என் மலர்
விளையாட்டு
- எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்தது.
- கேப் டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கேப் டவுன் அணியின் தொடக்க வீரர்களாக ரஸ்ஸி வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது. இந்த ஜோடியை இம்ரான் தாஹீர் பிரித்தார்.
இறுதியில் எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே ரன் எடுக்க திணறியது. இதனால் 3 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்த அணி சீரான இடைவெளியில் அடுத்ததுடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கடைசி வரை போராடிய ஷேப்பர்ட் 34 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனால் கேப் டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுன் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- விராட் கோலி 2-வது டி20 போட்டியில் விளையாடுவார்.
- ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 2-வது டி20 போட்டியில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி 2-வது டி20 போட்டியில் விளையாடுவார். சிறிய மைதானம் என்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற வேண்டும். அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இருப்பது முக்கியம். ஏனென்றால், ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று. அதேநேரம் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
என்று கூறியுள்ளார்
- வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது.
- சென்னை அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், சேப்பேர்ட், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கேப் டவுன் அணியின் தொடக்க வீரர்களாக ரஸ்ஸி வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது. இந்த ஜோடியை இம்ரான் தாஹீர் பிரித்தார்.
வான் டெர் டுசென் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த டெவால்ட் ப்ரீவிஸ் 5 ரன்னிலும் லிவிங்ஸ்டன் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கல்டன் கடைசி ஓவரில் 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 250 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், சேப்பேர்ட், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.
- அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம்.
மும்பை:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் வரும் 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓல்லி போப், இந்திய ஆடுகளம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தொடர் நடைபெறும் போது வெளியிலிருந்து பல குரல்கள் வரலாம். ஆடுகளம் குறித்து பல விவாதங்கள் எழலாம். ஆனால் ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.
எனவே ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்கள் அணியை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது ஆடுகளத்தில் பொருட்கள் கொஞ்சம் வைத்திருப்போம். இதன்மூலம் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருக்கும். இதே போல் இந்தியாவும் அவர்களுக்கு ஏற்றார்போர் ஆடுகளத்தை தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
முதல் பந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பினாலும் நாங்கள் ஆடுகளம் குறித்து எந்த புகாரையும் கூற மாட்டோம். அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம். கடந்த 2021-ம் ஆண்டு தொடரில் ரோகித் சர்மாவும், ரிஷப் பண்டும் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடினார்கள்.
ஒவ்வொரு பேட்ஸ்மேன் தொடக்கத்திலும் கடும் சவால்களை நாம் கொடுத்து நெருக்கடியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு புது பேட்ஸ்மேனுக்கும் நாம் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிளான் ஆக இருக்கிறது.
என்று ஓல்லி போப் கூறினார்.
- டிராவிட் மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இருப்பவர் ராகுல் டிராவிட். இவரது மகனான சமித் ஜூனியர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆல்ரவுண்டராக கலக்கும் அவர் 7 போட்டிகளில் விளையாடி 37.78 சராசரியுடன் 3 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் எடுத்தார். மேலும், பந்து வீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளரான சமித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்நிலையில் தனது மகன் சமித்துக்கு பயிற்சியளிப்பது குறித்த தனது கருத்துக்களை டிராவிட் பகிர்ந்து கொண்டார்.
அதில் ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:
பெற்றோர் மற்றும் பயிற்சியாளராக இருப்பது கடினம் என்பதால் எனது மகன் சமித்திற்கு நான் பயிற்சி அளிக்கவில்லை. நான் தந்தையாகவே இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
என்று அவர் கூறியுள்ளார்.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் பிரதிஷ் கிருஷ்ணாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
- ஒரு தொடரோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 27 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு இடம் அளிக்கப்படாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அவர் அறிமுகமான ஒரு தொடரோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் உண்மையாகவே பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க தொடரை முடித்து நாடு திரும்பிய பிரசித் கிருஷ்ணா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக விளையாட விரும்பினார். அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் அந்த போட்டியில் கர்நாடக அணிக்காக சார்பாக பிரசித் கிருஷ்ணா விளையாடினார்.
அப்படி அவர் விளையாடிய அந்த போட்டியின் இடையே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைப்பிடிப்பு மட்டும் ஏற்படவில்லை அதோடு சேர்ந்து குவாட்ரைசெப்ஸ் என்கிற காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த காயம் சரியாக 6 வாரங்கள் வரை ஆகும் என்ற மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாலே அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
- இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது.
- இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்தூர்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதிய முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணி மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி 2-வது போட்டிக்கு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி 430 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.
இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளதால் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- விராட்கோலி இளமையாக இருக்கிறார்.
- கோலி விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
கொல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி, டெஸ்டில் 29 சதம், ஒருநாள் போட்டியில் 50 சதம், 20 ஓவர் போட்டியில் ஒன்று என 80 சதங்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பார் என்று வெஸ்ட்இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிளைவ் லாயிட் கூறியதாவது:-
விராட்கோலி இளமையாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவரது கையில் நேரமும் இருக்கிறது.
