என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்.
- இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் (131 பந்து, 13 பவுண்டரி), ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க வெளியில் இருந்த வந்த மெசேஜ்தான் காரணம் என்று கவுதம் கம்பீரை மறைமுகமாக முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்டிற்கு வெளியிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டபோது, அது அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் பேட்டருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் காலப்போக்கில், சில வீரர்களுக்கு, நீங்கள் அந்த செய்தியை எவ்வாறு அனுப்புகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறும். சில வீரர்களுக்கு தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்" என்று கூறினார்.
சும்பன் கில் மற்றும் கருண் நாயர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடுமாறு கம்பீர் ஓய்வறையில் இருந்து பண்டிற்கு மெசேஜ் ஒன்றினை மாற்றுவீரர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்த சில ஓவர்கள் ரிஷப் பண்ட் பந்தினை தடுத்து ஆட முயன்றார். இருப்பினும் அது அவருக்கு சரியாக வராததால் விக்கெட்டை பறிகொடுத்தார்.
- ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) பும்ரா சமன் செய்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
முன்னதாக ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) சமன் செய்த பும்ரா சமன் செய்தார். ரூட்டை அதிகமுறை விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் (11 முறை) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
- 27 வயதான ரிஷப்பண்ட் நேற்று 7-வது சதத்தை (44-வது டெஸ்டில்) பதிவு செய்தார்.
- இங்கிலாந்து மண்ணில் ரிஷப்பண்ட் 3-வது சதத்தை அடித்தார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து இருந்தது. ஆலி போப் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பென் டக்கெட் 62 ரன் எடுத்தார். பும்ரா 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இங்கிலாந்து 262 ரன்கள் பின்தங்கி, கைவசம் 7 விக்கெட்டுடன் இருக்கிறது.
27 வயதான ரிஷப்பண்ட் நேற்று 7-வது சதத்தை (44-வது டெஸ்டில்) பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் ரிஷப்பண்ட் 3-வது சதத்தை அடித்தார். வேறு எந்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் இங்கிலாந்தில் 3 சதம் அடித்தது கிடையாது.
லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப்பண்ட் பெற்றார். 2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இங் கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 140 ரன் எடுத்தார். ரிஷப் பண்ட் 7 ரன்னில் சாதனையை தவற விட்டார்.
ரிஷப்பண்ட் 52-வது ரன்னை தொட்டபோது 3 ஆயிரம் ரன்னை எடுத்தார். அவர் 3082 ரன் எடுத்துள்ளார்.
ரிஷப்பண்ட் ஸ்கோரில் (134 ரன்) 6 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கும் ஷேவாக், டோனியை சமன் செய்தார். ஹர்திக் பாண்ட் யா 7 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளார். 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதி ராக காலே மைதானத்தில் அவர் இதை எடுத்தார்.
லீட்ஸ் டெஸ்டில் 3 இந்தயர்கள் சதம் அடித்தனர். வெளிநாட்டில் இந்தியாவுக்கு இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (1985-86), இலங்கை (1997), இங்கிலாந்து (2002), வங்கதேசம் (2007), ஆகிய நாடுகளில் 3 இந்திய வீரர்கள் சதம் அடித்து இருந்தனர்.
- வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது.
- இலங்கை அணியின் தரிந்து ரத்னநாயக 3 விக்கெட் வீழ்த்தினார்.
காலே:
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்து 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
கமிந்து மெண்டிஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்,
வங்கதேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஹசன் மஹ்முது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹொசைன் சான்டோ மீண்டும் சதமடித்தார். ஷட்மான் இஸ்லாம் அரை சதமடித்து 76 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் 49 ரன்னில் அவுட்டானார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, காலே டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகனாக வங்கதேசத்தின் ஹொசைன் ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
- இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 262 ரன்கள் பின் தங்கி உள்ளது.
இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 165 ரன்கள் குவித்தது.
திருநெல்வேலி:
டிஎன்பிஎல் 2025 சீசனின் 18-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சோனு யாதவ், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.
அதிகபட்சமாக அத்னன் கான் 26 ரன்னும், சோனு யாதவ் 23 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெல்லை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி, தொடர் தோல்விக்குப் பிறகு நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
கோவை அணி சார்பில் திவாகர் 3 விக்கெட்டும், புவனேஸ்வரன், சித்தார்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசினார்.
- சோனு யாதவ், ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 18ஆவது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்தது. ஜிதேந்திர குமார், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜிதேந்தர் குமார் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சச்சின் 10 ரன்னிலும், சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் லோகேஷ்வர் நிலைத்து நின்று ஆட, 4ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் ஷாருக்கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15 ஓவரில் கோவை 105 ரன்கள் எடுத்திருந்தது.
16 ஓவரில் 22 ரன்கள் அடித்த கோவை, சோனு யாதவ் வீசிய 17ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. லோகேஷ்வர் மட்டும் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
கோவைக்கு18ஆவது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரில் 7 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்க கோவை 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசினர்.
- 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.
- 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147), ரிஷப் பண்ட் (134) சதம் விளாசினார்.
இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே ஒரு இன்னிங்சில் சதம் விளாசி மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை பட்டியில் இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக,
* 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
* 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.
* 2006-ல் வெஸ்ட் இண்டீஸ் கிராஸ் ஐஸ்லெட்டில் சேவாக், ராகுல் டிராவிட், கைஃப் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
* அதன்பின் தற்போது ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
- ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் சதம் விளாசினர்.
- பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டோங்க் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் சதத்தால் இந்தியா 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 11 ரன்னிலும், பும்ரா ரன்ஏதும் எடுக்காமலும், பிரசித் கிருஷ்ணா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டோங்க் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க இருந்தது. பேட்டர்கள் தயாரான போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- சுப்மன் கில் 147 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ரிஷப் பண்ட் 134 ரன்கள் விளாசினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.
ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.
ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து சுப்மன் கில் 150 ரன்னைக் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பசீர் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்று பவுண்டரில் லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 227 பந்தில் 19 பவுண்டரி, 1 சிக்சருடன் 147 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்தது. சுப்மன் கில்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது.
5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 8 வருடம் கழித்து களம் இறங்கிய கருண் நாயருக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 178 பந்தில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 1 ரன்னில் வெளியேறினார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்கள் எடுத்துள்ளது. கில் ஆட்டமிழக்கும்போது இந்தியா 430 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கடைசி 25 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
- எம்.எஸ். டோனி 90 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் அடித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் 44 போட்டிகளில் விளையாடி 7 சதம் அடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 7ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனி 6 சதம் அடித்துள்ளார். இதுதான் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
எம்.எஸ். டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்சில் பேட்டிங் செய்து 4876 ரன்கள் அடித்துள்ளார். 33 அரைசதம் அடித்துள்ளார்.
ரிஷப் பண்ட் இந்த போட்டிக்கு முன்னதாக 43 போட்டிகளில் 75 இன்னிங்சில் பேட்டிங் செய்து 2948 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 சதம், 15 அரைசதம் அடங்கும். தற்போது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
- சதம் அடிக்க 146 பந்துகள் எடுத்துக் கொண்டார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.
ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.






