என் மலர்
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியன் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- செக் குடியரசின் கரோலினா மசோவா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா மசோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கரோலினா 6-3 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக வீனஸ் 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கரோலினா 6-1 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிறப்பு அனுமதி பெற்ற நிலையில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story






