என் மலர்
ஆஸ்திரேலியா
- கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
பிரிஸ்பேன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் டி20 ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
- மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
கோல்ட்கோஸ்ட்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னிலை பெறுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதேபோல மற்றோரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி யும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளார். வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை வெளிப்படுத்தினார்.
தொடக்க வீரர்களில் துணை கேப்டன் சுப்மன் கில்லின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம். அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஜிதேஷ் சர்மா 3-வது போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். எனவே அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் ஆகியோரும், பந்துவீச்சில் நாதன் எல்லீஸ், ஹேசில்வுட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய 35 டி20 போட்டியில் இந்தியா 21-ல், ஆஸ்திரேலியா 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- என்ன சாதனை படைத்தாலும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
- எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும் என்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரவெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேசியதாவது:
எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும்.
இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையான நினைவுகள் உள்ளன.
நானும் விராட் கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.
என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளைப் பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
இந்த தொடருக்காக பெர்த் வந்தபோது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு புதிதாக தொடங்கினோம்.
ஆஸ்திரேலியாவில் கடினமான ஆடுகளத்தையும், தரமான பந்து வீச்சையும் எதிர்பார்க்கலாம். இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதானது கிடையாது.
நாங்கள் தொடரை வெல்லவில்லை. ஆனால் நேர்மறையான விஷயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. இது ஒரு இளம் அணி. எனவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்.
நான் இந்திய அணிக்குள் வந்தபோது சீனியர் வீரர்கள் அதிகம் உதவினார்கள். தற்போது அந்தப் பணியை நாங்கள் செய்கிறோம்.
இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். ஆட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். நான் இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்கிறேன் என தெரிவித்தார்.
- இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
சிட்னி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான3வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது, ஹர்சித் ராணா வீசிய பந்தில், மிட்செல் ஓவனை கேட்ச் செய்தும், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் நாதன் எலிசை கேட்ச் செய்தும் ரோகித் சர்மா அவுட் ஆக்கினார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
இந்தப் பட்டியலில் விராட் கோலி 163 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
- பல மாதங்களுக்கு பின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மா இன்று களமிறங்குகின்றனர்.
பெர்த்:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.
பல மாதங்களுக்கு பின் இந்திய அணியில் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட உள்ளனர். இதனால் இந்திய அணி மேலும் வலுப்பெற்று காணப்படுகிறது.
தற்போதைய கேப்டன் சுப்மன் கில் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தனது திறமையை வௌிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்குவார்கள் என்றும், விராட் கோலி 3-வது வீரராகவும், அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்கும், சுழலில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உத்தேச இந்திய அணியின் விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், நிதிஷ்குமார், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா.
உத்தேச ஆஸ்திரேலிய அணியின் விவரம்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கூப்பர் கனோலி, நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குனெமான், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
- முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் விலகியுள்ளார்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்திய அணியுடன் மோதும் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்லீஷ் இருவரும் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலிப்ஸ், மேத்யூ குனேமான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்.
- பெர்த் நகரில் தாய் வாத்து தனது குஞ்சுகளுடன் சாலையை கடந்து சென்றது.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் தாய் வாத்து தனது குஞ்சுகளுடன் சாலையை கடந்து சென்றது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி வாத்துகள் கடந்து செல்லும் வரை காத்திருந்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது.
- அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சிட்னி:
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.
இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.
- ஆஸ்திரேலியா பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார் தேவா.
- ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.
சிட்னி:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்.
தனித்துவ குரல் வளத்தால் கவர்ந்தவருமான இசையமைப்பாளர் தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.
இதனால் தேவா நெகிழ்ந்து போனார். இதுதொடர்பாக தேவா கூறியதாவது:
ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது.
எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.
எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம்.
இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.
- எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார்.
- சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக அங்கிருந்து விரட்டினாள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது வீட்டின் மூலையில் பாம்பு இருந்ததைக் கண்டாள்.
இதனை தனது தந்தையிடம் அவள் கூற, அவர் எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வது போல துடைப்பானைக் கொண்டு அந்த பாம்பை சிறுமி வெளியில் விரட்டுகிறாள். அப்போது துளியும் பயமில்லாமல் அந்த சிறுமி பாம்பை விரட்டிய காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
- இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.
இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- இதனால் ஈரான் உடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இதுகுறித்து ஈரான் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் ஈரானிய புரட்சிகர காவல்படை அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது உறுதியானது. இந்த அமைப்பை ஆஸ்திரேலியா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இஸ்ரேல்-காசா போருக்கு பிறகு இந்த தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
இதனால் ஈரானுடனான உறவை துண்டிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. எனவே நாட்டில் உள்ள ஈரான் தூதர் உடனடியாக வெளியேறுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.
அதேபோல், ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு நாட்டின் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதனையடுத்து இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே ஈரானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான் பயணத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.






