என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
    நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் இருந்தாலும் அனந்தன் எனப்படும் ஸ்ரீஆதிசேஷன், பெரிய திருவடி எனப்படும் ஸ்ரீகருடன், சேனாமுதல்வன் எனப்படும் ஸ்ரீவிஸ்வக்சேனர் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். இவர்களில் ஆதிசேஷன் பெருமாளுக்கு குடையாகவும், சிம்மாசனமாகவும், படுக்கையாகவும் இருக்கிறார். விஸ்வக் சேனர் மகா விஷ்ணுவின் படைகளின் சேனாதிபதியாக விளங்குகிறார்.

    ஆனால் ஸ்ரீகருடனோ பெருமாளுக்கு தோழன், தாசன், ஆசனம், வாகனம், கொடி, மேல்சுட்டு, விசிறி என 7 விதமான தொண்டுகளை செய்பவராக உள்ளார். இத னால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார். இந்த சிறப்பு காரணமாக கரு டனை வைணவர்கள் ‘கருடாழ்வார்’ என்று போற்றி புகழ்கின்றனர்.

    கருடனை பெரிய திருவடி, கொற்றப்புள், தெய்வப் புள், வேதஸ் வரூபன், காய்சினப்புள், பட்சிராஜன், புள்ளரையன் வைநதேயன், ஓடும் புள், சுபர்ணன், விஜயன், உவணன், வினைதச் சிறுவன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள். கருடன் இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்து தன் தாய் வினதையின் அடிமைத் தனத்தை நீக்கினார். அந்த தாயின் அருளால் தான் பெருமாளின் வாகனமாக கருடன் திகழ்கிறார். இவ ருக்கென்றே ‘கருட பஞ்சமி’ என்ற பண்டிகையும் உள்ளது. சகோதரர்களின் நலனுக்காக பெண்களால் இப்பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

    கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீஆண்டாள். பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை ரங்கநாதருக்கு திருமணம் செய்து கொடுத்த போது மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் பெரியாழ்வாரின் அம்சமான கருடாழ்வார் பெருமாள் அருகிலேயே இருக்கிறார் என்பார்கள்.

    இதனால் தான் வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார். எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் (நாளை சுவாதி நட்சத்திர நாள்) கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இ¢ல்லை. மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.

    மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். கருடனின் பார்வைக்கு, ‘சூட்சும திருஷ்டி’ என்று பெயர். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது. எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.

    திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

    புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.

    வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும். எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.

    இப்படி பல்வேறு சிறப்பு களை கொண்டுள்ள கருடன், பெருமாளுக்கு செய்யும் கருட சேவையால் மேலும் சிறப்பு பெறுகிறார். வைணவத் தலங்களில் விழா நாட்களிலும், பிரம் மோற்சவத்தின் போதும் திருமால் எத்தனையோ விதமான வாகனங்களில் எழுந்தருளினாலும் கருட வாகனத்தில் வரும் போது, பக்தர்களால் அதிகம் ஆரா தனை செய்யப்படுகிறார். திருமாலின் வாகனமாக கருடன் மாறியதற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. கருடன் பல நூறு ஆண்டுகள் தவம் இருந்து மகாவிஷ்ணுவை சுமந்து செல்லும் வாகனமாக மாறியதாக ஒரு கதை உண்டு.

    இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் கருடன், இந்திரனுடன் போரிட்டார். அப்போது திருமால் உபேந்திரனாக அவதாரம் எடுத்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். அந்த போரில் கருடனின் ஆணவம் நீங்கும் வகையில் அவரை வீழ்த்தி அடக்கினார். தன் நிலை உணர்ந்த கருடன் திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் மாறியதாக சொல்வார்கள்.

    கருடன் மகாபலம் பொருந்தியவர். அழகான முகம், குவிந்த இறகுகள், உறுதியான நகங்கள், கூர்மையான கண் பார்வை, பருத்த கழுத்து, குட்டையான கால்கள், பெரிய தலை என பல சிறப்பம்சங்களைக் கொண்டவர். எல்லா திசைகளிலும் மிக வேகமாக பறக்கும் ஆற்றல் கொண்ட கருடன், தன் சக்தி மூலம் திருமாலுக்கு உதவினார். முதலையிடம் சிக்கிய கஜேந்திரயானையைக் காப்பாற்ற திருமால் கருடன் வாகனத்தில் பறந்து வந்தார் என்ற ஒரே ஒரு உதாரணமே இதற்கு போதும்.