விராட் கோலி, விவ்ரிச்சர்ட்ஸ் இருவரும், இரண்டு வகையான கிரிக்கெட் வீரர்கள். எனவே அவர்களை ஒப்பிட முடியாது. சர்வதேச போட்டி அட்டவணையில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் இடம் பெற வேண்டும். இருதரப்பு டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் இருக்க வேண்டும் என்றார்.
- முதலில் விளையாடிய வெலிங்டன் அணி 147 ரன்கள் சேர்த்தது.
- மத்திய மாவட்டங்கள் அணி 16.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெலிங்டன்- மத்திய மாவட்டங்கள் (Central Districts) அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெலிங்டன் அணி 147 ரன்கள் எடுத்தது.
பின்னர், மத்திய மாவட்டங்கள் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வில் யங், ஜெக் பாய்லே ஆகியோர் களம் இறங்கினர். 6-வது ஓவரின் 2-வது பந்தை வில் யங் தூக்கி அடித்தார். பந்து மிட் ஆன்- மிட்ஆஃப் இடையே பவுண்டரி லைன் நோக்கி பறந்து சென்றது. மிட் ஆன் திசையில் நின்றிருந்த ட்ராய் ஜான்சன் பந்தை நோக்கி சென்றார்.
பின்நோக்கி ஓடிய அவர் பந்தை பாய்ந்து பிடித்தார். பந்தை பிடித்த வேகத்தில் விழுந்த அவர் சறுக்கிக் கொண்டு பவுண்டரி லைனை தொடும் வகையில் சென்றார். பவுண்டரி லைனை தொடுவதற்குள் பந்தை தூக்கி உள்நோக்கி போட்டார்.

இவர் ஓடி வந்த அதேவேளையில் மைக்கேல் ஸ்னேடன் மிட்ஆஃப் திசையில் இருந்தும் ஓடி வந்தார். ஜான்சன் தூக்கிப்போட்ட பந்தை, ஸ்னேடன் கேட்ச் பிடித்தார். இதனால் வில் யங் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்த கேட்ச் நம்ப முடியாத வகையில் இருந்தது. போட்டியை நேரில் கண்டு ரசித்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். பொதுவாக நியூசிலாந்து வீரர்கள பவுண்டரி லைனில் பந்தை பிடித்து பின்னர் தூக்கி போட்டு பிடிப்பது, பவுண்டரி லைனை தாண்டும்போது ஒருவீரர் பந்தை தூக்கிப்போட மற்றொரு வீரர் பந்தை பிடிப்பது எளிதான விசயம்தான்.
இந்த போட்டியில் மத்திய மாவட்டங்கள் அணி 16.5 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- கிரிக்கெட் விளையாட விண்ணப்பித்தது தெரிய வந்ததால் தந்தை திட்டினார்.
- இருந்த போதிலும கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான 22 வயது த்ருவ் ஜுரேல் இடம் பிடித்துள்ளார். முதன்முறையாக இவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். இவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் அவரது தந்தை 800 ரூபாய் கடன் வாங்கி பேட் வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தனது கிரிக்கெட் விளையாட்டு குறித்து த்ருவ் ஜுரேல் கூறியதாவது:-
நான் ராணுவ பள்ளியில் படித்தேன். அப்போது விடுமுறை காலத்தின்போது, ஆக்ராவில் உள்ள எக்லாவ்யா மைதானத்தின் கிரிக்கெட் முகாமில் கலந்து கொள்ள நினைத்தேன். அதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எனது தந்தையிடம் அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தந்தைக்கு தெரியவந்ததால் என்னை திட்டினார். என்றாலும் கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக 800 ரூபாய் கடன் வாங்கினார்.
மேலும், தந்தையிடம் கிரிக்கெட் பேக் (cricket kit) வேண்டும் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் தேவைப்படும் என்றேன். அப்போது என்னிடம் விளையாட வேண்டாம். விளையாட்டை நிறுத்து என்றார்.
ஆனால், நான் அடம்பிடித்து, பாத்ரூம் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். பின்னர் எனது தாயார், அவரது தங்கத் செயினை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்.
எனது நண்பர்கள் என்னிடம், இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தெரிவித்தார்கள். நான் தேர்வானதை அவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் எந்த இந்திய அணிக்கு என்று கேட்டார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணிக்கு என்றேன். இதைக் கேட்டு என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சி வசப்பட்டது.
இவ்வாறு த்ருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார்.
- கே.எல். ராகுல் உடன் மூன்று விக்கெட் கீப்பர்.
- நான்கு சுழற்பந்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்) என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம பிடித்துள்ளனர்.
பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. கே.எல். ராகுல், 7. கே.எஸ். பரத், 8. த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. அக்சார் பட்டேல், 12. குல்தீப் யாதவ், 13. முகமது சிராஜ், 14. முகேஷ் குமார், 15. பும்ரா, 16. ஆவேஷ் கான்.
2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி முதல் மார்ச் 11-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.
- டி20 வரலாற்றில் 150 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் சவுத்தி.
- அவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் உள்ளார்.
ஆக்லாந்து:
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் அதிரடியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுத்தி. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானிம் ரஷித் கான் 130 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி 127 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் லசித் மலிங்கா 107 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சஹல் 96 விக்கெட்டுடன் 14-வது இடத்தில் உள்ளார்.






