என் மலர்
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறாத நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்று விளையாடியது. அப்போது நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
டிரென்ட் போல்ட் மற்றும் ஹென்றி ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்திருந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற நியூசிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை தொடரை வென்றது கிடையாது.

வங்காளதேச அணிக்கெதிராக 323 ரன் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 318 ரன் சேர்த்து நான்கு ரன்னில் வெற்றியை நழுவ விட்டது.
வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 158 ரன்கள் விளாச வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்களும், மெஹ்முதுல்லா 41 ரன்களும், முகமது மிதுன் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 41 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 54 பந்தில் 110 ரன்கள் தேவைப்பட்டது. திரிபானோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வேயின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இதனால் வங்காளதேசம் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஷபியுல் வீசிய 49-வது ஓவரில் முட்டோம்போட்சி இரண்டு பவுண்டரிகள் அடிக்க 14 ரன்கள் சேர்த்தது ஜிம்பாப்வே.
இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அலி-அமின் ஹொசைன் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபானோ ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப்பதிலாக வீசப்பட்ட பந்தில் முட்டோம்போட்சி ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் ஐந்து பவுண்டரியுடன் 34 ரன்கள் சேர்த்தார்.
கடைசி நான்கு பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் திரிபானோ. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி இரண்டு பந்தில் 6 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் ஐந்தாவது பந்தில் திரிபானோ ரன்அடிக்கவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன்னே அடித்தார் திரிபானே. இதனால் ஜிம்பாப்வே நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. திரிபானே 28 பந்தில் 2 பவுண்டரி, ஐந்து சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.
இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20 கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா ரிலையன்ஸ்-1 அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று ரிலையன்ஸ்-1 அணி சிஏஜி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்தில் 105 ரன்கள் அடிக்க ரிலையன்ஸ்-1 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவிததது. 105 ரன்னில் 10 சிக்ஸ் மற்றும் எட்டு பவுண்டரிகள் அடங்கும்.
இந்த அதிரடி மூலம் உடற்தகுதி பெற்று மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறேன் என்பதை தேர்வு குழுவுக்கு சூசகமாக தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷபாலி வர்மா தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் 16 வயதே ஆன இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 15 பந்தில் 29 ரன்கள் விளாசினார். வங்காளதேசம் அணிக்கெதிராக 17 பந்தில் 39 ரன்கள் குவித்தார். நியூசிலாந்துக்கு எதிராக 34 பந்தில் 46 ரன்களும், இலங்கைக்கு எதிராக 34 பந்தில் 47 ரன்களும் விளாசினார்.
இதனால் 19 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுஜி பேட்ஸ் 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். பெத் மூனே 3-வது இடத்திலும், ஷோபி டெவைன் 4-வது இடத்திலும், மெக் லானிங் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரண்டு இடங்கள் சரிந்து 6-வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் சரிந்து 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருக்கான போட்டியில் ஐந்து பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்துள்ளது கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய மதன்லால், ஆர்.பி.சிங், சுலக்ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டியினர் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரை இறுதி செய்துள்ளனர். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர் சிங் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இவர்களிடம் மும்பையில் இன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது. முன்னாள் ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரும் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இறுதி செய்யப்பட்ட பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அடுத்த தேர்வு குழு உறுப்பினர்கள் பதவி நிறைவடையும்போது அகர்கரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையை பாதியாக குறைத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
8 அணிகளுக்கு இடையான போட்டியில் தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் மே மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2020) ஐ.பி.எல். பரிசுத்தொகையில் பிசிசிஐ அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் பெறும் அணி உள்பட தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அறிவித்துள்ள புதிய பரிசுத்தொகை விவரத்தின் படி 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோல் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.375 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது.
துபாய்:
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது நாளிலேயே பணிந்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததோடு தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி எதிரொலியாக 4 புள்ளிகளை இழந்துள்ள இந்தியா 116 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கிறது.
