என் மலர்

  செய்திகள்

  ரென்ஷா
  X
  ரென்ஷா

  பிக் பாஷ் டி20 லீக்: பிளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது கிறிஸ் லின், டி வில்லியர்ஸ் அணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக் பாஷ் டி20 லீக்கில் கிறிஸ் லின் மற்றும் டி வில்லியர்ஸ் விளையாடிய பிரிஸ்பேன் ஹீட் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
  பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட்டில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

  இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் பிரிஸ்பேன் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நோக்கத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி களம் இறங்கியது. அதேவேளையில் வெற்றித்தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நிலையில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் களம் இறங்கியது.

  டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பேட்டிங்கை தேர்வு செய்தது.  கிறிஸ் லின் 14 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் வந்த ரென்ஷா 65 ரன்கள் சேர்க்க பிரிஸ்பேன் ஹீட்  7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது.

  பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோன் பிஞ்ச் 63 ரன்களும், முகமது நபி ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் அடிக்க ரெனேகட்ஸ் 19.2 ஓவரில் 155 ரன்னை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பிரிஸ்பேன் 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்வி மூலம் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது.

  மற்றொரு ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
  Next Story
  ×