என் மலர்
பாகிஸ்தான்
- துப்பாக்கி சூட்டில் பிடிஐ கட்சியினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
- இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வசிராபாத்:
பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சியினர் (பிடிஐ) சிலரும் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- இவரது பதிவை 850க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர். மேலும், 49 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
- இந்திய ரசிகர்கள் சேஹர் ஷிவாரியை கலாய்த்து பதில் பதிவிட்டு வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் கடந்த வாரம் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றால் வெளியேறிவிடும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்தியா-ஜிம்பாப்வே டி20 போட்டி வரும் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி பரபரப்பாக டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று சேஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவை 850க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர். மேலும், 49 முறை ரீடுவீட் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நடிகை இந்தியாவிற்கு எதிராக டுவீட் செய்வது இது முதல்முறை அல்ல. கடந்த வாரம் வங்காள தேசத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியின்போது, "இந்தியா தோற்க வேண்டும், இந்தியா தோற்க வேண்டும்" என்று தொடர்ந்து ட்வீட் செய்து வந்தார். இதனால், இந்திய ரசிகர்கள் சேஹர் ஷிவாரியை கலாய்த்து பதில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் சில நெட்டிசன்கள், "அப்படியானால், உங்கள் முழு வாழ்க்கையையும் நீங்கள் எப்படி தனியாக வாழ போகிறீர்கள்.." என்றும், "பங்களாதேஷை இந்தியா தோற்கடித்தால் உங்கள் டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும்.." என்றும் பதிவிட்டுள்ளனர்.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
- உலகக் கோப்பையில் பாபர் ஆசம் ஆட்டம் மோசமாக இருக்கிறது.
- மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க விமர்சகர்கள் வலியுறுத்தல்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது. தற்போது, அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமின் ஃபார்ம் முக்கிய காரணம்.
மூன்று போட்டிகளில் விளையாடி முறையே 0, 4 மற்றும் 4 ரன்களே அடித்துள்ளார். இதனால் அவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதால், அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார்.
பாபர் ஆசம் குறித்து சதாப் கான் கூறுகையில் ''பாபர் ஆசம் உலகத்தரம் வாய்ந்த வீரர். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், அவரும் ஒரு மனிதன்தான். சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம். இருந்தாலும், அவர் எங்களுடைய கேப்டன். அவர் எங்களுடைய சிறந்த கேப்டன். அவர் எங்களுக்கு ஆதராவாக உள்ளார். இதனால், தற்போது அவருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மூன்று போட்டிகள் மட்டும். அதனால் யாரும் அவருடைய ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர்.
அவர் ஃபார்ம்-க்கு வருவதற்கு ஒரு ஷாட் மட்டுமே தேவை. ரிஸ்வான் போன்று ரன்கள் குவிக்க தொடங்கி விடுவார். ஆகவே, பாபர் ஆசம் அடுத்த போட்டியில் ரன்கள் குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு அடுத்த போட்டி மிகப்பெரியது. ஆகவே, அவர் அணிக்காக ரன்கள் குவிப்பார்'' என்றார்.
பாகிஸ்தான் நாளை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
- இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
- இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, தடைசெய்யப்பட்ட நாடுகளிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகார் குறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இதில் அக்கட்சி முறைகேடாக நிதி பெற்றதை உறுதி செய்த தேர்தல் ஆணையம் அக்கட்சியின் தலைவரான இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார். நேற்று 4-வது நாளாக பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய இம்ரான்கான் தன்னை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தலைவர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவுக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறினார்.
- நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
- ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தி இருந்து 300 கி.மீட்டருக்கு அப்பால் இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
- இம்ரான்கான், நவம்பர் 4 ஆம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார்.
- பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்திய இம்ரான்கான் இந்தியாவை மீண்டும் பாராட்டி பேசினார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான்கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகப் பெரும் பேரணியை தொடங்கினர். இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைதியை நிலைநாட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான்கான் தனது முதல் உரையில் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து இம்ரான்கான் பேசியதாவது:
எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். இல்லையெனில் என்னால் நிறைய சொல்ல முடியும்.