தொடருக்கு முன்பாக 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்திய தொடரை வென்றதன் மூலம் 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 110 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் ஆஸ்திரேலியா (108 புள்ளி) 3-வது இடத்துக்கும், இங்கிலாந்து (105 புள்ளி) 4-வது இடத்துக்கும் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா (98 புள்ளி) 5-வது இடத்திலும், இலங்கை (91 புள்ளி) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (85 புள்ளி) 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடத்திலும் (81 புள்ளி) உள்ளன.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) ‘நம்பர் ஒன்’ அரியணையில் நீடிக்கிறார். கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 3, 14 ரன் மட்டுமே எடுத்து சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலியின் புள்ளி எண்ணிக்கை 900-க்கும் கீழ் சரிந்துள்ளது. 20 புள்ளிகளை தாரை வார்த்துள்ள அவர் 886 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்கத்தில் (3, 5 ரன்) வீழ்ந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மொத்தம் 40 புள்ளிகளை இழந்துள்ள அவர் தற்போது 813 புள்ளிகளுடன் இருக்கிறார். அந்த டெஸ்டில் முதலாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த இந்திய வீரர் புஜாரா 2 இடம் அதிகரித்து 7-வது இடத்தை எட்டியுள்ளார். அதே சமயம் ரஹானே (9-வது இடம்), மயங்க் அகர்வால் (11-வது இடம்) தலா ஒரு இடம் சறுக்கினர். அரைசதம் அடித்த இந்திய இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா 17 இடங்கள் எகிறி 76-வது இடத்தை பெற்றிருக்கிறார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னெர் (நியூசிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 2 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். இதே டெஸ்டில் இரு இன்னிங்சையும் சே
5 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் டாப்-10 இடத்துக்குள் நுழைந்தார். அவர் 4 இடம் அதிகரித்து 7-வது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் 80-ல் இருந்து 43-வது இடத்துக்கு வந்துள்ளார்.
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது நாளிலேயே பணிந்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததோடு தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி எதிரொலியாக 4 புள்ளிகளை இழந்துள்ள இந்தியா 116 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கிறது.
தொடருக்கு முன்பாக 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்திய தொடரை வென்றதன் மூலம் 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 110 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் ஆஸ்திரேலியா (108 புள்ளி) 3-வது இடத்துக்கும், இங்கிலாந்து (105 புள்ளி) 4-வது இடத்துக்கும் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா (98 புள்ளி) 5-வது இடத்திலும், இலங்கை (91 புள்ளி) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (85 புள்ளி) 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடத்திலும் (81 புள்ளி) உள்ளன.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) ‘நம்பர் ஒன்’ அரியணையில் நீடிக்கிறார். கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 3, 14 ரன் மட்டுமே எடுத்து சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலியின் புள்ளி எண்ணிக்கை 900-க்கும் கீழ் சரிந்துள்ளது. 20 புள்ளிகளை தாரை வார்த்துள்ள அவர் 886 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னெர் (நியூசிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 2 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். இதே டெஸ்டில் இரு இன்னிங்சையும் சே
5 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் டாப்-10 இடத்துக்குள் நுழைந்தார். அவர் 4 இடம் அதிகரித்து 7-வது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் 80-ல் இருந்து 43-வது இடத்துக்கு வந்துள்ளார்.
ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில் சோலங்கி மற்றும் ஆஷிஷ் குமார் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் சோலங்கி (57) முதல் சுற்றில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த அகைல்பெக் எசன்பெக்கை எதிர்கொண்டார். இதில் 5-0 என சோலங்கி வெற்றி பெற்றார். இவர் 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த மிராசிஸ்பெக்கை எதிர்கொள்கிறார்.
75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார் சீன தைபேயின் கான் சியா-வெய்-ஐ எதிர்கொண்டார். இதில் ஆஷிஷ் குமார் 5-0 என வெற்றி பெற்றார். ஆஷிஷ் குமார் 2-வது சுற்றில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த ஒமுர்பெக்கை எதிர்கொள்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்க முடியும் என ஜப்பான் மந்திரி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பரவி வருகிறது.
ஜப்பானில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. மே மாதத்திற்குள் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டி நடைபெறாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.
இதனால் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஜப்பானில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் ஒலிம்பிக் தொடரை ஒத்திவைக்க முடியும் என்று ஒலிம்பிக் போட்டிக்கான ஜப்பான் மந்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் மந்திரி செய்கோ ஹஷிமோட்டோ கூறுகையில் ‘‘போட்டியை நடத்தும் நாட்டின் ஒப்பந்தத்தின்படி 2020-க்குள் போட்டி நடத்த முடியாவிட்டால் மட்டுமே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் போட்டியை ரத்து செய்ய முடியும்.
ஆனால், ஒலிம்பிக் போட்டியை 2020 நடத்த முடியும். இதனால் எங்களால் போட்டியை ஒத்திவைக்க முடியும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ மாநகராட்சி இணைந்து ஜூலை 14-ந்தேதி போட்டியை தொடங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது’’ என்றார்.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சரியான நபராக இருப்பார் என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டது. இதனால் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. கேப்டனாக பொறுப்பேற்க இரண்டு வருடம் தடைவிதிக்கப்பட்டது.
இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக உள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பேட் கம்மின்ஸ்தான் கேப்டனுக்கு சரியான நபர் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘கம்மின்ஸ் போட்டியை சிறப்பான வகையில் அறிந்து கொள்கிறார். அவர் தொடக்க பந்து வீச்சாளர், ஆனாலும் அவரால் பேட்டிங்கும் செய்ய இயலும். பீல்டிங்கில் தலைசிறந்தவர். கேப்டனுக்கு என்ன தேவையோ? அதை அவர் போட்டியில் காண்கிறார்.
மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டால் விரும்புவேன். பந்து வீச்சாளரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஏராளமான பேச்சுகள் நடக்கின்றன. ஏனென்றால் பொதுவாக பந்து வீச்சாளர்கள் காயம் அடைவார்கள். ஆனால் சிறந்த உடற்தகுதியுடன் இருப்பதை பேட் கம்மின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடியும்.
ஆஸ்திரேலியாவில் சிறந்த வீரர் கேப்டனாக வேண்டும் என்பது நடைமுறை. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவிக்கு அவர் சரியான நபராக இருப்பார் என நினைப்பது அவசியமில்லை’’ என்றார்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி அரையிறுதியில் குஜாராத் அணியின் வெற்றிக்கு 327 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சவுராஷ்டிரா.
ரஞ்சி டிராபியின் முதல் அரையிறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. சவுராஷ்டிரா அணிக்கெதிராக குஜராத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சவுராஷ்டிரா ஷெல்டன் ஜாக்சனின் (103) சதத்தால் முதல் இன்னிங்சில் 304 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ருஜுல் பாட் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். சவுராஷ்டிரா அணியின் உனத்கட் 3 விக்கெட்டும் சகாரியா, ஜானி மற்றும் ஜடேஜா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
52 ரன்கள் முன்னிலையுடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் விளையாடியது. இந்த இன்னிங்சில் சவுரடிஷ்டிரா அணி விரைவாக ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. 15 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சகாரியா, வாசவதா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. சகாரியா 32 ரன்களுடனும், வாசவதா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. சகாரியா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜானி களம் இறங்கினார். வாசவதா - ஜானி ஜோடி சிறப்பாக விளையாடியது. ஜானி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாசவதா சிறப்பாக விளையாடி 139 ரன்கள் குவித்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் குஜராத் அணிக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பன்சால் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். குஜராத் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நாளை குஜராத் அணி 320 ரன்களை எட்டினால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணி என்ற வகையில் சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சு குழுவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடி வருகிறது.
இதில் இஷாந்த் சர்மாவுக்கு 32 வயதும், உமேஷ் யாதவுக்கு 33 வயதும், முகமது ஷமிக்கு 29 வயதும், புவனேஷ்வர் குமாருக்கு 30 வயதும் ஆகிறது. பும்ராவுக்கு 26 வயதாகிறது.
இந்த ஐந்து பந்து வீச்சாளர்களில் நான்கு பேரை வெளிநாட்டு தொடருக்கு இந்திய அணி அழைத்துச் செல்லும். ஆனால் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டால் சிக்கலாகி விடும். இங்கிலாந்து தொடரின்போது புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரால் விளையாட முடியவில்லை.
தற்போது முடிந்த நியூசிலாந்து தொடருக்கு புவனேஷ்வர் குமார் தயாராகவில்லை. நன்றாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் அவர் இருந்திருந்தால் போட்டி நிச்சயமாக மாறியிருக்கும். முதல் போட்டியில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசினார்.
ஆனால் 2-வது டெஸ்டுக்கு முந்தைய நாள் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்விங் ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் மன்னர்களான முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவால் புதுப்பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
தற்போது அவர்களுக்கு வயதாகி கொண்டே வருவதால் வேகப்பந்து வீச்சு யுனிட்டில் சிறு மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போது விளையாடி வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் இளம் வயதை கொண்டிருக்கவில்லை. ஆகவே இதை கவனமாகவும், விழிப்புடனும் கையாள வேண்டும். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்து அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் களத்தில் விளையாட வைக்க தயாராக இருக்க வேண்டும்.
அடுத்த மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியம். சில வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
கிரிக்கெட்டில் மாற்றம் என்பது நடைபெறும் நிகழ்வுதான். அந்த சிறிய மாற்றங்கள் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கும். அதைப்பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். தனிப்பட்ட முறையில் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கையை நசுக்க முடியாது. அவர்கள் சிறப்பாக விளையாடும்போது, மாற்று வீரர்கள் தேவையில்லை. இந்த மாற்றங்கள் நடக்கும் என்பது எங்கள் அணியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நவ்தீப் சைனி எங்களது திட்டத்தில் உள்ளார். இன்னும் இரண்டு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மீது பார்வை உள்ளது. அவர்ளின் விளையாட்டு தரம் சர்வதேச அளவில் மிகவும் உயர்வாக இருக்க வேண்டும். அதை கவனமாக கையாள்வது அவசியம்’’ என்றார்.