என் மலர்
விளையாட்டு
- நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என கம்பீர் கூறினார்.
- சூர்யகுமார் கடைசி இரண்டு ஓவர்களை யாருமே எதிர்பாராத வீரர்களுக்கு வழங்கியது சிறப்பான முடிவு என ஹர்திக் கூறினார்.
மும்பை:
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து ட்ரெஸ்ஸிங் ரூமில் கௌதம் கம்பீர் வீரர்களிடையே உரையாற்றினார். போர்குணத்துடன் வெற்றிக்காக போராடினால் நிச்சயம் இப்படித்தான் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் இதே போல் தொடர்ந்து வெற்றிக்காக போராட வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
சில வீரர்கள் ஒரு நாள் தொடரில் ஆடப்போவதில்லை. அவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கும். வங்கதேச தொடருக்கு அவர்கள் திரும்ப வரும்போது அவர்களது திறமை மற்றும் உடற் தகுதி உச்சத்தில் இருக்க வேண்டும். அந்தத் தொடருக்கு நீங்கள் நேரடியாக வந்து, நாம் சிறப்பாக செயல்படலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். எனவே, நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.
என கூறினார்.
இதனையடுத்து எப்போதுமே பயிற்சியாளர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசும்போது ஒரு கேப்டனை தான் பேச அழைப்பார்கள். ஆனால் நேற்று கம்பீர், சூர்யகுமாரை அழைக்காமல் ஹர்திக் தற்போது உங்களிடம் உரையாற்றுவார் என்று கூறினார்.
கம்பீர் பாய் சொல்வது போல் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றெடுக்கின்றோம் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
மேலும், நான் எப்போதுமே கீழ் வரிசை வீரர்களும் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று கூறுவேன். அதற்கு ஏற்றார் போல் வாஷிங்டன் சுந்தரும் ரவி பிஷ்னாயும் நேற்று அடித்த ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று சூர்யகுமார் யாதவ் கடைசி இரண்டு ஓவர்களை யாருமே எதிர்பாராத வீரர்களுக்கு வழங்கியது சிறப்பான ஒரு முடிவு.
அதற்கு என்னுடைய சல்யூட். கம்பீர் பாய் சொல்வது போல் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றெடுக்கின்றோம்.
என்று கூறினார்.
- இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் அணியுடன் மோதும்.
- 2-வது தகுதி சுற்று ஆட்டம் வருகிற 2-ந் தேதி சென்னையில் நடக்கிறது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சுடன் வருகிற 2-ம் தேதி சென்னையில் மோதும். தோற்கும் அணி வெளியேறும்.
- முதலில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி இந்தியாவில் உள்ள நொய்டாவில் நடக்கிறது.
- அதனை தொடர்ந்து நடக்கும் ஒருநாள் போட்டி யுஏஇ-யில் நடைபெற உள்ளது
ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
முதல் முறையாக ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிர்க்கா அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி இந்தியாவில் உள்ள நொய்டாவில் செப்டம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.
இதனை தொடர்ந்து நடக்கும் ஒருநாள் போட்டி யுஏஇ-யில் நடைபெற உள்ளது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் ஆப்கானிஸ்தான் தலைமையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.
- வீரர்கள் அனைவரும் சக வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
- நான் பேட்டிங் செய்ய செல்லும் போது அழுத்தத்தை உணர்கிறேன்.
பல்லகெலே:
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலன 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே எடுத்தது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் நான் எப்போதும் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன் என சூர்யகுமார் யாதவ் விளக்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடைசி 2 ஓவரைக் காட்டிலும் 48 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த பின்னரும் அனைவரும் நம்பிக்கையோடு ஆடினர். அதுதான் மகிழ்ச்சியான விஷயம். இந்த பிட்ச்சில் 140 ரன்கள் என்பதுதான் சராசரி ஸ்கோர். அதனால் அதுதான் எங்கள் இலக்காக இருந்தது. அப்போது நம்பிக்கையோடு விளையாடினால் நிச்சயம் வெல்வோம் எனக் கூறினேன்.