சுதந்திரமான பாகிஸ்தானைப் பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் உங்கள் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. நான் இதை மீண்டும் சொல்கிறேன், என்னால் நிறைய சொல்ல முடியும் மற்றும் உங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை.
எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இம்ரான்கான் ஏற்கனவே நடத்திய பேரணிகளின் போது வன்முறை வெடித்ததால் பாதுகாப்பிற்காக லாகூர் முதல் இஸ்லாமாபாத் வரை போலீசார் குவிக்கப்பட்டனர்.
- ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என ஆரிப் ஆல்வி வாழ்த்து.
- இது சாமர்த்தியமான பணி திறனுக்கு கிடைத்த பிரகாசமான கவுரவம்.
இஸ்லாமாபாத்:
சீன தலைநகர் பிஜீங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டின் முடிவில் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3வது முறையாக அவர் சீனாவின் அதிபராகவும் தேர்வானார்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒட்டு மொத்த பாகிஸ்தான் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். சாமர்த்தியமான பணி திறனுக்கும், சீன மக்களுக்குச் சேவையாற்றுவதில் அசைக்க முடியாத பக்திக்கும் இது அவருக்கு கிடைத்த ஒரு பிரகாசமான கவுரவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பைசாபாத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
- லாகூர் முல்தான் உள்பட நாடு முழுவதும் இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பதவி வகித்த காலத்தில் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது தனக்கு அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசின் கஜானாவில் வைத்தார்.
பின்னர் அந்த பரிசு பொருட்களை சலுகை விலையில் பெற்று அதிக விலைக்கு விற்றார். ஆனால் அதை வருமான வரி தாக்கலில் மறைத்ததாக இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டதையடுத்து விசாரணை நடந்தது.
இந்த விசாரணையின் தீர்ப்பை நேற்று தேர்தல் கமிஷன் வழங்கியது. இதில் இம்ரான்கானின் எம்.பி. பதவியை பறித்தும், 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதித்தும் தீர்ப்பை அளித்தது.
மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது கட்சி (பாகிஸ்தான் தெக்ரின்-இ-இன்சாப்) தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலும் இஸ்லாமாபாத் விரைவு சாலையில் இம்ரான்கான் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பைசாபாத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
பெஷாவர் நகரில் முக்கிய சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள நெடுஞ்சாலையில் டயர்களை போட்டு எரித்தனர். கராச்சியில் பாகிஸ்தான் தெக்ரிச்-2 இன்சாட் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர்.
இதேபோல் லாகூர் முல்தான் உள்பட நாடு முழுவதும் இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தானில் பதற்றம் நிலவுவதால் போலீசாரும், ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பதவியில் இருந்து போது அரசு பரிசு பொருட்களை இம்ரான்கான் விற்றதாக குற்றச்சாட்டு.
- இது குறித்து வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பி.டி.ஐ.) தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார்.
இந்நிலையில் தமது பதவிக்காலத்தின் போது வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு கஜானாவிற்கு செல்ல வேண்டிய வைர நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களில், மூன்று பரிசுப் பொருட்களை இம்ரான்கான் விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.58 மில்லியன் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசுத் துறையான தோஷாகானா தொடர்ந்து வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான்கான் தேசிய சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.
- தலிபான்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. தலிபான்கள் கடந்த ஆண்டு அங்கு ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு ஆண்டு முடிந்துள்ளது.
இந்நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தானில் 51 சதவீதம் அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானில் ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 14, 2021 வரை நடத்தப்பட்ட 165 தாக்குதல்களில் 294 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 598 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால், ஆகஸ்ட் 15, 2021 மற்றும் ஆகஸ்ட் 14, 2022 க்கு இடையில் நடந்த 250 தாக்குதல்களில் 433 பேர் கொல்லப்பட்டனர். 719 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
- ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும் என கம்ரான் அக்மல் வலியுறுத்தினார்
கராச்சி:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.
ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியலை கொண்டுவர கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க கூடாது. இதே போன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக் கூடாது' என்றார்.
வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
- அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
- இம்ரான்கான் கட்சியின் 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான்கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில் 7-ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.






