என் மலர்
பிரிட்டன்
- முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார்.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அப்போது இங்கிலாந்து 67 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதமடித்தவர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
- கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
- 2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
டேவிட் மலான் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்காக டேவிட் மலான் கடைசியாக 2023-ம் ஆண்டு விளையாடினார்.
36 வயதாகும் இவர் இதுவரை 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
- அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
- இலங்கை 2வது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார். ஹாரி ப்ரூக் 56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்கத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்னில் அவுட்டானார்.
கமிந்து மெண்டிஸ் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னும், அட்கின்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஹாரி ப்ரூக்56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்ம், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- இங்கிலாந்தில் சமீப காலமாக விந்தணு தானம் செய்யும் செயல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
- உலகின் மிகப்பெரிய விந்து வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரலில் மான்செஸ்டரில் ஒரு கிளையை திறந்தது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது.
அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்கமுடியாது. ஆனால், விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்துவந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.
2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியில் 90 சதவீத பங்கைக் கொண்ட ஐரோப்பிய விந்தணு வங்கி, ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என உலகளாவிய வரம்பைப் பயன்படுத்துகிறது. அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
- ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
- கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது.
2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
- போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என அறிவுறுத்தல்
இங்கிலாந்தில் 3 இளம்பெண்கள் மரணம் அடைந்ததை அடுத்து பரவிய வந்ததிகளால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் போது கவனமாக இருக்கும்படி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் செய்திகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றும்படியும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பல நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட பார்க்கிங் சர்வீஸ் நிறுவனத்திடம் விசாரித்தார்.
நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பொது இடங்களில் பார்க்கிங் செய்வதும் பெரும் பிரச்சனையாகி வருகிறது. இதனை சமாளிக்க பல நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இங்கிலாந்தில் பார்க்கிங் செய்த 5 நிமிடத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி அமலில் உள்ளது. இந்த விதியின் கீழ் ஒரு பெண்ணுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டர்ஹாம் கவுண்டி பகுதியில் உள்ள டார்லிங் டன்னில் வசித்து வரும் ஹன்னா ராபின்சன் என்ற பெண், சம்பவத்தன்று தனது காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தி உள்ளார். அவர் பார்க்கிங் செய்வதற்கான கட்டணத்தை கட்டியிருந்த நிலையிலும் அவருக்கு 11,000 பவுன்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பார்க்கிங் சர்வீஸ் நிறுவனத்திடம் விசாரித்தார். அப்போது ராபின்சன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை பார்க்கிங் விதிமீறலில் ஈடுபட்டதற்காக ஒவ்வொரு முறையும் 170 பவுன்டுகள் வீதம் 67 முறை என மொத்தமாக அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. கார் பார்க்கிங்கில் போதிய இன்டர்நெட் இணைப்பு கிடைக்காததால், ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பணம் செலுத்த முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
- இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இயான் மோர்கன், "என் பார்வையில், இந்த நேரத்தில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரிடம் நீங்கள் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக மெக்கல்லம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் அவர் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடன பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறுவர்களை 17-வயது சிறுவன் திடீரென கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற 9 பேருக்கு கத்திக் குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
ரத்த காயத்துடன் சிறுவர்கள் சிலர் நடனப்பள்ளியில் இருந்து வெளியே சாலையில் ஓடியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாக்குதல் நடத்திய சிறுவன், தாக்குதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதல் பற்றி கூறும்போது, இச்சம்பவம் பயங்கரமான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சி என்றும் கூறியுள்ளார். இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இதை பற்றி கூறும் போது, "குழந்தைகள் மீதான தாக்குதலை அறிந்ததும் நானும், என் மனைவியும் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தோம் என்றும், மிகவும் துயரமான முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்த பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் இதயப் பூர்வமான இரங்கல், பிரார்த்தனை மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்" என்றார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர் 59 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 75.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயெ அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி 18 ரன்னிலும், பென் டக்கெட் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மார்க் வுட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 6 ரன்னும், ஜோ ரூட் 2 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.






