என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.
    • நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீபுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. உடல்நல பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் நாடு திரும்பவில்லை.

    பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார். மேலும் நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டைடையும் ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.

    இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிததாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பதவி காலம் நிறைவு பெறுவதால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த கட்சி ஒப்புக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர ஷபாஸ் அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக தமது எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் லண்டன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். புதிய ராணுவ தளபதி நியமனம், பாகிஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. 

    • பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
    • பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    பெஷாவர் :

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவில் உள்ள மர்தான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதை தொடர்ந்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அந்த பயங்கரவாதி போலீசாரால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி மெஹ்முத் என்கிற ஒபைத் என்பது தெரியவந்தது.

    மர்தான் மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஒபைத் தலைக்கு கைபர் பக்துங்வா மாகாண அரசு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • என்னை கொல்ல சதி நடந்தது பற்றி புலனாய்வு அமைப்புகள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது.
    • 3½ ஆண்டுகள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள்.

    பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி நடத்தினார். அப்போது இம்ரான்கானை நோக்கி வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது காலில் குண்டுகள் பாய்ந்தது. லாகூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இம்ரான்கானுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது வலது காலில் இருந்து 3 குண்டுகளை எடுத்தனர். இடது காலில் சில துண்டுகள் இருந்தன. அதை அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.

    என்னை கொல்ல சதி நடந்தது பற்றி புலனாய்வு அமைப்புகள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. 3½ ஆண்டுகள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். உளவுத்துறை அமைப்புகள், பல்வேறு அமைப்புகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது. எனக்கு எதிராக கொலை சதி இரண்டு மாதங்களுக்கு முன்பே உருவானது. இது நான் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது தொடங்கியது. அன்று முதல் எனது கட்சி உடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக எனது கட்சிக்கு மகத்தான ஆதரவு கிடைத்தது' என்றார்.

    • இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்தது.
    • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார்.

    துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

    இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இதற்கிடையே, லாகூரில் இருந்தவாறே இம்ரான்கான் பேசுகையில், நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நாளை முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான்கான் கட்சியினரின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை (10-ம் தேதி) முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான்கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    • நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும்.
    • லாகூரில் இருந்து கொண்டே பேரணியில் உரையாற்றுவேன் என்றார் இம்ரான்கான்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார்.

    இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

    இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்நிலையில், லாகூரில் இருந்தவாறே இம்ரான்கான் பேசியதாவது:

    நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான் இங்கிருந்து (லாகூரில்) கொண்டே பேரணியில் உரையாற்றுவேன். எங்கள் பேரணி ராவல்பிண்டியை அடைந்தவுடன், நான் அதில் நேரில் கலந்துகொண்டு பேரணியை மீண்டும் தலைமையேற்று வழிநடத்துவேன். எங்கள் பேரணி, அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் ராவல்பிண்டியை வந்தடையும் என தெரிவித்தார்.

    • துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சதியின் பின்னணியில் பிரதமர், உள்துறை அமைச்சர் இருப்பதாக இம்ரான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான்கான் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரி, கடந்த வாரம் தமது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை அவர் தொடங்கிய நிலையில், பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகரில் இம்ரான்கான் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தம்மை கொலை செய்யும் சதித் திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் குறித்த செய்திகளை ஒளிபரப்ப‌க் கூடாது என அந்நாட்டு ஊடக‌ங்களுக்கு ஷபாஸ் ஷெரீப் அரசு தெரிவித்துள்ளது. தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான்கான் முயற்சிப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இம்ரான்கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒலிபரப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி ஒளிபரப்பும் ஊடகங்களின் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
    • இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என இம்ரான்கான் சூளுரைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார்.

    இந்தப் பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்குச் சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர்.

    இதையடுத்து, இம்ரான்கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார். இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் என சூளுரைத்தார்.

    இந்நிலையில், இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கராச்சியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். பைசலாபாத் நகரில் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • துப்பாக்கி சூட்டில் அவருடன் சென்ற அவரது தெஹ்ரீக்- இன்சாப் கட்சியின் உள்ளூர் தலைவரான அகமது சத்தா உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
    • துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ்ஷெரீப் உள்பட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது70), நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வலியுறுத்தியும், அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாகாணம் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேச இருந்தார்.

    பேரணி அல்லாபாத் சவுக் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது மர்மநபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இம்ரான்கான் நோக்கி சுட்டார். இதில் ஒரு குண்டு இம்ரான்கான் காலில் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.

