என் மலர்
கிரிக்கெட் (Cricket)

U19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
- டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹராரே:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான (U19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், U 19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சாம்சன் அதிகபட்சமாக 37 ரன் சேர்த்தார்.
இந்தியா சார்பில் அம்ப்ரிஷ் 4 விக்கெட்டும், ஹெனில் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 13.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆயுஷ் மாத்ரே 53 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகனாக அம்ப்ரிஷ் அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணி தான் ஆடிய 3 லீக் ஆட்டங்களிலும் வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது.






