என் மலர்tooltip icon

    உலகம்

    அடுத்த ராணுவ தளபதி 25ம் தேதிக்குள் நியமனம்- பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரி தகவல்
    X

    பாதுகாப்புத் துறை மந்திரி கவாஜா ஆசிப் 

    அடுத்த ராணுவ தளபதி 25ம் தேதிக்குள் நியமனம்- பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரி தகவல்

    • புதிய ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தியாகிகள் நினைவிடத்தில் ஜெனரல் பஜ்வா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் (வயது 61) பதவிக்காலம் வரும் 29ம் தேதி நிறைவடைகிறது. ஏற்கனவே அவருக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் பதவி நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைக்கவில்லை. இதையடுத்து புதிய ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அடுத்த ராணுவ தளபதியை நியமிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும், நவம்பர் 25ம் தேதிக்குள் பணி முடிவடையும் என்றும் பாதுகாப்புத் துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்தார்.

    ராணுவ தளபதி பதவிக்கு ஐந்து அல்லது ஆறு உயர்மட்ட ஜெனரல்கள் போட்டியில் உள்ளனர். அவர்களின் பெயர்களைக் கொண்ட முறையான பரிந்துரை பட்டியல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மந்திரி கவாஜா தெரிவித்தார்.

    பதவிக்காலம் நிறைவடைந்து பிரியாவிடை பெற உள்ள ஜெனரல் பஜ்வா, இஸ்லாமாபாத்தில் உள்ள கடற்படை மற்றும் விமான படை தலைமையகத்திற்குச் சென்றார். ராவல்பிண்டி தலைமையகத்துக்குச் சென்ற அவர், தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×