என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-சீனாவின் ஜியாங் ஜின் யு ஜோடி, அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் - நிகோல் மார்டினஸ் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 1-6, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • மேடிசன் கீஸ் (அமெரிக்கா) லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) ஆகியோர் மோதினர்.
    • மற்றொரு ஆட்டத்தில் நயோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் அனஸ்தேசியா செர்ஜியேவ்னா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

    Wimbledon Tennis, Madison Keys, naomi osaka, விம்பிள்டன் டென்னிஸ், மேடிசன் கீஸ், நவோமி ஒசாகாகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    மேடிசன் கீஸ் (அமெரிக்கா) லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) ஆகியோர் மோதினர். இதில் லாரா நடாலி 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று மேடிசன் கீஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் நயோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் அனஸ்தேசியா செர்ஜியேவ்னா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஒசாகா வெற்றி பெற்றார். அடுத்த 2 செட்டை அனஸ்தேசியா கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா வெற்றி பெற்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் காட் மெக்னல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    உலகின் நம்பர் 1 வீரரும், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் வுகிக் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 7-5, 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் கொரன்டின் மவூட்டை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசைச் சேர்ந்த கடரினா சினியாகோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பாலாஜி, வரேலா ஜோடி அமெரிக்க ஜோடியுடன் மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 74-வது இடத்தில் உள்ள பாலாஜி அவரது மெக்சிகன் ஜோடியான மிகுவல் ரெய்ஸ்-வரேலா மற்றும் அமெரிக்க ஜோடியான லெர்னர் டியென்- அலெக்சாண்டர் கோவாசெவிக் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    அமெரிக்க ஜோடியான லேர்னர் டியென் மற்றும் அலெக்சாண்டர் கோவாசெவிச்சை 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

    2-வது சுற்று ஆட்டத்தில் பாலாஜி மற்றும் ரெய்ஸ்-வரேலா நான்காவது நிலை வீரர்களான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் மற்றும் அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபாலோஸுக்கு எதிராக 2-வது சுற்றில் மோதவுள்ளனர்.

    நோவாக் ஜோக்கொவிச் (செர்பியா) மற்றும் டேனியல் எவன்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் மோதினர்.

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இதில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவாக் ஜோக்கொவிச் (செர்பியா) மற்றும் டேனியல் எவன்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 6-0 என்ற கணக்கில் கோக்கோவிச் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
    • மற்றொரு ஆட்டத்தில் அரீனா சபலென்கா 7-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இதில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஓல்கா டானிலோவிச் (செர்பியா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் அரீனா சபலென்கா (பெலருசியா) மற்றும் மேரி பௌஸ்கோவா (செக்) ஆகியோர் மோதினர். இதில் சபலென்கா 7-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற ஆட்டத்தில் கிறிஸ்டினா புக்சா (ஸ்பானிஷ்), லாரா நடாலி சீகமண்ட் (ஜெர்மன்) சோனய் கர்தல் (இங்கிலாந்து) ஆகியோர் 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.
    • பெண்கள் ஒற்றையரிலும் அமெரிக்காவின் கோகோ காப் உள்பட பலர் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர், இத்தாலியின் மேட்டியோ பிரெட்டேனி, டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, கிரீசின் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி உள்ளிட்ட பலர் முதல் சுற்றில் வெளியேறினர்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உள்பட பலர் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீராங்கனையும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்றவரான அமெரிக்காவைச் சேரந்த கோகோ காப், உக்ரைனை சேர்ந்த யாஸ்ட் ரெம்ஸ்கா உடன் மோதினார்.

    இதில் ரெம்ஸ்கா 7-6 (7-3), 6-1 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் தரவரிசையில் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் குயின்வென் ஜெங்கும் முதல் சுற்றில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் 6-ம் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் பிரான்சை சேர்ந்த அலெக்சாண்டர் முல்லரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 6-7 (7-9), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு 3 மணி 19 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாக்டெக் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×