என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி
    • ஜெய்ஸ்வால்- சுப்மான் கில் ஜோடி 165 ரன்கள் குவித்தது

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 179 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ஷ்வால் 51 பந்தில் 84 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), சுப்மன்கில் 47 பந்தில் 77 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    சுப்மான் கில்லும், ஜெய்ஸ்வாலும் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அவர்கள் வெற்றிகரமாக தங்களது பணியை முடித்தனர். அவர்களது திறமையின் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை கணிக்க இயலாது. கடைசிப் போட்டியிலும் சிறப்பாக கடுமையாக முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்திய அணி 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. டெஸ்ட், ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • இதுவரை 4 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என சமனிலையில் உள்ளன.
    • இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    புளோரிடா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளது.

    முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த இரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 178 ரகள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    புளோரிடா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிம்ரன் ஹெட்மயர் 39 பந்தில் 61 ரன்களை குவித்தார். ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 45 ரன்களை குவித்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியாக ஆடினர். இதனால் ரன்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக தெறிக்க விட்டனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 47 பந்தில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 51 பந்தில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

    • தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
    • தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

    தற்போது தீ அணைக்கபட்டதால் பொதுமக்கள் ஊருக்கு திரும்பினார்கள். அவர்கள் வீடுகள் தீயில் எரிந்து எலும்புகூடாக காட்சி அளிப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்கள். இந்த தீ விபத்து காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஜெப்ரி பெர்குசன் துப்பாக்கியால் மனைவியை சரமாரியாக சுட்டார்.
    • போலீசார் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் அனஷிம்ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஜெப்ரி பெர்குசன் ( வயது 72).நீதிபதியாக உள்ளார்.இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெப்ரி பெர்குசன் துப்பாக்கியால் மனைவியை சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்த ஷெர்லி இறந்தார்.இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் ஏன் மனைவியை சுட்டக்கொன்றார் என தெரியவில்லை.

    போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு 47 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிபதியிடம் இத்தனை துப்பாக்கிகள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

    இந்த வழக்கில் கைதான நீதிபதி ஜெப்ரி பெர்கு சனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார்.
    • அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.

    நியூயார்க்:

    வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

    கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.

    கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது.

    இதற்கிடையே, பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா.சபை இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

    இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்தனர். மேலும் அவருடன் கடத்தப்பட்ட 4 பேரையும் அல் கொய்தாவினர் விடுவித்துள்ளனர் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குட்மேன் குறை கூறி வந்தார்
    • ஸெரபியின் தந்தையை அலட்சியப்படுத்திய குட்மேன் ஸெரபியை நோக்கி முன்னேறினார்

    அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க் பகுதியில் தன் தந்தையுடன் வசித்து வந்தவர் சிறுமி ஸெரபி மெதினா (9).

    இவள் வசிக்கும் வீட்டின் தெருவின் எதிர் புறத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் மைக்கேல் குட்மேன் (43). அவர் சில நாட்களாக அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குறை கூறி வந்தார்.

    குழந்தைகளால் அதிக சத்தம் வருவதாக அதிருப்தி அடைந்த குட்மேன், ஸெரபியின் மீதும் குற்றம் சாட்டி, ஸெரபியின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 09:30 மணியளவில் ஸெரபி, தனது வீட்டருகே குழந்தைகளுக்கான ஸ்கூட்டரை ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தார். அவருடன் அவரின் தந்தையும் இருந்தார்.

    அப்போது ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. ஸெரபியின் தந்தையின் உடனே ஸெரபியை வீட்டிற்கு உள்ளே போக சொல்லி அவசரப்படுத்தினார். உடனே ஸெரபியும் தனது குழந்தைகளுக்கான ஸ்கூட்டரில் தனது அபார்ட்மென்ட்டின் உள்ளே செல்ல முற்பட்டாள்.

    அப்போது குட்மேன் கையில் ஒரு துப்பாக்கியுடன் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஸெரபியை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

    இதனை கண்ட ஸெரபியின் தந்தை அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்க முற்பட்டார். ஆனால் அவரை அலட்சியப்படுத்திய குட்மேன் ஸெரபியை நோக்கியே வேகமாக நடந்தார்.

    இதனையடுத்து விபரீதத்தை உணர்ந்த ஸெரபியின் தந்தை தன் மகளை காக்க அவளை நோக்கி ஓடினார்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் செல்லும் முன்பாக குட்மேன் துப்பாக்கியை உயர்த்தி ஸெரபியின் தலையை நோக்கி சுட்டார்.

    இதனையடுத்து ஆத்திரமடைந்த ஸெரபியின் தந்தை குட்மேனை பிடிக்க அவரோடு போராடினார். இதில் அந்த துப்பாக்கி மீண்டும் வெடித்தது. இதில் குட்மேன் கண்ணில் குண்டு பாய்ந்தது.

