என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கானலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
    • போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    முகமது ஷமி பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கானலி டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.

    போட்டியின் 8 ஆவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி முதல் பந்திலேயே ஹெட் விக்கெட்டை தூக்கினார். இதனால இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஹெட் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்துவார் என்று முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தார்..

    இது குறித்து பேசிய அஸ்வின், "இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம். உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். 

    • மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாம்பியன் பட்டம் பெற்றார்.

    மெக்சிகோ:

    மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய எம்மா நவாரோ 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.
    • ரோகித் 11 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 14 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது.

    2023-ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 11 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.

    தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)

    நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)

    இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 11 (நவம்பர் 2023 - மார்ச் 2025)

    • முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், துபாயில் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

    ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கோனோலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • பத்மகர் ஷிவல்கர் (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
    • இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை:

    மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

    இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த செயல்பாடுகளில் ஒன்று 1972-73 ரஞ்சி சீசனின் இறுதிப்போட்டியில் 13 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி மும்பை கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட விட்டாலும், உள்நாட்டு போட்டிகளில் இவரது பங்களிப்பை போற்றும் விதமாக இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ., சி.கே.நாயுடு வாழ்நாள் விருது வழங்கி கவுரவித்தது.

    • தென் ஆப்பிரிக்கா அணி 1998-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.
    • நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

    இன்று மதியம் 2.30 மணிக்கு துபாயில் தொடங்கும் முதல் அரைஇறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    2-வது அரைஇறுதி போட்டி நாளை லாகூரில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா-ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியில் ரிக்கல்டன், வான்டெர்து சென், கிளாசன், மார்க்ரம், டேவிட் மில்லர், முல்லர், யான்சன், ரபடா ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி லீக் போட்டியில் 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் பேட்டிங், பந்துவீச்சு சமபலத்துடன் உள்ளது. இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணி 1998-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதில் சாம்பியன் பட்டமும் வென்றது. அந்த அணி 2-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. நியூசிலாந்து அணியில் வில் யங், வில்லியம்சன், ரவீந்திரா, டாம் லாதம், பிலிப்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களும், ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஒர்ருக், பிரெஸ்வேல் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. 2000-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.
    • இந்த படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தெலுங்கில் ராபின்வுட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.

    வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அதன்படி டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த வார்னர், தற்போது திரைபடங்களில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அனிகள் இன்று மோதுகின்றனர்.
    • இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாக் அவுட் சுற்றில் கடந்த 14 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது இல்லை.

    மேலும் இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் எப்போதுமே சிறப்பாக விளையாடி வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் என அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனாக ஹெட் திகழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கோவிலில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து வேண்டிக் கொண்டனர். இதே போல் பல இடங்களில் இந்திய அணி வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு யாகங்களும் நடத்தி வருகின்றனர்.

    • சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது.
    • லீக் சுற்றில் இந்திய அணி துபாய் மைதானத்தில் 3 போட்டியிலும் வெவ்வேறு ஆடுகளத்தில் விளையாடியது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தது. இதையடுத்து இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா, ஒரே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக உள்ளது என்று முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்தனர்.

    இந்த விமர்சனங்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. இங்கே 4-5 ஆடுகளங்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான தன்மையை கொண்டிருக்கும். அது எப்படி விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.

    இந்த நிலையில் துபாயில் இன்று மதியம் தொடங்கும் முதல் அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி துபாய் மைதானத்தில் 3 போட்டியிலும் வெவ்வேறு ஆடுகளத்தில் விளையாடியது. இந்த நிலையில் அரைஇறுதிப்போட்டிக்கு புதிய ஆடுகளம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் மைதான ஆடுகளங்களின் கண்காணிப்பாளரான மேத்யூ சாண்டரி, ஆடுகளத்தை மெதுவாகவும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாகவும் இருக்கும் டிராக்குகளை அமைத்துள்ளார்.

    • எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.
    • ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது முற்றிலும் தேவையற்றது.

    மும்பை:

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது தெரிவித்தார்.

    ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன் என்று ஷமா முகமது கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கவாஸ்கர் கூறும்போது, எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், நீங்கள் ஒரு மாடலிங் போட்டிக்குச் சென்று அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும்.

    இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இது உடல் எடையை பொறுத்தது அல்ல. நீங்கள் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்பது பற்றியது. சர்பிராஸ்கான் உடல் எடை அதிகமாக இருப்பதால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 150 ரன்கள் எடுத்தார். அதன்பின் அரைசதங்களும் அடித்தார்.

    நான் விளையாடிய காலத்தில் என்னால் மைதானத்தை 2 முறை சுற்றி ஓட முடியாது. ஆனால் நான் நாள் முழுவதும் நின்று பேட்டிங் செய்தேன். உடல் எடைக்கும், மனவலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரிக்கெட் உடற்பயிற்சி மற்றும் உடல் தகுதி இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். நீங்கள் நீண்ட தூரம் நீடிக்க முடியுமா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்றார்.

    வெங்கடேஷ் பிரசாத் கூறும்போது, ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மிகுந்த கண்ணியத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றார்.

    வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப் படுத்துவது முற்றிலும் தேவையற்றது. பல ஆண்டுகளாக தனது திறமைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் சாதித்த ஒரு நபருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.

    • ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில், இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன.
    • இதில் இந்தியா நான்கிலும், ஆஸ்திரேலியா மூன்றிலும் வெற்றி கண்டுள்ளன.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    முன்னதாக இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி வீழ்த்தியதே இல்லை. அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றியமைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    2015 உலக கோப்பை அரையிறுதி, 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில், இதுவரை 7 போட்டிகளில் மோதி இந்தியா நான்கிலும், ஆஸ்திரேலியா மூன்றிலும் வெற்றி கண்டுள்ளன.

    • டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன்.
    • ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதை போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி பட்டங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். கிளென் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை புரிந்து கொள்ளவது கடினம். இறுதியில் குல்தீப் யாதவ் பந்தில் மேக்ஸ்வெல் வெளியேறுவார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதியில் வெல்ல முடியும்.

    அதனால் டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்துவதற்கு நான் வருண் சக்ரவர்த்திக்கு புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு தருவேன். அதிலும் குறிப்பாக ஹெட்க்கு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை கூட கொடுக்க வேண்டாம். உடனடியாக வருணிடம் பந்தை கொடுங்கள். முதல் 10 ஓவர்களில் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஹெட்டிற்கு சவால் விடுவேன். இதுவே எனது உத்தியாக இருக்கும்.

    என்று அஸ்வின் கூறினார்.

    ×