    இந்த துப்பாக்கி சூட்டில் அவருடன் சென்ற அவரது தெஹ்ரீக்- இன்சாப் கட்சியின் உள்ளூர் தலைவரான அகமது சத்தா உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனடியாக இம்ரான்கான் உள்பட படுகாயமடைந்த அனைவரும் லாகூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இம்ரான்கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்ற 9 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ்ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ்ஷெரீப் உள்பட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இம்ரான்கானின் தெஹ்ரீக்- இன்சாப் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியும், இம்ரான்கானின் நண்பருமான ஆசாத்உமர், மியான் அஸ்லாம் இக்பால் ஆகியோர் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்புலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ்ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா, ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பைசல் ஆகிய 3 பேர் இருப்பதாக இம்ரான்கான் நம்புகிறார்.

    அவருக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையிலேயே இதனை கூறுவதாக அவர் எங்களிடம் தெரிவித்தார் என்றனர்.

    இதற்கிடையே இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், "இறைவன் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன்" என கூறியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் மேஜர் ஜெனரல் நியமனம் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஷெரீப்க்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

    இந்தநிலையில் இம்ரான்கான் பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதும் அதன் பின்னணியில் பிரதமர் இருப்பதாக அவர் குற்றம்சாட்டி இருப்பதும் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வசீராபாத் தாலுகாவில் உள்ள ஜோத்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார். நவீத்திடம் இருந்து 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

    கைதாகி உள்ள நவீத் போலீசாரிடம் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இம்ரான்கான் மக்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார். அதனால்தான் அவரை கொலை செய்ய முயற்சித்தேன். அவர் பேரணியை தொடங்கிய அன்றே கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நான் இருசக்கர மோட்டார் வாகனம்மூலம் பேரணி நடைபெறும் பகுதிக்கு வந்தேன். அங்குள்ள உறவினரின் கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு வந்தேன். என்னுடைய இந்த செயலுக்கு பின்னால் வேறு யாரும் இல்லை. தனியாகவே இதை திட்டமிட்டு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதே நேரம் இந்த சம்பவத்தில் நவீத்துடன் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    அதாவது இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியுடனும், மற்றொருவர் தானியங்கி வகை துப்பாக்கியையும் வைத்திருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    இதில் ஒருவரான நவீத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை பேரணியில் பங்கேற்றவர்கள் மடக்கி பிடித்து அடித்துக்கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பஞ்சாப் காவல்துறைக்கு எலாஹி உத்தரவிட்டார்.
    • காவல் நிலைய ஊழியர்களின் அனைத்து மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை தடயவியல் தணிக்கைக்கு அனுப்ப உத்தரவு.

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் நேற்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வசீராபாத் தாலுகாவில் உள்ள ஜோத்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார். நவீத்திடம் இருந்து 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

    கைதாகி உள்ள நவீத் போலீசாரிடம் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்நிலையில், போலீசாரிடம் நவீத் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ கசிந்துள்ளது. இதனால் வீடியோவை கசியவிட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளை அம்மாகாண முதல்வர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) பஞ்சாப் காவல்துறைக்கு எலாஹி உத்தரவிட்டார்.

    மேலும், காவல் நிலைய ஊழியர்களின் அனைத்து மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை தடயவியல் தணிக்கைக்கு அனுப்பப்படும் என்றும் முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி சூடுக்கான நோக்கத்தை கண்டறிய விசாரணையைத் தொடங்குமாறு பஞ்சாப் ஐஜிக்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பாபர் ஆசம், சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான்கான் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக இம்ரான்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பாபர் ஆசம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இம்ரான்கான் மீதான கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.

    ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.

    தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை. 

    • கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது டிரைவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது
    • காதல் ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்துள்ளனர்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானிய பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்து உள்ளார்.

    பணக்கார வீட்டு பெண்ணான அவர், கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லியாக இருந்திருக்கிறார். பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண்ணுக்கு, அவர் மீது காதல் வந்தது.

    உடனே அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பாக `டெய்லி பாகிஸ்தான்' என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

    அப்போது, அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது என அப்பெண் கூறியுள்ளார். மேலும் காதல் கணவருக்காக பாட்டு பாடச் சொல்லி கேட்டபோது அந்த பெண், ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்த பாபி படத்தில் இடம்பெற்ற ஹும் தும் ஏக் காம்ரே மேயின் என்ற பாடலை பாட, அதற்கு அப்பெண்ணின் கணவர் லைட்டா ஸ்வரம் குறையுது என கிண்டல் அடித்திருக்கிறார். இந்த காதல் திருமண தம்பதியின் பேட்டி வைரலாகி வருகிறது.

    ×