காக பாதிக்கப்படுகிறார்கள்.

    வசதிகள் கொட்டி கிடக்கும். ஆனால் அதை அனுபவிக்க பாக்கியமற்ற வாரிசுகள் உருவாகும். கொடுத்து கெடுக்கும் யோகம். இதுவும் ஒரு வகையான பித்ரு தோஷம். நமக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என்று யாரும் வருந்த வேண்டாம். ஒரே தாயின் வயிற்றில் உருவாகிய வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் மட்டும் மாறுபடும்.

    ஒரு மனிதன் தந்தை வழி மூதாதையர் 6 பேர்,தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    முறையான பித்ரு பூஜை ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் நிச்சயம் அகற்றி விடும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை பரிகாரங்களை செய்பவர்கள், தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் தொடர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எனவே, மகாளய பட்சம் அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் புண்ணிய பலன் தலைமுறைக்கு வந்து சேரும்.

    • தினமும் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
    • எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    வார நாட்களில் எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    * ஞாயிறு:- இறை சிந்தனை தோன்றும். பித்ரு தோஷம், இதயம், வயிறு, ரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அகலும்.

    * திங்கள்:- மனவளர்ச்சி பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு அது சீராகும். கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை மறையும்.

    *செவ்வாய்:- செவ்வாய் தோஷம், முன்கோபம், கேதுவால் ஏற்படும் பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும்.

    * புதன்:- கல்வியில் தடை இருந்தால் அது அகலும். ஞாபக மறதி சரியாகும்.

    * வியாழன்:- புத்திரதோஷம், குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை போன்றவை சரியாகும். ஆண்களின் திருமணத் தடை விலகும்.

    * வெள்ளி:- தம்பதிகளிடையே ஒற்றுமை குறைவு இருந்தால் அது சீராகும். கடன் பிரச்சினை, மனவேதனை நீங்கும்.

    * சனி:- ஆரோக்கிய குறைபாடு, தொழில் நஷ்டம், வேலையில் நிரந்தரமின்மை போன்ற பிரச்சினைகள் அகலும். ராகுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

    • 5 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
    • 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்..

    திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு நந்தியா வட்டை மலர் மாலை அணிவித்து புனுகு பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்.

    சகோதர ஒற்றுமை ஏற்பட:

    செவ்வாய் கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம்பருப்பு பொடி கலந்த அன்னம், செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    எதிர்ப்புகள் அகலவும், வெற்றிகள் குவியவும்:

    செவ்வாய் கிழமை நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சை பழம் மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு வேகவைத்த செங்கிழங்கு கலந்த பாயாசம், மாதுளம் பழம், ஜிலேபி அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.

    கல்வியில் சிறந்து விளங்க:

    புதன்கிழமை நாளில் அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசி பருப்பு பொடி கலந்த அன்னம், பாசி பருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    வியாபாரத்தில் வெற்றி வாகை சூட, புதிய தொழில் தொடங்க:

    புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் அதியமான்கோட்டை கால பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து காசி சூட்டி புனுகு பூசி பாசிப்பயறு சுண்டல், பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம்.

    தனப்ராப்தி ஏற்பட:

    தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு செய்துவர தனப்ராப்தி ஏற்படும்.

    குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட:

    வியாழக்கிழமை நாளில் காலை 7:30 மணிக்குள் அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து முழு முந்திரி வித்து எனப்படும் முந்திரி கர்ப்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கி யது போல காணப்படும். அந்த முந்திரி பருப்புடன் கூடிய முந்திரிக்கொட்டையில் மாலை அணிவித்தால் தான் முழு பலன் கிட்டும். புனுகு பூசி முந்திரி பருப்பு, கொண்டைக்கடலை சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து 5 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    கலைத்துறையில் சாதனை படைக்க:

    வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் அதியமான் கோட்டை தட்சிண காசி காலபைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைபொங்கல், சேமியாபாயாசம், மாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்..

    நாகதோஷம் நீங்க:

    வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் தட்சிண காசி காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்க பூமாலை அணிவித்து பால் சாதம், பால்பாயாசம் நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாக தோஷம் நீங்கும். அருகே உள்ள பாம்பு புற்றில் ஒரு முட்டையை மேல் பகுதியில் லேசாக உடைத்து வைக்கவேண்டும்.

    விஷபயம் நீங்க:

    காசி கால பைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலை சூடி புனுகு பூசி சுண்டல் படையலிட்டு பால் பாயாசம், நெல்லிக்கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம்

    சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சிண காசி காலபைரவருக்கு நாகலிங்கப் பூ மாலை அணிவித்து புனுகு பூசி எள் கலந்த சாதம், பால்பாயாசம், கருநிற திராட்சை நெய்வேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்தால் விஷ பயம் நீங்கும்.

    மேலும் பூஜைகள் பற்றிய விபரங்களை அறிய: கிருபாகரன் குருக்கள்: செல்-9443272066

    • முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.
    • முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.
    • புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே சனிபகவானின் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை மூடப்படும்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் மேல் பெருமாளின் பார்வை படுவதால் இந்த கோவிலில் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நீ்ங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு செல்வது எப்படி

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • சிலர் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள்
    • கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள். குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறாலம்.

    ×