என் மலர்
விளையாட்டு

X
பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா 2வது சுற்றிலும் வெற்றி
By
மாலை மலர்31 July 2024 3:42 PM IST (Updated: 31 July 2024 4:28 PM IST)

- பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
- இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். அதேபோல்,
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுளா, சிங்கப்பூர் வீராங்கனை செங் ஜியானுடன் மோதினார். இதில் அகுளா 4-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
X