search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹவாய் காட்டுத்தீ பெரிய பேரழிவு - அதிபர் ஜோ பைடன்  அறிவிப்பு
    X

    ஹவாய் காட்டுத்தீ பெரிய பேரழிவு - அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

    • ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
    • ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இந்நிலையில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×