என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிட்னியில் மழை பெய்ததால் விளையாடாமலேயே வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் கடும் வேதனை அடைந்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

    இன்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது.

    முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் முதல் இடம் பிடித்த இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மழை பெய்யும் என்பதால் ரிசர்வ் டே தேவை எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை மறுத்துவிட்டது.

    இந்நிலையில் விளையாடாமலேயே வெளியேறியதால் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் மனமுடைந்துள்ளனர். இந்நிலையில் எங்கள் நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹீதர் நைட் கூறுகையில் ‘‘விதி அப்படி இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளனர். முக்கியமான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு விட்டது. வருங்காலத்தில் விதிமுறைகள் மாற்றப்படும் என்று நம்புகிறோம். அதை நோக்கி நகர வேண்டும். மற்ற அணிகளுக்கு இதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள தற்போ எங்களுக்கு கடினமாக உள்ளது’’ என்றார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் மோர்தசா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மோர்தசா. இவரது தலைமையில் வங்காளதேசம் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. இவரது தலைமையில் வங்காளதேசம் 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49-ல் வெற்றி பெற்றுள்ளது.

    சமீப காலமாக இவருக்கும் வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் இவரது கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.

    தற்போது ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது.

    நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மோர்தசா அறிவித்துள்ளார். நாளை ஜிம்பாப்வேவுக்கு எதிராக மோர்தசா கேப்டனாக கடைசி போட்டியில் விளையாடுகிறார். இதில் வெற்றி பெற்றால் 50 வெற்றிகளை ருசித்த வங்காளதேசம் கேப்டன் என்ற சாதனையை பெறுவார்.

    2010-ம் ஆண்டு முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோர்தசா, ஏழு போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் மூன்றில் வெற்றி பெற்றார். பிரிஸ்டோலில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியும் அதில் ஒன்று.

    அதன்பின் 2014-ல் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோர்தசா தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டதால், அணி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    8 அணிகள் இடையிலான 13-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது. இதையொட்டி பல வீரர்கள் இப்போதே பயிற்சியை தொடங்கி விட்டனர்.

    இந்த சீசனில் ஐபிஎல் போட்டிக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென பாதியாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு வாகை சூடிய அணிக்கு பரிசுக்கோப்பையுடன் ரூ.20 கோடி வழங்கப்பட்டது. 50 சதவீதம் குறைவு காரணமாக இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி மட்டுமே கிடைக்கும். இதே போல் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை ரூ.12.5 கோடியில் இருந்து ரூ.6.25 கோடியாக குறைகிறது.

    தலா ரூ.8.75 கோடியை பரிசுத்தொகையாக பெற்ற 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் இந்த ஆண்டு தலா ரூ.4 கோடியே 37 லட்சத்தை பெறுவார்கள்.

    உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் உதயமான பிறகு எடுத்த, முதல் மிகப்பெரிய சிக்கன நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. முந்தைய ஆண்டை போன்றே இந்த முறையும் ஐபிஎல் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது. மேலும் செலவினத்தை குறைக்கும் வகையில் 8 மணி நேரத்திற்குள்ளாக பயணிக்கக்கூடிய வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்காக (இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற தொடர்கள்) இந்திய கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் விமானத்தில் செல்லும்போது இனி சொகுசு வகுப்பு பிரிவை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே சமயம் ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்தை நடத்துவதற்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சம்பந்தப்பட்ட அணியின் உரிமையாளர்கள் ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்று இருந்ததை ரூ.50 லட்சமாக கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது.

    மைதானத்தை பயன்படுத்தும் ஒப்பந்தப்படி கிரிக்கெட் வாரியமும் தனது பங்களிப்பாக ரூ.50 லட்சத்தை வழங்கும். ஆக, ஒவ்வொரு ஆட்டத்தை மிகச்சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் ரூ.1 கோடியை பெற உள்ளன.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு அணிகளும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளன. ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே பரிசுத்தொகையை குறைத்துள்ளோம்’’ என்றனர்.

    வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கும் பரிசுத்தொகையில் பாதித் தொகை அணியின் உரிமையாளருக்கும், மீதம் வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்கன நடவடிக்கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் 8 அணிகளின் உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. எதிர்பாராத பரிசுத்தொகை குறைப்பால் அணிகளின் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இத குறித்து தென்இந்தியாவைச் சேர்ந்த ஐபிஎல் அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பிளே-ஆப் சுற்றுக்கான பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதுகுறித்து எங்களிடம் விவாதிக்கக்கூட இல்லை. இந்த விவகாரம் குறித்து அணிகளின் உரிமையாளர்கள் விரைவில் கலந்து ஆலோசிக்க இருக்கிறோம்’’ என்றார்.
    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பொல்லார்ட்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் 20 ஓவர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 500-வது ஆட்டத்தில் விளையாடி சாதனை படைத்தார். உள்ளூர், லீக் மற்றும் சர்வதேசம் உள்பட அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளிலும் 500 ஆட்டத்தில் விளையாடிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    இந்த ஆட்டத்தில் பொல்லார்ட் 15 பந்தில் 34 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். 500 ஆட்டத்தில் 450 இன்னிங்சில் விளையாடி 10 ஆயிரம் ரன் குவித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் எடுத்துள்ளார். ஒரு சதம், 49 அரைசதம் அடித்துள்ளார்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார். கிறிஸ் கெய்ல் 404 ஆட்டத்தில் விளையாடி 13,296 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    மெக்கல்லம் (நியூசிலாந்து) 9,922 ரன்னுடன் 3-வது இடத்திலும், சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) 9,746 ரன்னுடன் 4-வது இடத்திலும், வார்னர் (ஆஸ்திரேலியா) 9,218 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
    ஜேன்மேன் மாலன் சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.
    தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பகல் இரவாக ஆட்டமாக நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 271 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், டி'ஆர்கி ஷார்ட் தலா 69 ரன்னும், மிட்சேல் மார்ஷ் 36 ரன்னும், வார்னர் 35 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 58 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். நோட்ஜே 2 விக்கெட்டும் ‌ஷம்சி, பெலுக்வாயோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    புதுமுக வீரர் ஜேன்மேன் மாலன் அபாரமாக விளையாடி தனது 2-வது போட்டியில் சதம் அடித்தார். அவர் 139 பந்துகளில் 129 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். கிளாசன் 51 ரன்னும், மில்லர் 37 ரன்னும் எடுத்தனர். ஆடம் ஜம்பா 2 விக்கெட் டும் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றியால் தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் ஆட்டத்தில் 74 ரன்னில் வென்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஒரு ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

    20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
    சிட்னி:

    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற்றுவருகிறது. 

    அதன் படி  ‘ஏ’ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு 'பி’ பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கும் இடையே இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெறுவதாக இருந்தது.

    சோகத்தில் இங்கிலாந்து வீராங்கணை

    ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற இருந்த அரையிறுதி போட்டி மழை குறுக்கீட்டால் டாஸ் கூட சுண்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    அரையிறுதி போட்டி கைவிடப்பட்டதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் பட்டியலில் 'ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.  
    நல்ல கிரிக்கெட் வீரராக கடினமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்களில் என்னை மேம்படுத்தி கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது என்று டோனி கூறினார்.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘நல்ல மனிதராக, நல்ல கிரிக்கெட் வீரராக கடினமான சூழ்நிலையை களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படி சமாளிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்களில் என்னை மேம்படுத்தி கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது.

    நன்றாக விளையாடும்போது எப்படி தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் என்னை ‘தல’ என்று தான் அழைக்கிறார்கள். அதனை நான் சிறப்பானதாக உணருகிறேன். ‘தல’ என்றால் சகோதரன் என்று அர்த்தம். அவர்கள் அவ்வாறு அழைக்கும்போது என் மீது வைத்து இருக்கும் அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் பிரதிபலிப்பதாக உணருகிறேன்.

    நான் சென்னையில் இருந்தாலும் சரி அல்லது மற்ற தென்இந்திய பகுதிகளுக்கு சென்றாலும் சரி அவர்கள் என் பெயரை சொல்லி அழைப்பது கிடையாது. ‘தல’ என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த மாதிரி அழைப்பவர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள்’ என்று தெரிவித்தார்.

    ஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் அனைத்து வீரர்களையும் விரும்பும் அணிகள் மற்ற அணிகளில் இருந்து கடனுக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உற்சாகத்தை கூட்டுவதற்காக பிசிசிஐ புதுபுது யுக்திகளை கையாண்டு வருகிறது. கால்பந்து லீக்கில் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை கடனுக்கு வாங்கலாம் அல்லது கொடுக்கலாம். இதனால் விளையாடாமல் இருக்கும் வீரர்கள் பயனடைவர்கள்.

