என் மலர்
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: காலிறுதியில் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் 2-6 என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
நேற்று நடந்த போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டிகளில் ரிபாகினா, இகா ஸ்வியாடெக் உடனும், ஜாஸ்மின் பவுலினி ரஷியாவின் குடர்மெடொவா உடனும் மோதுகின்றனர்.






