search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதியை நியமித்தார் பிரதமர்: அரசியல் நெருக்கடி தீவிரமடைய வாய்ப்பு
    X

    லெப்டினென்ட் ஜெனரல் ஆசிம் முனிர்

    பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதியை நியமித்தார் பிரதமர்: அரசியல் நெருக்கடி தீவிரமடைய வாய்ப்பு

    • அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக ராணுவ தளபதி நியமனம் அனுப்பப்பட்டுள்ளது
    • ராணுவ தளபதி நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பாஜ்வாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய ராணுவ தளபதிக்கான பரிந்துரைகள் அடங்கிய குறிப்பினை அதிபருக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுப்பிவைத்துள்ளார். அதில், பாகிஸ்தானின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் ஆசிம் முனிர் என்பவரை பாகிஸ்தான் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். இந்த அறிவிப்பை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் வெளியிட்டுள்ளார்.

    அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்காக இந்த நியமனம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதிபர் தாமதம் செய்யாமல் இன்றே ஒப்புதல் வழங்குவார் என்றும், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நம்பிக்கை தெரிவித்தார்.

    எனினும், புதிய தளபதி நியமனம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ராணுவத்தின் உயரிய உளவுப் பிரிவான இண்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் தலைவரான முனீரை அவர் நியமிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குள் இம்ரான் கான் நீக்கியிருந்தார். அவருக்குப் பதிலாக தனக்கு நெருக்கமான ஒரு அதிகாரியை நியமித்தார்.

    ஆசிம் முனிர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானுக்கு ஆட்சேபனைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, புதிய ராணுவ தளபதி நியமனத்தால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவத்துக்குமான மோதலையும் அதிகப்படுத்தலாம்.

    Next Story
    ×