என் மலர்
ஆன்மிகம்
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-3 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 12.41 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : சதயம் இரவு 11.06 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் ரதோற்சவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.
ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் ஆண்டு நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருப்பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-இணக்கம்
கடகம்-வரவு
சிம்மம்-செலவு
கன்னி-வெற்றி
துலாம்- நன்மை
விருச்சிகம்-லாபம்
தனுசு- தெளிவு
மகரம்-கவனம்
கும்பம்-போட்டி
மீனம்-சிறப்பு
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-2 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 2.04 மணி வரை பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : அவிட்டம் இரவு 11.53 மணி வரை பிறகு சதயம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், மயிலாப்பூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சோழவந்தான் ஸ்ரீஜனகை மாரியம்மன் சிம்ம வாகன பவனி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி,
திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்சுவரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன அலங்கார சேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-லாபம்
மிதுனம்-பெருமை
கடகம்-மேன்மை
சிம்மம்-உயர்வு
கன்னி-தெளிவு
துலாம்- கவனம்
விருச்சிகம்-தாமதம்
தனுசு- களிப்பு
மகரம்-உழைப்பு
கும்பம்-மாற்றம்
மீனம்-பாராட்டு
- வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.
- சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் 'கேசவே' என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்தபடியே இருக்கிறது.
வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் பரிதவித்தன. அப்போது அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.
சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்துச்செல்கின்றனர். விநாயகரின் முன்பாக உற்பத்தியாகும் புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலக்கிறது.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- பாலதண்டயுதபாணி சுவாமி கோவில்க ளில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி பிற்பகல் 3.02 மணி வரை
பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : திருவோணம் நள்ளிரவு 12.16 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவோண விரதம், அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
இன்று திருவோண விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், சோழ வந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீ பாலதண்டயுதபாணி சுவாமி கோவில்களில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பணிவு
ரிஷபம்-பண்பு
மிதுனம்-கடமை
கடகம்-அமைதி
சிம்மம்-நட்பு
கன்னி-நலம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-பாசம்
தனுசு- பணிவு
மகரம்-பக்தி
கும்பம்-ஆதாயம்
மீனம்-சிறப்பு
- பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி.
- திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ் வரர் கோவில் வழிபாடு.
இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திரு மணம் நடைபெறும் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் கருவறையில், 'அகத்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக் கிறார். இத்தல இறைவியின் திருநாமம், 'ஆனந்தவல்லி' என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது.
பல கோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான், தமிழ் மொழியை முருகப்பெருமானுக்கு கற்றுத்தந்தார். முருகப்பெருமான், தமிழின் சுவையை சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியருக்கு போதித்தார். அத்தகைய சிறப்புமிக்க அகத்தியருக்குரிய 'ஓம் அகத்தீசாய நமக' என்ற குரு மந்திரத்தை நாம் ஜெபித்தால், அனைத்து விதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.
இந்த பூமியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களிலும் அகத்தியர் வழிபாடும், பூஜையும் செய்திருக்கிறார். தவிர, அகத்தியரால் உருவான ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் மூலவராக அமைந்த ஆலயங்களுக்கு 'அகத்தீஸ்வரர் கோவில்' என்றே பெயர் அமைந்திருக்கும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவராகப் போற்றப்படுவது போல, பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி லோபமுத்ரா போற்றப்படுகிறார். அகத்தியருக்கும், லோபமுத்ராவிற்கும் திருமணம் நடந்த இடமாகவே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது.

அகத்தியர் - லோபமுத்ரா
ஒரு தலைசிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டும் என்று லோபமுத்ரா சபதம் எடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்காக, அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை, லோபமுத்ராவுக்கு வழங்கினார். அதன் முடிவாக, தான் எதிர்பார்த்த தலைசிறந்த சிவனடியார் அகத்தியர் என்பதை லோபமுத்ரா உணர்ந்துகொண்டார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இங்கு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் தல விருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
- திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-31 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பிற்பகல் 3.27 மணி வரை
பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : உத்திராடம் நள்ளிரவு 12.11 மணி வரை
பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் ஹோமம், வழிபாடு வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். அரியங்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விருஷப வாகன புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் விடாயாற்று குமரகுருபர சுவாமி குரு பூஜை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருச்சி உச்சிப் பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமாள் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், வழிபாடு. மதுரை ஸ்ரீ கூடலகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்திரவார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-செலவு
மிதுனம்-அமைதி
கடகம்-நன்மை
சிம்மம்-நட்பு
கன்னி-நலம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-பாசம்
தனுசு- ஆதாயம்
மகரம்-சோர்வு
கும்பம்-பக்தி
மீனம்-ஓய்வு
- சீதை, தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.
- நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும் கூட காரணமாக இருக்கலாம். ஆகையால் நமக்கு வந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, நமக்கு துன்பம் விளைவித்தவர்களின் மீது கோபம் கொண்டு அவர்களை பழி வாங்க நினைக்கக்கூடாது.
ராமாயண இதிகாசத்தில், அனுமனிடம் இதுபற்றி சீதைபிராட்டி சொன்ன விஷயத்தை இங்கே பார்க்கலாம்..
ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் பலம் பொருந்திய பல அரக்கிகளின் நடுவே கடும் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அரக்கிகள், ராவணனின் விருப்பத்திற்கு அடிபணியும்படி சீதையை தினமும் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அதற்காக சீதை, அந்த அரக்கிகள் மீது கோபம் கொள்ளவில்லை. தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.
சீதையை திருப்பி அனுப்பும்படி, ராமபிரான் பல முறை ராவணனுக்கு தூது அனுப்பியும் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். அந்தச் செய்தியை, அசோகவனத்தில் இருந்த சீதையிடம் வந்து கூறினார், அனுமன்.
அதைக்கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, "நான் முன்பு ஒரு முறை உயிர் துறக்க நினைத்தபோது, நீதான் வந்து என்னைக் காப்பாற்றி, ராமர் விரைவில் என்னை மீட்பார் என்று கூறினாய். அப்போது உனக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தேன். இப்போது ராமரின் வெற்றிச் செய்தியை கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கூறினார்.
அதற்கு அனுமன், "தாயே எனக்கு வரம் எதுவும் தேவையில்லை. கடந்த பல மாதங்களாக உங்களை துன்புறுத்திய இந்த அரக்கிகளை தீயிட்டு கொளுத்துவதற்கு மட்டும் எனக்கு அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சீதை "இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தினாலும், அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இந்த துன்பங்களுக்கு நான் செய்த முன்வினை பாவமே காரணம். பொன்மான் என்று நினைத்து மாயமானுக்கு ஆசைபட்டேன். அதை கொண்டு வர என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததாலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை சென்று பார்த்து வரும்படி கூறினேன். அவர், என் கணவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று மறுத்து கூறியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்தேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களை கண்ணிமை போல காத்து வந்த லட்சுமணனை மனம் நோகச் செய்ததுதான், நான் அனுபவித்த துன்பத்திற்குக் காரணம். எனவே நீ அரக்கிகளை எதுவும் செய்துவிடாதே" என்றார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
- அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
- கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-30 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பிற்பகல் 3.26 வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : பூராடம் இரவு 11.46 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை
அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல் லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் காலை அபிஷேகம் அலங்காரம். கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவ நல்லூர் ஸ்ரீ மரக தாம்பிகை தலங்களில் அபிஷேகம் அலங்காரம். லால்குடி ஸ்ரீ பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-நலம்
மிதுனம்-கவனம்
கடகம்-சலனம்
சிம்மம்-கடமை
கன்னி-விருத்தி
துலாம்- தாமதம்
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- உழைப்பு
மகரம்-உறுதி
கும்பம்-யோகம்
மீனம்-திடம்
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-29 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 2.56 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : மூலம் இரவு 10.33 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பழனி ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகன புறப்பாடு, திருவல்லிக்கேணி ராகவேந்திரருக்கு திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் சப்தாவர்ணம், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர், ஸ்ரீ முருக நாயனார் குரு பூஜை. பழனி ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகன புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் யானை வாகனத்தில் வீதியுலா. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக்காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்ர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம், குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-வெற்றி
சிம்மம்-சாந்தம்
கன்னி-நிம்மதி
துலாம்- ஈகை
விருச்சிகம்-கவனம்
தனுசு- தெளிவு
மகரம்-இன்பம்
கும்பம்-ஆசை
மீனம்-ஆர்வம்
- சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் பூக்குழி விழா.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-28 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி நண்பகல் 1.53 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : கேட்டை இரவு 8.59 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம், பெருமாள் புறப்பாடு
சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் பூக்குழி விழா. பழனி ஆண்டவர் தங்கக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் ரதோற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் எடுப்புச் சப்பரத்தில் சப்தாவரணம், உபயநாச்சியார்களுடன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-சுகம்
மிதுனம்-புகழ்
கடகம்-ஓய்வு
சிம்மம்-உதவி
கன்னி-வாழ்வு
துலாம்- உறுதி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- உறுதி
மகரம்-நிறைவு
கும்பம்-யோகம்
மீனம்-மாற்றம்
- பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இந்த வார விசேஷங்கள்
10-ந் தேதி (செவ்வாய்)
* பவுர்ணமி.
* காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப் பெருமான் திருக்கல்யாணம்.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை, இரவு திருக்கல்யாணம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (புதன்)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா.
* பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக் காட்சி.
* பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி)
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
* சங்கரன் கோவில் கோமதிஅம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (சனி)
* சங்கடகர சதுர்த்தி.
* மதுரை கூடலழகர் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப வாகனத்தில் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (ஞாயிறு)
* சிரவண விரதம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
+2
- வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
- கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விசாகத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாராதனையும் தொடர்ந்து கோவில் சண்முக விலாசம் மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவமும் நடக்கிறது.
வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் இன்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்களின் அரோகரா கோஷம் விண் அதிர செய்தது.
சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக நேற்று காலை 8 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி.ட.பிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 6 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கை பட்டை வழங்கப்படுகிறது.
கைப்பட்டை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் முதியோர்களுக்கான தனி வரிசையில் எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.