    குட்மேன் துப்பாக்கியால் சுட்டதில் ஸெரபி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினரும், அவசர கால மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ பகுதியிலிருந்து 9 மிமீ துப்பாக்கி குண்டுக்கான மேற்பகுதியும் ஒரு துப்பாக்கியையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டெடுத்தனர். குட்மேனின் இல்லத்தின் சுவற்றிலும் ஒரு குண்டு பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காயமடைந்த குட்மேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். அவர் மீது பிணையில் வர முடியாத பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது வரை மைக்கேல் குட்மேன் சுட்டதற்கான காரணம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    • மோடியின் கால்களை தொட்டு வணங்கியவர் மில்பென்
    • நாட்டின் மதிப்பை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமைக்கான பண்பில்லை

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மேரி ஜே. மில்பென் (Mary J. Millben).

    இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இவர் ஒரு நடிகையாகவும், ஊடக பிரபலமாகவும் திகழ்கிறார். கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்று பயணம் செய்தபோது, மோடி பங்கேற்ற பயண நிறைவு நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியவர் மில்பென்.

    அந்நிகழ்ச்சியில் அவர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். இது குறித்த வீடியோ அப்போது வைரலானது.

    கடந்த மே மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே துவங்கிய ஒரு மோதல் இனக்கலவரமாக மாறி வன்முறை வெடித்தது.

    கடந்த ஜூலை மாதம், ஒரு இனத்தை சேர்ந்த இரு பெண்களை மே மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மற்றொரு இனத்தை சேர்ந்தவர்கள் மானபங்கப்படுத்திய அரை நிமிடத்திற்கும் குறைவான ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலானது.

    இந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மோடிக்கு ஆதரவாக மில்பென் குரல் கொடுத்திருக்கிறார்.

    மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பாலியல் வன்முறைகளை மோடி வெளிப்படையாக பேசியதை ஜூலை மாதமே பாராட்டிய மில்பென் மணிப்பூர் வன்முறை, மோடியின் தலைமை மற்றும் இந்திய எதிர்கட்சிகள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ்ஸில் (டுவிட்டர்) பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

    இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் கடவுளின் குழந்தைகள். மணிப்பூரில் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக என் மனம் மிகவும் வருந்துகிறது. உண்மை என்னவென்றால் மோடியின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளது. மணிப்பூரின் பெண்களுக்கான நீதியை மோடி பெற்று தருவார். பிரதமர் மோடி மணிப்பூர் பெண்களின் விடுதலைக்காக போராடுவார்.

    கலாசார மரபுகளை அவமரியாதை செய்து, தன் நாட்டின் மதிப்பினை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமை பண்பாகாது. பொய் கதைகளை நேர்மையற்ற ஊடகங்கள் உரக்க சொன்னாலும் அவற்றில் வலு இருக்காது. உண்மைதான் எப்போதும் மக்களை சுதந்திரமாக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்காவில் மக்கள் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் முழக்கமான "சுதந்திரம் ஒலிக்கட்டும்" எனும் வார்த்தைகளை குறிப்பிட்டு "என் இனிய இந்தியாவே, உண்மை ஒலிக்கட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.
    • காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மவுய் தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. படிப்படியாக இந்த தீ நகர் புற பகுதிகளுக்கு பரவியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தீ பற்றி எரிந்தது. எங்கு பார்த்தாலும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இதையடுத்து அந்த நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து அமெரிக்க விமான படை மற்றும் கடற்படை வீரர்களும் தீயை அணைக்க போராடினார்கள். காட்டுத்தீ என்பதால் தீ கட்டுக்குள் அடங்க மறுத்தது. இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    தீயில் இருந்து தப்பிக்க பலர் பசிபிக் பெருங்கடலில் தீக்காயங்களுடன் குதித்தனர். இதில் சிலர் பலியானார்கள். இதனால் இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மவுய் தீவில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. செல்போன் சேவையும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.270-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமானது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். அவர்கள் நகரை விட்டு வெளியேறி விமான நிலையத்திற்கு சென்றனர். ஆனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் விமான நிலையத்தில் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர். அங்கு அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
    • ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இந்நிலையில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • பாம்பை பிடுங்குவதற்காக பெக்கியின் கையை கழுகு கடுமையாக தாக்கியது
    • இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்

    வெட்ட வெளியில் நடந்து செல்லும் போது வானிலிருந்து காகிதங்கள், கற்கள் மற்றும் இலைகள் போன்றவை ஒருவர் மேல் விழுவது சகஜம். ஒரு சிலரை மின்னல் தாக்கியதை கேள்விபட்டிருக்கிறோம்.

    ஆனால் அபூர்வமான தாக்குதலுக்கு உள்ளானார் அமெரிக்காவில் ஒரு பெண்.

    அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி. தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு சொந்தமான பட்டறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது பெக்கி திறந்த வெளியில் நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெக்கியின் மீது வானத்திலிருந்து திடீரென ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்த போதுதான் அது ஒரு பாம்பு என அவர் உணர்ந்தார்.

