என் மலர்

  செய்திகள்

  ரபேல் நடால், நிக் கிர்கியோஸ்
  X
  ரபேல் நடால், நிக் கிர்கியோஸ்

  ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நிக் கிர்கியோஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.
  ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரபேல் நடால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் கிர்கியோஸ்-ஐ எதிர்கொண்டார்.

  முதல் செட்டை நடால் 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் நிக் கிர்கியோஸ் 6-3 எனக் கைப்பற்றினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றிய நிலையில் 3-வது மற்றும் செட் டை-பிரேக் வரை சென்றது.

  இறுதியில் நடால் 7(8)-6(6), 7(7)-6(4) என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய நடால், தியேம்-ஐ எதிர்கொள்கிறார்.
  Next Story
  ×