என் மலர்
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு அல்காரஸ் முன்னேற்றம்
- 3-வது சுற்றில் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பானிஷ்), ஹமாத் மெட்ஜெடோவிக் (செர்பியா) ஆகியோர் மோதினர்.
- மற்ற ஆட்டங்களில் ஜிரி லெஹெக்கா (செக்), கரேன் கச்சனோவ் (ரஷ்யா), லூகா நார்டி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த ஆண்களுக்கான 3-வது சுற்றில் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பானிஷ்), ஹமாத் மெட்ஜெடோவிக் (செர்பியா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அல்கராஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் ஜிரி லெஹெக்கா (செக்), கரேன் கச்சனோவ் (ரஷ்யா), லூகா நார்டி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story