    திருமால் நினைக்கும் முன்பே அந்த செயலுக்கு கருடன் தயாராகி விடுவார் என்பார்கள். எனவே தான் பக்தர்களை காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் எழுந்தருள்வதை சிறப்பாக சொல்கிறார்கள். இதையே ‘கருட சேவை’ என்கிறோம். சிலருக்கு பெருமாளை தினமும் வழிபட, வழிபட ஒருவித அகங்காரம் வந்து விடக்கூடும்.

    அப்படி இல்லாமல் பெருமாளுக்கு என்றென்றும் தாசனாக இருக்கும் ஸ்ரீகருடன் போல எப்போதும் திருமாலுக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்பதை கருட சேவை நமக்கு உணர்த்துகிறது. புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடைபெறும். அன்றைய தினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும். எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.
    செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்றவுடன் யாரும் அலறித் துடிக்க வேண்டியது இல்லை. முறையான வழிபாடுகள், பிரார்த்தனைகள் மூலம் திருமண பந்தத்தை கோணலாகிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.
    செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு மண வாழ்க்கை தள்ளிப் போகும். இதனால் அவர்கள் படும் அவஸ்தைகள் அதிகம். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது.

    செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வருகின்றதோ அதை தேர்ந்தெடுத்து செய்யவும், வழக்கத்திற்கும் கொண்டு வரவும்.

    எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்க்கிழமை இந்நாட்களில் பக்கத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்.

    இதுவும் முடியவில்லை என்றால் செவ்வாய் அன்று காயத்ரி மந்திரத்தை நன்றாக படித்து மனதில் சொல்லிக் கொண்டு தியானத்தில் ஈடுபடவும். இவ்வாறு செய்து வர செவ்வாய் நிச்சயம் கருணை காட்டுவார்.
    இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் மண்ணை பூசிக் கொண்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது. ஆடி மற்றும் மார்கழி மாதங்களைத் தவிர்த்து மற்ற மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில், இங்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.

    இந்த ஆலயத்தில் இருந்து வெளியே வந்து, கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணமாகச் சென்றால், எமதர்மன் கோவில் இருக்கிறது. இங்கு எருமை வாகனத்தில் அமர்ந்து வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இவரது கையில் கதாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கியுள்ளார். இவரை வழிபாடு செய்தால் எம பயம் நீங்கி, பலம் சேரும். மன வியாதி, உடல்பிணி, தீராத பகை, சோம்பல், போட்டி- பொறாமை போன்றவை நீங்கும்.
    ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மாணிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார். பாண்டவர்களின் வெற் றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான்.

    அதனால் இரு குலத் தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டனர். அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந் தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம் பாக மாறி பரீஷத் மகா ராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.

    ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. ‘என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோசத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படிக் கரை யேற்றுவது? என்று தவித் தான். அப்போது ஸ்ரீதேவி பாக வதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய் தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.

    சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித் தான். உடனே ‘ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்தி ருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
    ஆதிசங்கரரின் பஞ்சரத்தினம், துளசி தாசரின் அனுமன் சாலீசா, புரந்தரதாசரின் ஆஞ்சநேயர் கீர்த்தனங்கள், ஆஞ்சநேய கவசம் மற்றும் அஷ்டோத்திர சதநாமாவளி போன்றவற்றை தினமும் பாராயணம்செய்து வந்தால், நாம் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்திலும் ஆஞ்சநேயர் துணை இருப்பார். உடல் வலிமை, மன வலிமை இரண்டும் ஒருங்கே கிடைக்கும்.

    அது மட்டுமல்ல ஆஞ்சநேயர் அன்பாலும், தன்பலத்தாலும் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

    எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.

    குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.
    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும். சுபமான பரிகாரங்களை வளர்பிறை நாட்களிலும் துயரம், துக்கம் நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை நாட்களிலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமையை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்துக்கு 4,8,12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.

    பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4,8,12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக்கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.

    கடலுக்குள் இருக்கும் நவக்கிரக மண்டபம் தான் தேவிபட்டினம். நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம்.
    ராவணனால் சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவளை மீட்க வந்த ராமபிரான் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார்.

    அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.

    நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும்.

