என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • முதல் செட்டை நோஸ்கோவா 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பெகுலா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா மோதினர்.

    இதில் முதல் செட்டை நோஸ்கோவா 7-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த இரண்டு செட்டுகளை பெகுலா கைப்பற்றினார். இதன் மூலம் 2-7, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் பெகுலா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.

    • அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.
    • ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதினர்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பயோலினியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டி தகுதி பெற்றார்.

    • ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருக்கிறது.
    • இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    மல்லோர்கா:

    ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.

    இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியை சந்தித்தது.

    முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வென்றது. இந்தப் போட்டியில் பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 9 நிமிடம் மட்டும் நடந்தது.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் எம்மா நவாரோ காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான எம்மா நவாரோவை எதிர்கொண்டார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4 என முதல் செட்டை வென்றார். பதிலடி கொடுக்கும் விதமாக நவாரோ 6-1 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெகுலா 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் மற்றும் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்வியாடெக் எளிதாக கைப்பற்றினார்.

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ரஷ்யா வீராங்கனை எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்வியாடெக் எளிதாக கைப்பற்றினார். 2-வது பரபரப்பாக சென்றது. இறுதியில் ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதன்மூலம் 6-4, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜாஸ்மின் பயோலினி மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி மற்றும் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாட் மையா ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் ஜாஸ்மின் பயோலினி 7-5, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-3 என வென்றார். 2வது செட்டை மரியா சக்காரி 7-6 (7-2) என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-3 என் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய நவோரா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரசின் விக்டோரியா அசரென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கனடாவின் லைலா பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பவுலினி 7-6 (10-8), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.34 கோடியை பரிசுத்தொகையாக பெறுவார்கள்.

    இந்நிலையில், விம்பிள்டன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் ஜிபேரி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜிபேரி 6-2 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுமித் நாகல் 2வது செட்டை 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இத்தாலி வீரர் 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • குயின்ஸ் கிளப் சர்வதேச டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா மோதினர்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சர்வதேச டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா மோதினர்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை அல்காரஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 7-5, 6-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் லெஹக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இது அவரது 2-வது குயின்ஸ் கிளப் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×