    இதுபோன்ற நடைமுறையை கடந்த முறை ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை மட்டுமே இப்படி கடனில் வாங்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் எந்த அணியும் கடன் மூலம் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில் இந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மற்றும் விளையாடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களையும் கடனுக்கு வாங்க ஒவ்வொரு அணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை 28 லீக் ஆட்டங்கள் முடிந்த பின் அல்லது ஒவ்வொரு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடிய பின்னர்  தொடங்கும். கடனில் வாங்கும் வீரர் இரண்டு போட்டிகளுக்கு மேல் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்திருக்கக் கூடாது.
    ஜோர்டானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சவுத்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நேற்று தொடங்கியது.

    பெண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சவுத்ரி தாய்லாந்தை சேர்ந்த நிலாவன் டெச்சாசுயெப்பை எதிர்கொண்டார். 19 வயதே ஆன சாக்‌ஷி சவுத்ரி ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நிலாவன் டெச்சாசுயெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    சாக்‌ஷி சவுத்ரி இரண்டு முறை இளையோர் உலககோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  காலிறுதியில் சாக்‌ஷி சவுத்ரி கொரியாவைச் சேர்ந்த இம் ஏஜியை எதிர்கொள்கிறார். இந்த போட்டி 9-ந்தேதி நடக்கிறது.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லுங்கி நிகிடி.
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ப்ளோயம்போன்டீனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி வார்னர், ஸ்மித், லபுஸ்சேன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த மூன்று விக்கெட்டுகள் மூலம் 26 ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதன்மூலம் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் லாங்வாப்போ 27 போட்டிகளிலும், இம்ரான் தாஹிர் 28 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
    பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவிக்கு சுனில் ஜோஷி பெயரை பரிந்துரை செய்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய மதன்லால், ஆர்.பி. சிங், சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த கமிட்டியினர் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர் சிங் ஆகிய ஐந்து பேரை இறுதி செய்தனர்.

    இவர்களிடம் மும்பையில் இன்று நேர்காணல் நடத்தினர். நேர்காணல் முடிந்த பின்னர் சுனில் ஜோஷியை தேர்வு குழு தலைவர் பதவிக்கும், ஹர்விந்தர் சிங்கை உறுப்பினர் பதவிக்கும் பரிந்துரை செய்துள்ளது.

    ஏறக்குறைய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவலை அறிவிக்கும். அதன்பின் சுனில் ஜோஷி தலைமையிலான குழு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியை தேர்வு செய்யும்.

    49 வயதாகும் சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 41 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 69 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ரன்கள் விட்டு கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது இவரின் சிறப்பான பந்து வீச்சாகும்.
    ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி ரஞ்சி டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறியது சவுராஸ்டிரா.
    ரஞ்சி டிராபியின் முதல் அரையிறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. சவுராஷ்டிரா அணிக்கெதிராக குஜராத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சவுராஷ்டிரா ஷெல்டன் ஜாக்சனின் (103) சதத்தால் முதல் இன்னிங்சில் 304 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ருஜுல் பாட் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். சவுராஷ்டிரா அணியின் உனத்கட் 3 விக்கெட்டும் சகாரியா, ஜானி மற்றும் ஜடேஜா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    52 ரன்கள் முன்னிலையுடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் விளையாடியது. வாசவதா சிறப்பாக விளையாடி 139 ரன்கள் விளாச, சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் குஜராத் அணிக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பன்சால் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் குஜராத் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்திருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. உனத்கட் அபாரமாக பந்து வீச குஜராத் 63 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் பார்தீவ் பட்டேல் உடன் சிராக் காந்தி ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. சவுராஷ்டிரா பந்து வீச்சாளர்கள் இந்த ஜோடி வீழ்த்த திணறினர். இருவரும் சதத்தை நோக்கி சென்றனர். அதேவேளையில் வெற்றியை நோக்கியும் குஜராத் நடைபோட்டது.

    இறுதியாக அணியின் ஸ்கோர் 221 ரன்னாக இருக்கும்போது பட்டேல் 93 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அத்துடன் குஜராத் அணி தோல்வியை நோக்கி சரிந்தது. காந்தி 96 ரன்னில் வெளியேறினார். இதனால் குஜராத் 234 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உனத்கட் ஏழு விக்கெட் வீழ்த்த குஜராத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்டிரா இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    ×