என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 657 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஹாரி புரூக் அதிகபட்சமாக 153 ரன் எடுத்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.

    ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர். இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஹாரி புடூக் 153 ரன்னில் அவுட்டானார். ஸ்டோக்ஸ் 41 ரன்னும், ராபின்சன் 37 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஜாஹித் முகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், முகமது அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் பொறுமையுடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஷபிக் 89 ரன்னும், ஹக் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதல் நாளான இன்று 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்
    • ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    ராவல்பிண்டி:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

    அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:

    1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு

    2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு

    2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு

    2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு

    2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.

    • துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.

    இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

    இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    • 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

    பெஷாவர்:


    பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    • அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக ராணுவ தளபதி நியமனம் அனுப்பப்பட்டுள்ளது
    • ராணுவ தளபதி நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பாஜ்வாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய ராணுவ தளபதிக்கான பரிந்துரைகள் அடங்கிய குறிப்பினை அதிபருக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுப்பிவைத்துள்ளார். அதில், பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் ஆசிம் முனிர் என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். இந்த அறிவிப்பை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் வெளியிட்டுள்ளார்.

    அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக இந்த நியமனம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதிபர் தாமதம் செய்யாமல் இன்றே ஒப்புதல் வழங்குவார் என்றும், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நம்பிக்கை தெரிவித்தார்.

    எனினும், புதிய தளபதி நியமனம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ராணுவத்தின் உயரிய உளவுப் பிரிவான இண்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் தலைவரான முனீரை அவர் நியமிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குள் இம்ரான் கான் நீக்கியிருந்தார். அவருக்குப் பதிலாக தனக்கு நெருக்கமான ஒரு அதிகாரியை நியமித்தார்.

    ஆசிம் முனிர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, புதிய ராணுவ தளபதி நியமனத்தால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவத்துக்குமான மோதலையும் அதிகப்படுத்தலாம்.

    • இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும்.
    • பா.ஜனதா அரசாங்கம் மிகவும் கடுமையானது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்தது.

    இப்பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பா.ஜனதா அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

    பாகிஸ்தான்-இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது.

    எங்களை பொறுத்த வரை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பாதையை அவர்கள் (இந்தியா) வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

    2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது இந்தியாவுடனான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

    நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன்.

    உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறந்த வழி அனைவருடனும் நல்லுறவை வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மக்களுக்கு உதவ முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தியாகிகள் நினைவிடத்தில் ஜெனரல் பஜ்வா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் (வயது 61) பதவிக்காலம் வரும் 29ம் தேதி நிறைவடைகிறது. ஏற்கனவே அவருக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் பதவி நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைக்கவில்லை. இதையடுத்து புதிய ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அடுத்த ராணுவ தளபதியை நியமிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும், நவம்பர் 25ம் தேதிக்குள் பணி முடிவடையும் என்றும் பாதுகாப்புத் துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்தார்.

    ராணுவ தளபதி பதவிக்கு ஐந்து அல்லது ஆறு உயர்மட்ட ஜெனரல்கள் போட்டியில் உள்ளனர். அவர்களின் பெயர்களைக் கொண்ட முறையான பரிந்துரை பட்டியல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மந்திரி கவாஜா தெரிவித்தார்.

    பதவிக்காலம் நிறைவடைந்து பிரியாவிடை பெற உள்ள ஜெனரல் பஜ்வா, இஸ்லாமாபாத்தில் உள்ள கடற்படை மற்றும் விமான படை தலைமையகத்திற்குச் சென்றார். ராவல்பிண்டி தலைமையகத்துக்குச் சென்ற அவர், தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    • பேரணியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக இம்ரான்கான் கூறிவருகிறார்.
    • பேரணி இந்த மாத இறுதியில் இஸ்லாமாபாத்தை அடையும்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த மாத இறுதியில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியை தொடங்கியது.

    இந்த பேரணியில் பங்கேற்க கடந்த 3-ந்தேதி பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா பகுதிக்கு இம்ரான்கான் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதனிடையே அரசுக்கு எதிரான இந்த பேரணியில் தான் மீண்டும் பங்கேற்க இருப்பதாக இம்ரான்கான் கூறிவருகிறார். பேரணி இந்த மாத இறுதியில் இஸ்லாமாபாத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இம்ரான்கான் கட்சியினரின் போராட்டத்தால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலையோர வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    மேலும் முன்னாள் பிரதமருக்கு எதிரான இந்த அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்துவது அரசின் பொறுப்பு என நீதிபதி வலியுறுத்தினார்.

    தொடர்ந்து, பேரணிக்கு அனுமதி கோரி புதிய மனுவை இஸ்லாமாபாத் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இம்ரான்கானின் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் பெண்கள் 6 பேர் சிறுவர்கள்.
    • உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது.

    கைர்பூர்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று​​ கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அண்மையில் அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 6 சிறுவர்கள் உள்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு சையத் அப்துல்லா ஷா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

    சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அந்த நிறுவனத் தலைவர் டாக்டர் மொயின் சித்திக் தெரிவித்தார். எனினும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

    கைர்பூர் மிர்ஸை சேர்ந்த அந்த வேன் ஓட்டுநர், சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை பார்க்க தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
    • பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி அமைச்சர் வேண்டுகோள்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய மறுநாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி நாட்டு மக்கள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மற்றும் 2020 ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது
    • ஏற்கனவே காலேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது.

    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி. இவர் காலேயில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட போட்டியில் விளையாடும்போது, வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் ஆசிய கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் விளையாடவில்லை. நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். தொடக்கத்தில் அவருக்கு ரிதம் சரியான அளவில் கிடைக்கவில்லை. அதன்பின் சிறப்பாக பந்து வீச தொடங்கினார்.

    இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது, கேட்ச் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு பந்து வீச வந்தார். ஆனால் அவரால் பந்து வீச முடியவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் ஜனவரி வரை இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. சொந்த மண்ணில் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட முடியாத நிலை ஷாகீன் அப்ரிடிக்கு ஏற்பட்டுள்ளது.

    காயம் குறித்து முழுமையாக மதிப்பிட்டு அணியில் சேர்ப்பதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருவேளை ஷாகீன் அப்ரிடி அணியில் இடம் பிடிக்கவில்லை என்றால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இடம்பிடித்தால், ராஃப் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார்.

    • இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
    • பாகிஸ்தானைபோல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் மிகவும் மோசமாக தோற்றது. அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்தது. இதற்கிடையே இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    அவர் தனது டுவிட்டர் பதிவில், 'எனவே இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி யில் 152/0 vs 170/0 என பதிவிட்டு இருந்தார்.

    கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரு அணிகளும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) இறுதி போட்டியில் மோதுவதை பாகிஸ்தான் பிரதமர் கிண்டலுடன் தெரிவித்து இருந்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இந்த டுவிட்டர் பதிவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானைபோல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நீங்களோ மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். அதனால் தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்தவில்லை.

    இவ்வாறு இர்பான் பதான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமரின் இந்த டுவிட் தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இறுதி போட்டியில் எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. ஆனால் மன்னிக்கவும். நான் அந்த டுவிட்டை பார்க்கவில்லை. இங்கிலாந்து கடும் போட்டியை அளிக்க கூடிய சிறந்த அணியாகும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். இதுவே அவர்களது திறமைக்கு சான்றாகும்.

    பவர் பிளேயில் விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானதாகும்.

    ×