என் மலர்
டென்னிஸ்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் லூகா நார்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதுகிறார்.
- பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா மற்றும் எலிசபெட்டா ஆகியோர் மோதினர்.
- இதில் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி எலிசபெட்டா வெற்றி பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் எலிசபெட்டா கோசியாரெட்டோ (இத்தாலி) ஆகியோர் மோதினர்.
இதில் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி எலிசபெட்டா வெற்றி பெற்றார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காயத்தால் விலகினார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் வேலன்டின் ரோயர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரோயர் முதல் செட்டை 6-3 என வென்றார். இரண்டாவது செட்டிலும் 6-2 என ரோயர் முன்னிலை பெற்றிருந்தார்.
அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சிட்சிபாஸ் விலகினார். இதன்மூலம் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை படோசா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரிட்டனின் கேடி பவுல்டர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என பிரிட்டன் வீராங்கனை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பவுலா படோசா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பவுல்டர் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெட்வதேவ்வும் கைப்பற்றினர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெத்வதேவும் கைப்பற்றினர். 3-வது செட் பரபரப்பாக சென்றது. இதில் போன்சி 7-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 4-வது செட்டையும் போன்சி வென்றார். இதன் மூலம் 7-6 (2), 3-6, 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி போன்சி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும்.
- வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும். அத்துடன் வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதையொட்டி கடந்த சில தினங்களாக வீரர், வீராங்கனைகள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் கார்சன் பிரான்ஸ்டைன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
- விம்பிள்டனில் அலகாரஸ் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்றுள்ளார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்ற அல்காரஸ், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை அசத்தினால் விம்பிள்டனில் ஹாட்ரிக் பட்டத்தைக் கைப்பற்றலாம்.
அதேபோல், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற சின்னர், பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தார்.
சூப்பர் பார்மில் உள்ள இவர், இம்முறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை வெல்லலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மெக்சிகோவின் கொன்சாலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் ஜோடியை சந்தித்தது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 1-6 என இழந்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றியது.
அடுத்து நடந்த சூப்பர் டை பிரேக்கரில் பாம்ப்ரி ஜோடி 13-15 என இழந்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 21 நிமிடம் நடந்தது.
- ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
- இதில் அமெரிக்காவின்ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்தது.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.
இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
- இறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்தது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் வெற்றி பெற்றார்.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரீக்ஸ்பூர், பிரான்ஸ் வீரர் காரண்டின் மவுடெட் உடன் மோதுகிறார்.
- ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
மல்லோர்கா:
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
இதில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரான்சின் தியோ அரிபேஜ்-அர்ஜெண்டினாவின் கிடோ ஆண்ட்ரசி ஜோடியைச் சந்தித்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி ஜோடி 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.