    ராமமேஸ்வரம் அல்லது ராமநாதபுரத்திலிருந்து இறங்கி இவ்ஊருக்கு செல்லலாம். ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாத புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
    இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும்.
    முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் ஒவ்வொரு வரும் தங்கள் ராசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எளிய தான தர்மங்களைச் செய்து பித்ருக்களின் நல்லாசியைப் பெறுவது முக்கிய கடமையாகும்.

    மேஷம்:- தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி வரும்.

    ரிஷபம்:- முதியவர்களைப் பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு, உடை தானம் தர பெரியோர்களின் நல்லாசி கிடைக்கும்.

    மிதுனம் :- நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வார்கள்.

    கடகம்:- விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் உங்களின் பாவம் நீங்கி அதிர்ஷ்டம் வந்து சேரும்.

    சிம்மம்:- அசைவ உணவை தவிர்த்து சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை, ஆடை தானம் தந்து ஆசி பெற்றால் பித்ருக்களின் நல்லாசி கிடைக்கும்.

    கன்னி:-கஷ்டங்களில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது முன்னோர்களின் நல்லருளை பெற்றுத்தரும்.

    துலாம் :- துப்புரவு தொழிலாளர்களுக்கு முழுச் சாப்பாடு தண்ணீருடன் தானம் தந்தால் மன நிம்மதி நிலைக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும்.

    விருச்சிகம்:- சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, நாட்டுச் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுகளில் தூவ, வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதிகரிக்கும்.

    தனுசு:- குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு புத்தாடையுடன் இட்லி,எள்ளு சட்னியுடன் தண்ணீரும் தானம் தந்தால் முன்னோர்களின் நல் ஆசி கிட்டும்.

    மகரம்:- சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணை வாங்கி தந்து பராமரிப்பு இல்லாத கோவில் களுக்கு பராமரிப்பு பணிக்கு உதவினால் கர்ம வினை நீங்கும்

    கும்பம்:- சாலை ஒரங்களில் ஆதரவின்றி அல்லல் படுபவர்களுக்கு பெட்சீட், காலணி கொடுத்து உதவினால் முன்னோர்கள் ஆசி தேடி வரும்.

    மீனம்:-அந்தணர்களுக்கு வஸ்திரத்துடன் பச்சை காய்கறிகள், அரிசி, பருப்பு தானம் தர வினைப்பயன் தீரும்.

    இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை விமர்சனம் செய்யாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும். நன்மை தரக்கூடிய தான, தர்மம், பித்ரு காரியங்களை யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர்கள் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். ஏன் மனித ரூபத்தில் நமக்குப் பக்கத்திலேயே கூட இருக்கலாம்.

    அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ, உயர்ந்ததாகவோ இருக்கலாம். நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் வழிபாடு அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும். மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இந்த உலகத் துன்பம் தீர உதவும். அன்று ஒட்டு மொத்த முன்னோர்களையும் நினைவு கூர வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு வழிபாட்டை செய்வது நல்லது.

    அவசரகதியான உலகில் பொருள்பற்று மிகுதியானதாலும் பொருளாதாரமே வாழ்வாதாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் பலர் ஆன்மாவை வலிமைப்படுத்தும் பித்ருக்கள் பூஜையை மறந்து வாழ்கிறார்கள்.
    பூமியில் உள்ள பிறவிகளிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம்.
    அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். பிறப்பு முதல் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ம் பாவகம் என்னும் பாக்கியஸ்தானத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்கிய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடையே பித்ருக்கள் பூஜை.

    நம் கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறு இருக்க பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பல ருக்கும் இருக்கலாம்.  உடலை இயக்குவது உயிர். உயிரை இயக்குவது ஆன்மா. ஆன்மாவின் பலமே உயிரை இயக்கும். உயிரின் பலமே உடலை இயக்கும். ஆக ஒரு ஆன்மா இயங்க உடலும், உயிரும் தேவை. உயிர் பிரிந்தவுடன் உடல் அழிக்கப்படுகிறது. ஆனால் ஆன்மா தன் அடுத்தகட்ட பயணத்திற்குத் தயாராகிறது.

    ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாகம் என்பது ஆன்மா.ஜென்ம லக்னம் என்பது உயிர். ஜென்ம ராசி என்பது உடல். சுருக்கமாக ஐந்தாமிடம் இல்லை எனில் லக்னம், ராசிக்கு வேலை இல்லை. ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுக்க தந்தையே மூல காரணம். லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்கும் இடமாகும். ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுத்த தந்தையும் உடல் கொடுத்த தாயும் கடவுளுக்கு சமமானவர்கள்.

