என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
    • சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஹராரே:

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.

    இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 53 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் டாக்கின்ஸ் 66 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.

    சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள், இந்நாள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தியா 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றது.
    • 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.

    ஹராரே:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இப்போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், நடப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

    ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணி 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.

    இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது. இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. ஆனாலும் போட்டி உள்ளூரில் நடப்பதால் இந்தியா மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277 ரன்கள் சேர்த்தது.

    புலவாயோ:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் நிதேஷ் சாமுவேல் 47 ரன்கள் எடுத்தார். ஆர்யன் ஷர்மா 34 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஆலிவர் பீக் நிதானமாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்னால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.

    புலவாயோ:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.

    லீக் மற்றும் சூப்பர் 6 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.

    இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார்.

    4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளியுடன் அரையிறுதியில் நுழைந்தது.
    • சூப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் முடிகிறது.

    புலவாயோ:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.

    கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

    குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.

    சூப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் முடிகிறது. புலவாயோவில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில் 2-வதாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.

    இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும்.

    பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகள் பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ்தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது.

    ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய அணி இந்தத் தொடரில் தோல்வியை தழுவவில்லை. லீக் சுற்றில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், வங்க தேசத்தை 18 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வேயை 204 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளது.

    பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் 36 ரன்னில் தோற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஹராரே:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான (U19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், U 19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சாம்சன் அதிகபட்சமாக 37 ரன் சேர்த்தார்.

    இந்தியா சார்பில் அம்ப்ரிஷ் 4 விக்கெட்டும், ஹெனில் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 13.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆயுஷ் மாத்ரே 53 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஆட்ட நாயகனாக அம்ப்ரிஷ் அறிவிக்கப்பட்டார்.

    இந்திய அணி தான் ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    ஜார்ஜியா:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 49 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேச அணி சார்பில் அல் பஹத் 5 விக்கெட்டும், இக்பால் எமான், ஹக்கிம் தமிம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை மீண்டும் குறுக்கிட்டதால் வங்கதேச அணி 29 ஓவரில் 165 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.

    ஹக்கிம் தமிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ரிபாத் பெக் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்கதேச அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டும், கிலான் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை விஹான் மல்கோத்ரா வென்றார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி விவரம் வருமாறு:

    சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்டன் நகரவா, பிரெண்டன் டெய்லர்.

    • கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி, அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நகரவா நியமிக்கப்பட்டார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆப்கானிஸ்தான் 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சிக்கந்தர் ரசா 37 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், முஜிப் உர் ரகுமான், அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் டி 20 தொடரை கைப்பற்றியது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது.

    ஹராரே:

    இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா-குசால் மெண்டிஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    பதும் நிசங்கா அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 38 ரன்னில் வெளியேறினார். இதற்கு பின் விரைவில் விக்கெட்கள் விழுந்ததால் இலங்கை அணி தடுமாறியது.

    கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிரடி காட்டினார். அவர் 16 பந்தில் 41 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    பிரியன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    ×