என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.
புதுடெல்லி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் வழக்கமாக இரவு ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கும். அதனை 30 நிமிடம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
கூட்டம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்கள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு போட்டியை தொடங்குவது குறித்து விவாதித்தோம். அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த வருடங்களை போல் இந்த முறையும் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த முறை 5 நாட்களில் மட்டுமே இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகிறது. அவை முறையே மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும்.
போட்டியின்போது பவுலர்கள் வீசும் பந்து பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டில் தாக்கி தலையில் அதிர்வு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கும் முறை மற்றும் நோ-பாலை ஆடுகள நடுவருக்கு பதிலாக 3-வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறை ஆகியவை இந்த போட்டியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் நல நிதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியை பழைய தேர்வு கமிட்டி தேர்வு செய்து விட்டது. மார்ச் மாதம் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை புதிய தேர்வு குழுவினர் தேர்வு செய்வார்கள். தேர்வு குழு உறுப்பினர்களுக்கான நேர்காணல் விரைவில் நடைபெறும். கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் மதன்லால், சுலக்ஷனா ஆகியோர் இருப்பார்கள். கம்பீருக்கு பதிலாக மாற்று நபர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. அவர் உடல் தகுதியை எட்ட சிறிது காலம் பிடிக்கும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை மீண்டும் பிடித்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணியின் மாற்று ஆட்டக்காரர் பல்வந்த் சிங் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது.
கொல்கத்தா அணி தான் ஆடிய 14 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 தோல்வி மற்றும் 3 ஆட்டம் சமன் என 27 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
கவுகாத்தி அணி தான் ஆடிய 12 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 5 ஆட்டம் சமன் என 11 புள்ளிகள் பெற்று 9ம் இடத்தில் உள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 191 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. நேற்றைய 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 248 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன்னும், தென்ஆப்பிரிக்கா 183 ரன்களும் அடித்திருந்ததால் தென்ஆப்பிரிக்காவுக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
466 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய வான் டர் துஸ்சென் சிறப்பாக விளையாடினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 274 ரன்னில் ஆல்அவுட். இதனால் 4-வது டெஸ்டை 191 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நிக் கிர்கியோஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரபேல் நடால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் கிர்கியோஸ்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை நடால் 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் நிக் கிர்கியோஸ் 6-3 எனக் கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் செட் டை-பிரேக் வரை சென்றது.
இறுதியில் நடால் 7(8)-6(6), 7(7)-6(4) என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய நடால், தியேம்-ஐ எதிர்கொள்கிறார்.

பிக் பாஷ் டி20 லீக்கில் கிறிஸ் லின் மற்றும் டி வில்லியர்ஸ் விளையாடிய பிரிஸ்பேன் ஹீட் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட்டில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் பிரிஸ்பேன் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நோக்கத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி களம் இறங்கியது. அதேவேளையில் வெற்றித்தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நிலையில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் களம் இறங்கியது.
டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பேட்டிங்கை தேர்வு செய்தது. கிறிஸ் லின் 14 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் வந்த ரென்ஷா 65 ரன்கள் சேர்க்க பிரிஸ்பேன் ஹீட் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோன் பிஞ்ச் 63 ரன்களும், முகமது நபி ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் அடிக்க ரெனேகட்ஸ் 19.2 ஓவரில் 155 ரன்னை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பிரிஸ்பேன் 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்வி மூலம் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது.
மற்றொரு ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் விளாசி அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை - இமாச்சல அணிகள் மோதும் ஆட்டம் தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இமாச்சல பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை 16 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் சர்பராஸ் கான் களம் இறங்கினார். நான்கு நாட்கள் கொண்ட முதல்-தர கிரிக்கெட் என்று பார்க்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒருநாள் கிரிக்கெட் போன்று ஆடினர். இதனால் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை 75 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் குவித்துள்ளது. சர்பராஸ் கான் 213 பந்தில் 32 பவுண்டரி, 4 சிக்சருடன் 226 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற உத்தர பிரதேசம் அணிக்கெதிரான ஆட்டத்தில் முச்சதம் (301 அவுட் இல்லை) விளாசி அணியை முன்னிலை பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியின்போது இரட்டை சதத்தை முச்சதமாக மாற்றினால், அடுத்தடுத்த இன்னிங்சில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
வங்காளதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கனத்த மழையால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லரை தகாத வார்த்தைகளால் திட்டிய பிலாண்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
ஜோஸ் பட்லரை அவுட்டாக்கும்போது பிலாண்டர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அவருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி ஆட்டத்தில் அபராதத்துடன் வெளியேறுகிறார் பிலாண்டர்.
இந்தத் தொடரில் ஏற்கனவே பிலாண்டரை ஜோஸ் பட்லர் திட்டியிருந்தார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பென் ஸ்டோக்ஸ், ரபடா ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய என்னை, இந்தியாவை சேர்ந்தவர்கள் இன்னும் மன்னிக்கவில்லை என்று மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்ப்பார்கள். சச்சின், மெக்ராத் காலத்தில் மெக்ராத் பந்து வீச்சை சச்சின் எப்படி எதிர்கொள்கிறார், சச்சினை மெக்ராத் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதே போட்டியாக திகழும்.
பெரும்பாலான நேரத்தில் மெக்ராத் பந்து வீச்சை சச்சின் தெண்டுல்கர் துவம்சம் செய்திருக்கிறார். அதேபோல் சச்சினையும் மெக்ராத் கட்டுபடித்தியுள்ளார்.

இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘எனக்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் இடையில் சிறப்பாக கிரிக்கெட் சண்டை நடைபெற்றுள்ளது. தற்போது நான் இந்தியாவில் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன். இந்தியா எனக்கு 2-வது சொந்த வீடு மாதிரி. இங்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். ஆனால், 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கியதற்காக இங்குள்ளவர்கள் நாங்கள் இன்னும் உங்களை மன்னிக்கவில்லை என்கிறார்கள்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்ராத் வீழ்த்தியிருப்பார்.

இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘எனக்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் இடையில் சிறப்பாக கிரிக்கெட் சண்டை நடைபெற்றுள்ளது. தற்போது நான் இந்தியாவில் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன். இந்தியா எனக்கு 2-வது சொந்த வீடு மாதிரி. இங்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். ஆனால், 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கியதற்காக இங்குள்ளவர்கள் நாங்கள் இன்னும் உங்களை மன்னிக்கவில்லை என்கிறார்கள்’’ என்றார்.
டி20 கிரிக்கெட்டில் லோகேஷ் ராகுலால் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரிஷப் பண்ட் மீண்டும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் மாற்றப்பட்டார். தொடர்ந்து அவர் சிறப்பாக பணியாற்றி வருவதால் ரிஷப் பண்ட்-க்குப் பதிலாக லோகேஷ் ராகுல்தான் நியூசிலாந்து தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
ஆனால், ரிஷப் பண்ட் விரைவில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் இளம் வீரர். அவருக்கு அதிக அளவில் திறமை உள்ளது. அவருடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். எல்லோரும் நினைப்பதை விரைவில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்’’ என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 466 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 400 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காத இங்கிலாந்து 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ஜோ ரூட் (58 ரன்), டாம் சிப்லி (44 ரன்), சாம் கர்ரன் (35 ரன்), பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்னில் வீழ்ந்தனர்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென்ஆப்பிரிக்க அறிமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் எட்டிப்பிடிக்காத இலக்கை நோக்கி அந்த அணி இன்று 4-வது நாளில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 310 ரன்களுக்கு மேலான இலக்கை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கே, இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியை சந்தித்த இந்தியா ஏ, தொடரையும் 1-2 என இழந்தது.
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது.
மார்க் சாப்மன் (110 ரன், 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணியில் பிரித்வி ஷா (55 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (44 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் மிடில் வரிசையில் சொதப்பினர். இருப்பினும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் நிலைத்து நின்று அணியை கரைசேர்க்க போராடினார்.
கடைசி 11 பந்துகளில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தன. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய ஏ அணி 49.4 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இஷான் கிஷன் 71 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து ஏ அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.