    ஒன்பதுக்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடம் என்பது தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்கும். ஐந்தாமிடம் என்பது ஒருவரின் தெய்வ அனுக்கிரகத்தைப் பற்றிக் கூறும் இடம் என்பதாலும், பாட்டனாரைக் குறிக்கும் இடமாக ஐந்தாமிடம் வருவதாலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.
    இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது. ஐந்தாமிடம் என்பது ஒருவரின் ஆன்மாவைக் குறிக்கும். ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் விளைவே மனிதப் பிறவி. மனிதன் தன் வாழ்நாளில் அனைத்து சுபப் பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் (பிராப்தம்), ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் (கொடுப்பினை), லக்னம் (விதி) நன்றாக இருக்க வேண்டும்.

    ஆக வினைகளால் வரும் பிரச்சினைகளில் இருந்தும், இடையூறுகளில் இருந்தும் ஒருவர் விடுபட பித்ருக்கள் வழிபாடு மிக முக்கியம். அதாவது தன் குலத்தில் தோன்றிய வாரிசுகளைக் காப்பாற்றும் சக்தி படைத்தவர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. தந்தை வழி மரபணுவைப் பெற்று இயங்கும் ஒரு மனிதன் தனது முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடைந்து முக்தி அடையவோ அல்லது மறு பிறப்பெடுக்கவோ உரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு ஆன்மசாந்திக்கு உதவும் தனது வாரிசுகளை இறந்த முன்னோர்கள் வாழ்த்தும் போது ஜனன கால ஜாதகத்தில் உள்ள ஐந்து மற்றும் ஒன்பதாமிடக் குற்றம் நீங்கி ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறும் என்பதால் பித்ருக்கள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்யும் மனிதர்கள் தாம் செய்ய வேண்டிய பித்ரு கடமையை தவறவிடுகிறார்கள் அல்லது அதில் ஈடுபாடு காட்டுவதில்லை.

    முறையாக பித்ருக்கள் வழிபாட்டு பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் அகன்று விடும். அவசரகதியான உலகில் பொருள்பற்று மிகுதியானதாலும் பொருளாதாரமே வாழ்வாதாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் பலர் ஆன்மாவை வலிமைப்படுத்தும் பித்ருக்கள் பூஜையை மறந்து வாழ்கிறார்கள்.

    ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 9 ஆகிய இடங்களில் ராகு/கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகமாகும்.
    ஜனன ஜாதகத்தில் சூரியன், சந்திரன் கிரகண தோஷத்தை தரும் ராகுகேதுவுடன் இணைந்து நிற்பது, சூரியனும், சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது, ராகுகேதுக்கள் சூரியன், சந்திரன் சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

    லக்னத்திற்கு ஒன்பதாமிடத்து அதிபதியும் ஐந்தாமிடத்து அதிபதியும் சேர்ந்து 1,5,9ல் ஒன்றாக நின்றாலும் பித்ரு தோஷத் தாக்கம் இருக்கும். ஒருவருக்கு பித்ருக்கள் சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதன்படி திதி மற்றும் முன்னோர் வழிபாட்டை மனதால் ஒன்றாமல் கடமைக்காகச் செய்வது. அல்லது முன்னோர் வழிபாடே செய்யாமல் இருப்பது.

    தந்தை, பாட்டன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை என இறந்தவர்களை பழித்துப் பேசுவது...
    வாழும் காலத்தில் வயதான பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் அவர்களை உதாசீனம் செய்வது...
    ஒருவர் தன் உயிரைத் தானே முடித்துக் கொள்ளும் வகையில் அவரது ஆன்மாவைத் துன்புறுத்துவது...
    இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாத குற்றம்...
    இறந்தவரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்யத்தவறுவது...
    இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரின் தீய குணங்களை விமர்சிப்பது ...
    இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் முன்பு பங்காளிகள் சண்டையிடுவது...

    இறந்த ரத்த பந்த உறவுகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருப்பது அல்லது இறுதிச் சடங்கிற்கு உதவாமல் இருப்பது அல்லது உரிய காரியங்களை செய்யத் தவறுவது... (மொட்டை யடித்தல் போன்றவை) பித்ருக்களின் சாபத்தைப் பெற்றுத்தரும்.