    உடனே பயத்தில், "கடவுளே காப்பாற்று" என அலறியவாறே அவர் அதனை உதறி தள்ள முயற்சித்தார். ஆனால் பாம்பு பெக்கியின் வலது கையை சுற்றி கொண்டு அழுத்தியது. பெக்கி கத்திக் கொண்டே கைகளை காற்றில் உயர தூக்கி உதறிக் கொண்டேயிருந்தார்.

    ஆனால் பாம்பு அவரை விட்டு விலகாமல் அவர் முகத்தை தாக்கியது. அவர் அணிந்திருந்த கண்ணாடியையும் தாக்கியது.

    சிறிது நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு பழுப்பு-வெள்ளை நிற கழுகு, பெக்கியின் கையை தாக்கியது.

    இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானார் பெக்கி. அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்.

    தான் கவ்விக் கொண்டு போன பாம்பை தவற விட்டதால் அந்த பாம்பு பெக்கி மேல் விழுந்திருக்கிறது.

    பெக்கியின் கையிலிருந்த தனது உணவான அந்த பாம்பை பிடுங்குவதற்காக கழுகு அவர் கையை, தனது கால் நகங்களால் பிராண்டி, குத்தி காயங்களை ஏற்படுத்தியது.

    ஒரு வழியாக அந்த கழுகு கடைசியில் அவர் கையிலிருந்து அதன் இரையை மீட்டு கொண்டு பறந்தது.

    உடனடியாக அவர் கணவர், பெக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கழுகின் கால் நகங்களாலும் அலகாலும் ஏற்பட்ட காயங்களுக்கு பெக்கி அங்கு சிகிச்சை பெற்றார். பாம்பு தாக்கியதால் அவர் அணிந்திருந்த கண்ணாடி மிகவும் சேதமடைந்திருந்தது.

    இச்சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    "இது மிகவும் மோசமான தாக்குதல். நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். இச்சம்பவம் நடந்ததிலிருந்து எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. பாம்பை கழுகு கவ்வி கொண்டு செல்வதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் இச்சம்பவம் எனக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும்."

    இவ்வாறு பெக்கி தெரிவித்தார்.

    பாம்பு, கழுகு என இரு வகை உயிரினங்களால் ஒரே நேரத்தில் பெக்கி தாக்கப்பட்டதும் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறித்து பலரும் வியந்து வருகின்றனர்.

    • தேசிய பாதுகாப்பை கருதியே இந்த உத்தரவுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
    • சீனாவுடனான வர்த்தக உறவை அமெரிக்கா துண்டித்து கொள்ள விரும்பவில்லை

    உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒரு புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதன் ஒரு தொடர்ச்சியாக தங்கள் நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

    இதன்படி, சில முக்கியமான தொழில்நுட்பங்களில் அமெரிக்காவிலிருந்து சீனாவில் செய்யப்படும் முதலீடுகளை அமெரிக்கா தடைசெய்துள்ளது. மேலும் பிற தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்யவும், இனி அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும்.

    அமெரிக்க பாராளுமன்றத்திற்கு பைடன் எழுதியுள்ள கடிதத்தில், "ராணுவம், உளவுத்துறை, கண்காணிப்பு, மற்றும் இணையம் சார்ந்த துறைகளில் உள்ள முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புக்களில் சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்கிறேன்" என கூறியுள்ளார்.

    இந்த புதிய நிர்வாக உத்தரவின்படி செமிகண்டக்டர்கள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறை, குவாண்டம் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் சில செயற்கை நுண்ணறிவு அமைப்பு துறை ஆகிய மூன்று துறைகளிலும் சீனாவில் உள்ள நிறுவனங்களில் சில அமெரிக்க முதலீடுகளை தடை செய்யவும் அல்லது கட்டுப்படுத்தவும் அமெரிக்க கருவூல செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

    பொருளாதார நலன்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பை கருதியே இந்த நிர்வாக உத்தரவுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதன்மூலம் இன்றியமையாத இரு நாடுகளின் பரந்த அளவிலான பொருளாதார வர்த்தகம் பாதுகாக்கப்படும் என்றும் அதே வேளையில், சீனா தன் ராணுவத்தை மேம்படுத்துவதற்காக அதன் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடுகளை பயன்படுத்துவதை இந்த உத்தரவு தடை செய்ய உதவும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பைடன் அரசாங்கம் சீனாவுடனான வர்த்தக உறவில் இருந்து துண்டித்து கொள்ள விரும்பவில்லையென்றாலும் சீனாவிற்கெதிராக சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப் அளவை குறைத்தது, சீனாவில் செய்யப்படும் அமெரிக்க முதலீடுகளை குறைத்தது மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகரித்த வரி விகிதங்களை அப்படியே வைத்திருப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்த நிர்வாக உத்தரவிற்கு எதிர்வினையாக சீனா என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

    ×