என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்

சம்பளம் உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம்

- சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான் ஆகிய இந்த 3 கிரகங்களை திருப்தி செய்ய வேண்டும்.
- நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பது நாம் எல்லோருடைய கனவாக இருக்கின்றது. ஆனால் நாம் நினைத்த மாதிரி சம்பள உயர்வு, பதவி உயர்வு, நினைத்த வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதே இன்றைய சூழ்நிலையில் ரொம்ப பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகள் தீர இந்த பரிகாரங்களை முழுமனதுடன் செய்தால் பலன் கிடைப்பது நிச்சயம்.
வாரம் தோரும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று உங்கள் கையால் பசுவிற்கு வாழைப்பழங்கள் வாங்கி கொடுக்க வேண்டும். உங்களுடைய வீதிகளில் பசுமாடு நல்ல வெயில் சமயத்தில் நடந்து வரும்போது, உங்கள் வீட்டில் வடித்த கஞ்சி தண்ணீர் இருக்கும் அல்லவா. அதை தண்ணீரோடு கலந்து, கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து பசு மாட்டிற்கு தாகத்திற்கு குடிக்க கொடுக்க வேண்டும்.
வியாழக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் குருவின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். ஆனால் இது பரிகாரத்திற்காக சொல்லப்பட்ட விஷயம். வியாழக்கிழமை அல்லாமல் உங்களால் இப்படிப்பட்ட விஷயங்களை எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் செய்வதினால் பலன் பல மடங்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
பெரும்பாலும் நம் வீட்டின் அருகில் இருக்கக் கூடிய கோவில்களில் குளங்கள் இருக்காது. ஆனால் இன்னமும் பெரிய பெரிய பழமையான கோவில்களில் குளங்கள் இருக்கிறது. அதில் தண்ணீரும் இருக்கிறது. அதில் மீன்கள் வாழ்கின்றது. இப்படி எங்காவது கோவிலுக்கு செல்லும் போது அந்த குளத்தில் இருக்கும் மீனுக்கு பொரி வாங்கிப் போடலாம். வீட்டிலிருந்து செல்லும்போது கோதுமை மாவில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கோதுமை உருண்டைகளை மீனுக்கு உணவாக போட்டால் நம் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இதன் மூலம் சூரிய பகவானின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பிரமோஷன் கிடைக்கும்.
ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். நடக்க முடியாத ஊனமுற்றவருக்கு ஒரு செருப்பு வாங்கி கொடுத்தால் கோடான கோடி புண்ணியம். (காலில் நடக்க முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு இந்த ஸ்பெஷல் ஆக டிசைன் செய்யப்பட்ட காலணிகள் விற்கும் அல்லவா அது.) நடக்க முடியாதவருக்கு ஒரு ஹேண்ட் ஸ்டிக் வாங்கி கொடுத்தீர்கள் என்றால், உங்களை சனி பகவான் எதுவுமே செய்ய மாட்டார். பெரிய கஷ்டத்தை கொடுத்தால் கூட அதில் பெரிய அளவில் பாதிப்பு நமக்கு வராமல் சனி பகவானே பார்த்துக் கொள்வார்.
சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான், இந்த 3 கிரகங்களையும் திருப்தி செய்ய வேண்டும். இந்த மூன்று கிரகங்களும் உங்களுடைய ஜாதக கட்டத்தில் சரியாக அமரவில்லை, வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்தாலே போதும். வாழ்வில் வளம் பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