வீரர்கள் அனைவரும் சக வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நான் பேட்டிங் செய்ய செல்லும் போது அழுத்தத்தை உணர்கிறேன். எப்போதும் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
- குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.
- பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.
- ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
- மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக இன்று ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அணியின் உரிமையாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐ.பி.எல். சீசனில் இருந்து கடைசி நிமிடத்தில் விலகும் வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பி.சி.சி.ஐ.-யிடம் ஐ.பி.எல். அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கடைசி நேரத்தில் அல்லது முக்கியமான கட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவது வாடிக்காயாக உள்ளது. உதாரணமாக, போன ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதலில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில் இருந்த போது, இங்கிலாந்து அணி வீரர் வில் ஜக் சிறப்பாக விளையாடினார்.
இதனால் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து விளையாடி ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்று தருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பிளே ஆப் சுற்றில் விளையாடாமல் உடனே இங்கிலாந்து சென்று விட்டார். இப்படி பல வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கோரிக்கை உள்ளது.
- ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்று இன்று நடந்தது.
- இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் குத்துசண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், நார்வே வீராங்கனைஹோப்ஸ்டெட் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம் லவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
- நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது.
- இந்த போட்டியில் ரெயின்போ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது. இந்த போட்டியில் 45 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய சோகோ ரேன்சர்ஸ் அணி 230 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து விளையாடிய ரெயின்போ அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ப்ரான்சிஸ் கடைசி பந்தை சிக்சராக விளாசினார்.
இதனையடுத்து வெற்றியை கொண்டாடும் விதமாக பேட்டை பறக்கவிட்டார். அந்த பேட் நடுவரின் காலில் வந்து தாக்கியது. வலியால் துடித்த நடுவர் அந்த சமயத்திலும் பணியை சிறப்பாக செய்யும் விதமாக சிக்சர் என சிரித்தப்படி வழங்கினார். நடுவர் மீது பேட் பட்டத்தை கண்டும் காணாமல் இருந்த பேட்டர் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
- இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். அதேபோல்,
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, சிங்கப்பூர் வீராங்கனை செங் ஜியானுடன் மோதினார். இதில் அகுளா 4-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
- குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ 3பி தகுதிச் சுற்றில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ஸ்வப்னில் குசேலே ஆகியோர் கலந்து கொண்டனர். தகுதிச் சுற்றில் முதல் எட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.
அந்த வகையில் குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.
சீனாவின் லியு யுகுன் மொத்தம் 594 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், நார்வேயின் ஜான்-ஹெர்மன் ஹெக் 593 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்,
3 முதல் 6 இடங்கள் முறையே செர்ஹி குலிஷ் 592 புள்ளி (உக்ரைன்), லுகாஸ் 592-35x புள்ளி (பிரான்சிஸ்), லாசர் கோவாசெவிக் 592-33x புள்ளி (செர்பியா), டோமாஸ் பார்ட்னிக் 590-40x புள்ளி (பொலந்து) ஜிரி பிரிவ்ராட்ஸ்கி 590-35x புள்ளி (செக் குடியரசு). 7-வது இடத்தில் தோமர் உள்ளார்.
- இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
தொடக்கத்தில் 2-8 என பின்தங்கிய லக்ஷயா சென், அதிரடியாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.
இறுதியில், லக்ஷயா சென் 21-18, 21-12 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
That was insane, Lakshya Sen! How could you pull off that shot? Unbelievable! ??? pic.twitter.com/buP3RfHVCP
— Kuch Bhi!!!! (@KirkutExpert99) July 31, 2024
- இலங்கைக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பல்லகெலே:
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே அடித்தது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் இலங்கை அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை (105 தோல்வி) முதல் இடத்திலும், வங்காளதேசம் (104 தோல்வி) 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (101 தோல்வி) 3-வது இடத்திலும் உள்ளன.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் கண்ட அணி (சூப்பர் ஓவர் உட்பட):-
இலங்கை - 105 தோல்வி
வங்காளதேசம் - 104 தோல்வி
வெஸ்ட் இண்டீஸ் - 101 தோல்வி
ஜிம்பாப்வே - 99 தோல்வி
நியூசிலாந்து - 99 தோல்வி