    இந்த ஜென்மத்தில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் தான் மறுபிறவி அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கர்ம பலன்களை குறைத்து சுப பலன்களை மிகைப்படுத்தும் சக்தி திதிகளுக்கு உண்டு. அதனால் தான் நமது ஜோதிட முன்னோடிகள் திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்று கூறியுள்ளார்கள்.பிறவிப் பிணியில் இருந்து விடுபட்டு நற்கதியடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்றே அமாவாசை திதி நாட்களில் கடைபிடிக்கப்படும் பித்ருக்கள் பூஜையாகும். பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது.

    சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். அமாவாசை திதியன்று சூரியனும்,சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் என்பதால் அமாவாசை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கால சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    எந்திரத்தனமான வாழ்க்கையில் பிரபஞ்ச சக்தியை உணராமல் சக மனிதர்களை மதிக்காமல் சுய நலத்துடன் இறை நம்பிக்கையைத் துறந்து, பொருள் பற்றுடன் வாழ ஆரம்பித்த காரணத்தால் இயற்கை கொரோனா ரூபத்தில் மக்களைத் துன்புறுத்தி வருகிறது. மக்கள் அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய கடுமையான போராட்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகி விட்டது. உலக இயக்கமே ஸ்தம்பித்துள்ளது.

    அதனால் தான் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நெருங்கிய ரத்த பந்த உறவுகளுக்குரிய கர்ம காரியங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. பித்ருக்களின் சாந்தி வழிபாட்டைச் செய்ய முடியவில்லை என்பது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை அனுபவிக்கும் சூழல் உருவாகி விட்டது. உலகின் பல்வேறு இடங்களில் இயற்கையை சாந்தப் படுத்தும் பல்வேறு யாகங்கள் செய்தும் நோய்த் தாக்கம் குறைந்தபாடில்லை. மக்களுக்கு ஆயுள் பயம் அதிகரித்து விட்டது. இதிலிருந்தே உலகில் பாவ காரியங்கள் மிகையாக உள்ளதை நம்மால் அறிய முடியும்.

    இதற்குத் தீர்வு தான் என்ன என்று யோசித்தால், பாவச் சுமைகளைக் குறைத்து புண்ணிய பலன்களை அதிகரிக்கும் சக்தி மகாளய அமாவாசை வழிபாட்டிற்கு இருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு மாபெரும் புண்ணியம் பெற்றுத் தரும் மகாளய பட்ச அமாவாசை ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி 19ந் தேதி 5.10.2021 (செவ்வாய் கிழமை) இரவு 7.05 முதல் புரட்டாசி 20ந் தேதி 6.10.2021 (புதன் கிழமை) மாலை 4.35 வரை இருக்கிறது.

    கொரோனா தாக்கத்தை குறைக்க அரசின் சட்ட திட்டங்களை மதித்து வீட்டிலேயே முன்னோர் களுக்குரிய பித்ருக்கள் பூஜை செய்வதுடன், பிரபஞ்ச சக்திகளை வணங்கி, உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டி, துறவிகள், தவசிகள், ஞானிகளை வழிபட்டு, சக உயிர்களுக்கு இயன்ற தான, தர்மம் செய்து பாக்கிய பலன்களைப் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
    செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும்.
    பரிகார காலம் :

    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.  

    பரிகாரம் செய்யகூடாத நேரம்:

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
    மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார்.
    ஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண்பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண்களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாகப் பாய்ந்து மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    அகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார். அவர் தான் கண் திருஷ்டி கணபதி.

    இவர் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி ஆவார். இந்தக் கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

    வியாபார ஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கணபதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம்.

    இந்தச் சிறப்பான வடிவம் கொண்ட கண் திருஷ்டி கணபதியை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
    மாங்கல்ய தோஷம் என்ற குறைபாடு பல பெண்களுக்கு திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்த தவறுகிறது. அல்லது திருமணத்திற்குப் பிறகு மிகுதியான சங்கடங்களைத் தருகிறது.
    ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.

    2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.

    அதன் படி 2,8-ம் இடத்தில் ஆட்சி, உச்சம், நீச கிரகம் நின்றாலும் செவ்வாய், சனி சம்பந்தமாக இருந்தாலும் சனி, செவ்வாயுடன் ராகு,கேது இணைந்து இருந்தாலும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சேர்ந்து இருப்பது சூரியன்,ராகு,கேது, சனி, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நிற்பதும், நீச, அஸ்தங்கம்,வக்ரம் பெற்ற கிரகம் அமர்வதும் மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8- ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி உண்டாகும். 8--ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
    ×