என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • ரத்தன் டாடா மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஜெருசலேம்:

    பிரபல இந்திய தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது மறைவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.

    • லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த நிலையில், உயிரிழந்த நஸ்ரலாவை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவராக இருந்தவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.

     


    மேலும், ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பிறகு அந்த அமைப்பை வழிநடத்த சரியான தலைமை இல்லை என்றும், அந்த அமைப்பு உடைந்து போயுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா தனக்கு பின் ஹிஸ்புல்லாவின் உயர் அதிகாரியான ஹஷேம் சஃபிதீன் அந்த அமைப்பின் தலைவராக செயல்படுவார் என்று நஸ்ரல்லா உயிருடன் இருந்த போதே தெரிவித்து இருந்தார்.

    • கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
    • கடற்கரையில் என்ன தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

    டெல்அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

    லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    மேலும் தெற்கு லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலையும் தொடங்கினர். இதற்கிடையே லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. அந்நாட்டின் வடக்கு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.


    இந்தநிலையில் லெபனானின் தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானின் தெற்கு கடற்கரையில் விரைவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம். எனவே பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்துகிறோம்.

    மீனவர்கள் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். லெபனானின் அவாலி ஆற்றின் தெற்கே வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நதி இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் மத்திய தரைக்கடலில் கலக்கிறது. லெபனானின் தெற்கு கடற்கரையில் என்ன தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே காசாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைபாவை குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணைகள் வீசினர். இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கடந்த மாதம் 21-ந்தேதி சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
    • கத்தாருடன் ரகசியமாக பேசியதாக தகவல்.

    ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


    இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.

    இந்த நிலையில் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்து இருக்கிறது.

    • வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
    • மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

    அக்டோபர் 7 தாக்குதல் 

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் இதே நாளில் [அக்டோபர் 7] முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரமான போர் தொடங்கி 1 வருடம் ஆகிய நிலையிலும், அமைதி எட்டப்படாமல் அண்டை நாடான லெபனானுக்கும் போர் விரிவடைந்துள்ளது.

    ஒரு வருடம் 

    பாலஸ்தீனதுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈரானும் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.

    இதற்கிடையே அக்டோபர் 7 தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதே நாளையொட்டி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்து அழித்ததாகவும், மற்றவை திறந்த வெளியில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

     

     மேலும் நேற்றைய தினம் இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபா [Beersheba] மத்திய பஸ் நிலையத்தில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் நுழைந்த அஹமத் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் எல்லை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அஹமத் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

     

     உலகம் 

    இதற்கிடையே இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி நேற்றைய தினம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தினர். மத்திய லண்டனில் சுமார் 40,000 பேர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். பாரிஸ், ரோம், மணிலா, கேப் டவுன், நியூயார்க் என பலேவறு நாடுகளிலும் பெரிய அளவிலான பேரணிகள் நடத்தப்பட்டன. வாஷிங்டன் நகரில் அமைத்துள்ள வெள்ளை மாளிகை அருகிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

     

    • லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
    • லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்தது.

    டெல் அவிவ்:

    சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் மற்றும் லெபனான்மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேலின் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

    லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    • லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
    • இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது.

    காசா மீதான போரை தொடர்ந்து லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர் பகுதிகள், எல்லையில் உள்ள தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. மேலும் லெபனானுக்குள் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இதில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கும் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் சுமார் 12 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மேலும் லெபனானின் வடக்கு பகுதியில் முதல் முறையாக தாக்குதல் நடத்தியது. வடக்கு பெடாவியில் உள்ள அகதிகள் முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதேபோல் லெபனானின் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வடக்கு பகுதியிலும் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    • படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
    • இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஒருபக்கம் தாக்குதல் மறுப்பக்கம் தனது படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.

    நாளை (திங்கள் கிழமையின்) தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பேசும் போது "இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம். எல்லையில் தாக்குதல்கள் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய குழு சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,205 பேர் கொல்லப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், சிறைபிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.

    கொடூர தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து, காசாவில் போர் குறைந்த வேகத்தில் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது கவனத்தை வடக்கு லெபனான் பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நடைபெற்று வருகிறது.

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
    • மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

    பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
    • 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

    டெல் அவிவ்:

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் வடக்கு லெபனான் நகரமான திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான சயீத் அட்டால்லா கொல்லப்பட்டார். அவருடன் குடும்பத்தினர் 3 பேரும் உயிரி ழந்தனர்.

    மேலும் பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஜாஹி யாசர் ஓபி உள்பட 8 பேர் பலியானார்கள்.

    • மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
    • 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

    டெல் அவிவ்:

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.

    இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    மொத்தம் 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

    இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் பலர் வசிக்கிறார்கள். மாணவர்கள் சிலர் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

    அங்கு வசிப்பவர்களில் பலர் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவருமே இந்த ஏவுகணை தாக்குதலை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு தங்களின் உறவினர்களுடன் அவர்கள் உருக்கமாக பேசியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலால் நாளுக்கு நாள் எங்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. இங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற தாக்குதலை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. டெல் அவிவ் நகருக்குள் ஏவுகணைகள் வந்து விழும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இஸ்ரேலில் வசிக்கும் தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், 'இங்கு நல்ல சம்பளம் என்பதால் வேலைக்கு வந்தேன். இங்கு 5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறேன். எனது குழந்தைகளின் கல்விச்செலவுக்காக இங்கு வந்து சம்பாதிக்கிறேன். ஆனால் இங்கு இப்போது இருக்கும் நிலைமையை நினைத்தால் கவலையாக இருக்கிறது' என்றார்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுமார் 700 பேர் டெல் அவிவ் நகரில் வசிக்கிறார்கள். ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று பயந்து தெலுங்கானாவை சேர்ந்த சிலர் கடந்த மாதமே இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால் பலர் இன்னும் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தற்போது தினம் தினம் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

    • இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.
    • இதில் 7 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாபா பகுதியில் இரு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

    மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில். இஸ்ரேலில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ×