என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை வாங் ஜின் யு , செக் நாட்டின் மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 7-6 (12-10) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை வாங் ஜின் யு 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.

    இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் கரன் கச்சனாவ் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என கச்சனாவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பப்ளிக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், மெத்வதேவை சந்திக்கிறார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-6 (7-3) என மெத்வதேவ் வென்றார். பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வரேவ் 2வது செட்டை 7-6 (7-1) என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.

    இன்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். 2வது செட்டை ரிபாகினா 6-3 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 7-6 (8-6) என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதல் செட்டை பவுலா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
    • காயம் காரணமாக 2-வது செட்டில் இருந்து பவுலா விலகினார்.

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசாவும் சீன வீராங்கனை வாங் சின்யுவும் மோதினர்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பவுலா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டில் இருந்து காயம் காரணமாக பவுலா விலகினார். இதனால் சீன வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும் துனிசிய வீராங்கனை ஆன்ஸ் ஜபேரும் மோதினர். இந்த ஆட்டத்தில் மார்கெட்டா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் டேனியல் மெட்வதேவ், அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.
    • மற்றொரு ஆட்டங்களில் அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்), அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெர்லின்:

    பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டேனியல் மெட்வதேவ்(ரஷியா ), அமெரிக்கா வீரர் அலெக்ஸ் மைக்கேல்சன் உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெட்வதேவ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டங்களில் அலெக்சாண்டர் பப்ளிக் (கஜகஸ்தான்), அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) வீரர்கள் காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றுகு நேரடியாக தகுதி பெற்றிருந்தார்.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய வாங் ஜின்யு 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் ரஷியாவின் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்டின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய தாமஸ் மார்டின் 6-3, 6-7 (4-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ரஷியாவின் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மார்கெட்டாவும் 2-வது செட்டை டயானாவும் கைப்பற்றினர்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும் ரஷ்யாவை சேர்ந்த டயானா மாக்சிமோவ்னா ஷ்னைடரும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மார்கெட்டாவும் 2-வது செட்டை டயானாவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டை மார்கெட்டா கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 3-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று மார்கெட்டா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    ×